இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 19, 2017

இன்ஜி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!


இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்திய தொழிற்நுட்பக் கல்வி கவுன்சில், தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' எனும், தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே போல், இன்ஜி., படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கோவையில், நேற்று, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவப் படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வு நடப்பது போல, இன்ஜி., படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இது, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள கவுன்சிலிங் விதிகளுக்கு, சிக்கல் ஏற்படாத வண்ணம், இட ஒதுக்கீட்டை பின்பற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். நுழைவுத் தேர்வு எழுதுவதன் மூலம், தமிழக மாணவர்களுக்கு, வேறு மாநிலங்களில் உள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள், 30 சதவீதத்துக்கும் கீழ், மாணவர் சேர்க்கை நடத்திய, இன்ஜி., கல்லுாரிகள், அடுத்த கல்வியாண்டில், மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாருக்குள்ளாகும் கல்லுாரிகள் மட்டுமல்லாமல், 'ரேண்டம்' முறையில், ஐந்து சதவீத கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பாண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பருவத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கும் முறையிலும், மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளையும் முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெறும். இதன் மூலம், பாடத்திட்டம் சார்ந்த புரிதல், மாணவர்களுக்கு ஏற்படும். இது தவிர, உயர்கல்வியில் சேரும், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் உள்ள, பயத்தை போக்கும் வகையில், ஊக்குவிப்பு திட்டம், ஜூலை இறுதியில், அனைத்து கல்லுாரிகளிலும் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, June 18, 2017

இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' : எண் நாளை வெளியீடு


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.

பி.எட்., படிப்புக்கு 21ல் விண்ணப்பம்


தமிழகம் முழுவதும், 23 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்ட படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், வரும், 21ல், துவங்குகிறது. தமிழகத்தில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில், பி.எட்., முதலாம் ஆண்டு சேர்க்கை, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் நடத்தப்படுகிறது. சென்னை, லேடி வெலிங்டன் அரசு கல்வியியல் கல்லுாரி, கவுன்சிலிங்கை நடத்துகிறது.

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், வரும், 21ல், துவங்கி ஜூன், 30 வரை நடக்கிறது. விண்ணப்பங்களை, 13 கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை, www.tndce.in,www.ladywillingdoniase.com என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். 'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 7க்குள், லேடி வெலிங்டன் கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனாலும், நேற்று மாலை வரை, இரண்டு இணையதளங்களிலும், பி.எட்., மாணவர் சேர்க்கை விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

Friday, June 16, 2017

நாடு முழுவதும் உயர்கல்விக்கு தேர்வுகள்

உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!

உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!
இந்திய அளவிலான உயர்கல்வி பெறுவதற்கான தகுதித் தேர்வுகளை, சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் (2017) திடீரென மருத்துவப்படிப்புக்கு அனைத்து மாநிலத்தவர்களும் ‘நீட்’ எனப்படும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை தேசிய அளவில் நடத்திவரும் சிபிஎஸ்இ தேர்வு அமைப்புக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், சமீபத்தில் நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இது மாணவர்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்குள்ளாகியது.

இந்நிலையில் இதுபோன்ற சிக்கலில் இருந்து சிபிஎஸ்இ அமைப்பை விடுவிக்கவும், அனைவருக்கும் பொதுவான தேர்வு நடைமுறையை அமல்படுத்தவும் புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

ஆக, இந்த மசோதாவில் கூறியுள்ளதுபடி, புதிய தேர்வுகள் அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இனிமேல் நடக்கவிருக்கும் உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்த புதிதாகத் தொடங்கவிருக்கும் தேர்வுகள் அமைப்பு உதவும். இதன்மூலம் உயர்கல்வி பெற நாடு முழுவதும் ஒரே தேர்வுகள் அமைப்பு உருவாகிறது.

