இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 09, 2018

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும்.

அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும். அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது.

மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

Tuesday, March 06, 2018

13ம் தேதி தேசிய செயற்குழு கூட்டம் தமிழக ஆசிரியர்கள் டெல்லி பயணம்


டெல்லியில் வரும் 13ம் தேதி நடக்கும் ஆசிரியர்களுக்கான தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 8 ஆசிரியர் சங்கங்கள் செல்கின்றன. இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய அளவிலான செயற்குழு கூட்டம் 13ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

அதில், 7வது தேசிய மாநாடு தயாரிப்புக் கூட்டம், தேசிய அளவிலான ஆசிரியர்களின் பிரச்னை, அவற்றை தீர்ப்பதற்கு வேண்டிய இயக்க செயல்பாடுகள், 2018-19ம் ஆண்டுக் கான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்க உள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம், தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் டெல்லியில் நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'


பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, March 03, 2018

TNPTF மாநில தேர்தல்

☀【T】【N】【P】【T】【F】☀

〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*நாளை புதுகையில் 12-வது மாநிலத் தேர்தல்*

https://tnptfvizhudhugal.blogspot.in/2018/03/12.html?m=1

*உரிமையது பறிபோனால் குரலெழுப்பத்  தயங்காதே!*

*உரியதை மீட்கும்வரை கரமுயர்த்த மறவாதே!*

என்று ஆசிரிய இயக்க வரலாற்றில் தனிப்பெரும் உரிமை மீட்புப் போராளிப் பாசறையாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது,

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*

*☀மாஸ்டர்.வா.ராமுண்ணி*யின் வழியில், சமரசமற்ற போராளிகளால் உதித்தபோதே போராட்டக் களத்தில் குதித்திட்ட பேரியக்கத்தின் இயக்கமானது,

☀அன்றிலிருந்து இன்று வரை ஆசிரியர் நலன் - மாணவர் நலன் - சமூக நலன் சார்ந்த உரிமைகளை மீட்டெடுக்கும் களத்தில் அதிகார மமதைகளை உடைத்தெறிந்து, ஆணவச் செருக்குகளைத் தகர்த்தெறிந்து, தேவையெனில் கூட்டியக்கங்களையும் கட்டமைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தே வந்துள்ளது.

*☀இயங்கும் இயக்கத்தின் தனிப்பெரும் இயக்குவிசை என்பது உறுப்பினர்களின் உணர்வு வேட்கையை அடிப்படையாகக் கொண்டதே.*

☀ஆம்! *வரலாறு என்றும் தனியொருவனுக்கு உரியதல்ல!*

☀தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாறும் அத்தகைய சீர்மை மிகுந்ததே!

☀அச்சீர்மையைக் குலையவிடாது கொண்டு சென்றுகொண்டிருக்கும் தலையாயப் பொறுப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாக பணியமர்த்தப்படும் பொறுப்பாளர்களுக்கு உண்டு.

☀பணிக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாவோர், பணியில் உள்ள வீர வேங்கைகளேயாம்!

☀'தானைத் தலைவன்!', 'அழியும் வரை அரசன்!', 'நானே ராஜா! நானே மந்திரி!' என்பன போன்ற ஏகாதிபத்திய ஏகத்தலைமைத்துவம் ஏதுமின்றியே, இங்கு தலைமைப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

☀இத்தகைய இலக்கணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் தான் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* என்பது அன்றிலிருந்து இன்றுவரை தலைமையால் அடையாளப்படுத்தப்படாது *TNPTF* என்று தனக்குத் தான் மட்டுமே அடையாளமென இயங்கிக் கொண்டிருக்கிறது.

_⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய உரிமைப் பறிப்பு!_

_⚡ஓய்வூதிய உரிமைப் பறிப்பு!_

_⚡பொதுக் கல்விக்கான மாநிலப் பொறுப்புத் துறப்பு!_

_⚡கல்வியை வணிகமாக்கி காவி நிறமேற்றும் வஞ்சகக் கொதிப்பு!_

உள்ளிட்ட இன்னல்கள் சூழ்ந்துள்ள காலகட்டத்தில்,

☀இயக்க உறுப்பினர்களை வலுவூட்டி, இயக்கத்தின் இயக்கத்தை மெருகேற்றி, பறித்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் உரிமைகளைப் பறிக்கவிடாது காக்கவும் வல்ல அடுத்த கட்ட தொடர் இயக்கத்திற்கான தலைமைப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தல்கள் வட்டார - நகர - மாவட்டக் கிளைகளைத் தொடர்ந்து உச்ச நிலையான மாநிலத் தேர்தலை எட்டியுள்ளது.