புதிதாக 4,084 ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


புதிதாக 4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். மாணவர்கள் பொது அறிவு, மொழித் திறன்களை வளப்படுத்த பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் அளிக்கப்படும். 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அவை வாங்கி கொடுக்கப்படும். காலிப் பணியிடங்கள்: பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியமிருப்பதால், நிகழ் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்வி, பள்ளி மேலாண்மைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற விருது அளிக்கப்படும். இந்த விருது ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை அடங்கியதாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறையில் 17 ஆயிரம் தாற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். உலகத் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்க உதவி உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்பித்தலுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ் உணர்வைப் போற்றிப் பாதுகாப்பது கடமையாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாக தமிழ்ப் பாடப் புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புதல், சிறந்த தமிழ் ஆசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், இணையதளம் வாயிலாக அவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மியன்மர், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதைத் தவிர கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும். அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்துக்கும், மலேசிய பல்கலைக்கழகத்துக்கும் பொது மக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடைமுறை: நவம்பர் வரை நீட்டிப்பு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பதில்:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையானது நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

Thursday, June 15, 2017

தொடக்க கல்விக்கு புதிதாக 30 பள்ளிகள்‘கனவு ஆசிரியர்’ விருது அறிவிப்பு


பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ெவளியிட்ட அறிவிப்புகள்: * மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ‘‘புதுமைப் பள்ளி விருது’’ வழங்கப்படும். இதற்காக ரூ.1கோடியே 92 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* செயல் வழிக் கற்றலுக்காக புதிய அட்டைகள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். அதற்காக ரூ.31 கோடியே 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* 6,7,8 ம்வகுப்பு மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினி வழிக்கற்றல் மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ₹6 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* 5639 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டு இயந்திரம் வழங்கப்படும். அதற்காக ரூ.22 கோடியே 56 லட்சம் செலவிடப்படும்.
* 31322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ்கள் வாங்க ரூ.4 கோடியே 83 லட்சம் செலவிடப்படும்.
* நடப்பு கல்வி ஆண்டில் 3336 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் கனவு ஆசிரியர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் செலவிப்படும்.
* பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தரம் மற்றும் தற்காலிகம் என பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 17 ஆயிரம் தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக(பணியிடங்கள் மட்டும். ஊழியர்கள் அல்ல) மாற்றப்படும்.
* 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் வழங்கப்படும். ரூ.39 கோடியே 25 லட்சம் செலவிடப்படும்.
* 7219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 3 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவியருக்கு திறனறித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ரூ.2 கோடியே 93 லட்சம் செலவிடப்படும்.
* அறிவியல், தொழில் நுட்பம், கலை இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தனித் திறமை உள்ள மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் செய்யும் வகையில் ஆண்டுக்கு 100 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ₹3 கோடி செலவிடப்படும்.
* கலை, இலக்கியம் உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் மாபெரும் மாணவர் கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்படும். ரூ.4 கோடி இதற்கு செலவிடப்படும்.
* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் போட்டித் தேர்வுக்கான ஒரு பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கு ரூ.20 கோடி செலவிடப்படும். உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் போட்டித் தேர்வுக்கான வழி்காட்டி மையங்கள் அமைக்கப்படும். ரூ.2 கோடி செலவிடப்படும்.
* பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக கற்றல் கற்பித்தல் மேலாண்மைத் தளம் ஒன்று உருவாக்கப்படும். அதன் மூலம் காணொளி, கணினி வழித் தேர்வுகள், செல்போன் செயலிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ரூ.2 கோடி செலவிடப்படும்.
* அரசு பொது நூலகத்துறை நூலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.25 கோடி, அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகம் வாங்க ₹5 கோடி ஒதுக்கப்படும். 32 மாவட்ட தலை நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். மதுரையில் உலக தமிழச் சங்க வளாகத்தில் ஒரு லட்சம் புத்தகம் கொண்ட மாபெரும் நூலகம் ரூ.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
* 24 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ரூ.75 லட்சம் செலவிடப்படும். 314 முழுநேர கிளை நூலகங்களில் 123 நூலகங்களில் கணினி வசதி ஏற்படுத்த ரூ.1 கோடியே 84 லட்சம் செலவிடப்படும். மின் நூலகம் ₹2 கோடி செலவில் அமைக்கப்படும்.
* மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நிர்வாக மேம்பாட்டுக்காக கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வாளர் அலுவலகங்கள் ரூ.32 லட்சத்து 85 ஆயிரம் செலவில் ஏற்படுத்தப்படும்.
* 3 மற்றும் 5ம் வகுப்புகளில் சமநிலைக் கல்வி அளிக்கப்படும் இதற்கு ரூ.13 கோடியே 94 லட்சம் செலவிடப்படும்.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது?


எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும். பகுதி நேர பொறுப்பாசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, ‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!


கூட்டுறவு நாணய சிக்கன கடன் வங்கியில் 12இலட்சம் வழங்க உத்தரவு

Announcements of Higher Education Department - 2017-2018 - Tamil Version

Click below

https://app.box.com/s/wm6hmrmq6ifgbuxzbozsble4bcwrh1zn

2017-18 வேலைநாட்கள் விபரம்

2017-18 பள்ளிக்கான செயல்திட்டம்

Click below

https://app.box.com/s/el9gtui6utlebufbml925qva9w2odds5

Wednesday, June 14, 2017

CCE-First aid

Click below

https://arivuchaalaram.files.wordpress.com/2016/06/7_first-aid.pdf

மாணவர்கள் பிறந்த நாளில் ஹேப்பி பர்த் டே சொல்லுங்க: கல்வித்துறை சுற்றறிக்கை


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்கும் போது நடத்தப்படும் காலை வழிபாட்டின் செயல் முறைகள் குறித்த அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடி வணக்கம், கொடிப்பாடல், உறுதிமொழி, திருக்குறள் வாசித்து, அதற்கான விளக்கத்தை மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சிமுறையில் கூற வாய்ப்பளிக்க வேண்டும்.

தினமும் மாணவர்களால் சுழற்சி முறையில் அன்றாடச் செய்தியை நாளிதழ்களைக் கொண்டு வாசிக்கச் செய்வது, பொது அறிவுத் தகவல் மற்றும் பழமொழிகளை விளக்கங்களுடன் கூறவைப்பது, குறிப்பாக அன்றைய தேதியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவ,மாணவியருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது, பள்ளி நடைமுறை குறித்த ஆசிரியர் கருத்து, இறுதியாக நாட்டுப்பண்ணுடன் காலைவழிபாடு 17நிமிடங்கள் நடைபெறவும், இதர நாட்கள் 10 நிமிடங்கள் வழிபாடு நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் முதியோர் தின உறுதி மொழி: பள்ளிக் கல்வித் துறைச் செயலர் கடிதம்


முதியோர் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககங்களுக்கு துறைச் செயலர் டி.உதயச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி, சர்வதேச முதியோர் வன்கொடுமை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, முதியோருக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்த உறுதிமொழியை டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் சிகிச்சை அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த உறுதிமொழியை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் கடிதம் எழுதினார்.

இதையடுத்து, குறிப்பிட்ட தினத்தில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை நடத்தும்படி தொடக்கக் கல்வி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் ஆகியவற்றுக்கு துறைச் செயலர் உதயச்சந்திரன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார் என்று டாக்டர் வி.எஸ். நடராஜன் தெரிவித்தார்.

மானியக்கோரிக்கை தொடர்பாக ஊழியர்கள் வருகை

Tuesday, June 13, 2017

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு


சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Monday, June 12, 2017

அங்கன்வாடிகளுக்கு பாடத்திட்டம் : தனியாருக்கு நிகரான கல்வி


அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 'ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்', 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' என்ற பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், பாடத்திட்டம் குறித்த விபரம் வழங்கப்படாமல் உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு கற்பிக்க கூடிய தலைப்புகள் மட்டும் மாதந்தோறும் வழங்கப்பட்டன. பொறுப்பாளர்கள் அந்த தலைப்புக்கு உரிய பாடல்கள், உரையாடல்களை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்பித்தனர்.

தற்போது பாடத்திட்டம் அடங்கிய புத்தகங்கள் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 11 மாதங்களுக்கு செயல்பாடுகள் குறித்த தலைப்புகள், கற்பித்த பாடங்களை மீள் பார்வை செய்வது குறித்த விபரங்கள் உள்ளன. 'இதன்மூலம் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையான கல்வி, அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்