☀ஆம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான தலைமைப் பொறுப்புகளை உடனேற்று தன் இயக்கப் பயணத்தைத் தொடரவுள்ள போராளிகளின் உறுதியேற்பு முழக்கம் கேட்க நாளைய விடியலும் காத்துக்கிடக்கிறது.

*🔰02.08.84 : (சென்னை)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா

*🔰24.05.87 : (திருவாரூர்)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா

*🔰06.10.1990 : (மதுரை)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி

*🔰28.05.1993 : (அவிநாசி)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி

*🔰06.10.1996 : (திண்டுக்கல்)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - நா.நாகப்பன்

*🔰28.11.1999 : (மதுரை)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - ந.பர்வதராஜன்

*🔰12.10.2002 : (கன்னியாகுமரி)*
சா.தோ.அந்தோணிசாமி - ந.பர்வதராஜன் - கோ.முரளீதரன்

*🔰03.12.2005 : (திருப்பத்தூர்)*
கோ.முரளீதரன் - ந.பர்வதராஜன் - தி.கண்ணன்

*🔰25.01.2009 : (கரூர்)*
தி.கண்ணன் - செ.போத்திலிங்கம் - ச.மோசஸ்

*🔰11.03.2012 : (திண்டுக்கல்)*
தி.கண்ணன் - முருக.செல்வராஜன் - ச.மோசஸ்

*🔰18.01.2015 : (திருப்பூர்)*
ச.மோசஸ் - செ.பாலசந்தர் - ச.ஜீவானந்தம்

☀போன்ற தலைமைப் போர்த்தளபதிகளின் ஒப்பற்ற முதன்மைப் போராளிகளைத் தொடர்ந்து,

☀போராளிப் பாசறையின் அடுத்த கட்ட போர்த்தளபதிகள் & முதன்மைப் போராளிகள் யார் என்பதை மக்களாட்சி மாண்போடு தேர்வு செய்திட வருகைதரும் தோழர்கள் அனைவரையும்

☀ஒருங்கிணைந்த இந்தியத் துணைக்கண்டத்தின் தனிப்பெரும் சமஸ்தானங்களில் ஒன்றாகத் திகழ்ந்திட்ட,

☀நூற்றாண்டு கண்ட நகராட்சியாம்,

☀புதுக்கோட்டை மாநகருக்குத் தோழமையுடன் அழைக்கிறோம்.

🕙காலம் : 04.03.2018 முற்பகல் 10மணி

🏢களம் : கிரீன் பேலஸ், பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை.

_அழைப்பின் மகிழ்வில்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*பொன்னமராவதி வட்டாரக்கிளை*

*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Friday, March 02, 2018

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.

தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.

அவர்கள் உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

DEPARTMENT EXAM-MAY 2018


Thursday, March 01, 2018

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு


அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகும்.ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுகள் எப்போதுபதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள் 'ரிசல்ட்' நாள்வேளாண் பயிற்றுனர் 25 ஏப்., ஜூலை, 14 ஆக., பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம் சான்றிதழ் ஆய்வு ஜூலைஉதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15 அக்.,'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.

TRB ANNUAL PLANNER-2018

Tuesday, February 27, 2018

2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு: முதல் கட்டமாக கிராமங்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு


2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தமிழகத்தில் முதல் கட்டமாக தாலுகா வாரியாக கிராமங்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-2011 காலக்கட்டத்தில் மக்கள் தொகை 15.60 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேர், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 087 பேர் இருந்தனர். இதில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் இருந்தது. கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 73.45ல் லிருந்து 80.33 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் ெதாடங்கியுள்ளது. அதன்படி, தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்களின் பட்டியல்கள் சரிபார்த்து வழங்க தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்ட பணியாக தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்கள் குறித்த விவரங்கள், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் போன்றவற்றை சரிபார்த்து பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடித்த பின்னர் கணக்கெடுப்பில் ஈடுபட தேவையான ஆட்கள், செலவினத்தொகை போன்ற விவரங்களின் அறிக்கை தயாரிக்கப்படும். தொடர்ந்து 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

நெட் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி: தேர்வுக்கான தாள்கள் இரண்டாகக் குறைப்பு


கல்லூரி ஆசிரியர் பணிக்கு 'நெட்' தகுதித் தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாளாகும். இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

இப்போது 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு எப்போது?: 2018-ஆம் ஆண்டு நெட் தேர்வு ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மார்ச் 5 ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடாசி நாளாகும். கட்டணம் எவ்வளவு?: தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) ரூ. 500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்கள் மட்டுமே! இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இதில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். வயது வரம்பு அதிகரிப்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு இதுவரை அதிகபட்சம் 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 30 வயதுடையவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியும்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு


அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:

அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

Monday, February 26, 2018

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்


தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.