இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 12, 2017

மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை. ஊர் சுற்றுவது, மாணவியரை கிண்டல் செய்வது, சக மாணவர்களிடம் பிரச்னை செய்வது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது, வகுப்புகளுக்கு வராமல், பள்ளி வளாகத்தில் கூடி விளையாடுவது என, தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், பாட நேரங்களிலேயே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

முதல் பிரிவுக்கான பயிற்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், சென்னையில் நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 6,700 பள்ளிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவர்களுக்கு, நல்லொழுக்க கல்வி கற்றுத் தரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NHIS card link website

Click below

http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx

CRC Date changed‬: Upper primary- 21.01.17. Primary - 28.01.17 -

பெட்ரோல் பங்க்குகளில் சேவைக்கட்டணம் வாடிக்கையாளர் மீது சுமத்தப்படாது

பெட்ரோல் பங்க்குகளில் கார்டுகளுக்கான சேவைக்கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது: அமைச்சர்

பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரடிட் கர்டுகள் பயன்படுத்துவதற்கான சேவைக் கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எண்ண்எய் நிறுவனங்கள் மற்றும் வங்கி தரப்பு ஆகியோரிடம் டெல்லியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதான் கூறுகையில், பெட்ரோல் பங்குகளில் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான சேவைக்கட்டணத்தை வங்கிகள் அல்லது எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சேவைக்கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறகள் வரும் 16ம் தேதி வகுக்கப்படும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கட்டணத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கல் மீது செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதே உத்தரவு ரிசர்வ் வங்கி தரப்பில் கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி என்ற நிலை தொடரும் என்று பிரதான் தெரிவித்தார்.

கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கு ஒரு சதவீதம் அளவுக்கு சேவைக்கட்டணம் விதிக்க வங்கிகள் முடிவு செய்ததைக் கண்டித்து கார்டுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்தனர். மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து தங்களது முடிவை 13ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர். இந்தநிலையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதால் பெட்ரோல் பங்க்குளில் கார்டுகளைப் பயன்படுத்தும் நிலையே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கிடையாது' - அமைச்சர் அறிவிப்பின் பின்னணியில் அரசியல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ‛விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்’ என்று அறிவித்து இருந்தார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன். தற்போது 'ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு,  ஏற்கனவே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் 30 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்தத் தகவலை அவர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி விழா தொடக்க நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். அண்மையில் பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்  அமைச்சர்.

அ.தி.மு.க.  ஆட்சியில், கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்று பார்க்கப்பட்டது ஆசிரியர் தகுதித்தேர்வு. 2012-ம் ஆண்டில் இரண்டு முறை, 2013-ம் ஆண்டில் ஒரு முறை என, இதுவரை மூன்று முறை மட்டுமே தகுதித்தேர்வு நடைபெற்று இருக்கிறது. இந்த மூன்று தேர்விலும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. 2014-ம் ஆண்டு சட்டசபையில் 82 மதிப்பெண் வரை பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இதன் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்தது.

காலியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின் தங்கி இருந்ததால் வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.

வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றம் வழக்குத் தொடுத்தனர். வழக்குகள் விசாரணையில் இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறாமல் இருந்தது. கடந்த மாதம் அனைத்து வழக்குகளிலும் தமிழக அரசுக்குச் சாதகமான முறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ‛வெயிட்டேஜ் முறை சரியானது தான். இனி தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரை அணுகி, வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வாய்ப்பு வழங்கும் படி முறையிட்டிருந்தனர்.

'முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வரிடம் சொல்லி தகுந்த முறையில் தீர்வு காணப்படும்' என்றும், 'புதிய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேதியினை அறிவிப்பார்' என்றும் சொல்லி இருந்தார் அமைச்சர். எதிர்பாராத விதமாக ஜெயலலிதா இறந்து விட, தற்போது அமைச்சர் 'ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவித்து இருக்கிறார். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது.

பாடநூல் கழகத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, இந்த விவகாரத்தில் மூக்கை நுழைப்பதற்கு முன் பிரச்சனையைத்  தீர்த்து விட வேண்டும் என்று, முடிவெடுத்து இருக்கிறார் கல்வி அமைச்சர். எனவேதான், ‛தன்னிடம் முறையிட்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வழி செய்து இருக்கிறார்' என்கிறார்கள் பள்ளி கல்வித் துறையில் உள்ளவர்கள். இது வெயிட்டேஜ் முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாடு பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில்“மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான். மற்றவர்களின் குறுக்கீடு வருவதற்கு முன்னதாக இந்த நியமனத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் நிறைய காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சரியாக கணக்கு எடுக்கப்படாமல் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சுட்டிக்காட்டி இருப்பது போல் மாணவர்கள் - ஆசிரியர்களின் விகிதங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இதனை எல்லாம் மேற்கொள்ளும் போது நிச்சயம் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும். மேலும், தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையில் வயது, ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள மூப்பு, பி.எட்., மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு மதிப்பிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கான அமைப்பைச் சார்ந்த ராஜபாண்டி“தற்போது அமைச்சர் அறிவித்து இருப்பது சந்தோஷமான செய்திதான். வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் விரைவாக நிரப்பிட வேண்டும். இடையில் மற்றவர்களின் குறுக்கீடு இல்லாமல் செய்தால் சிறப்பாக இருக்கும். பணியிடங்களை நிரப்பும் போது 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.

இதுதவிர, 'ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்து 900 பேரையும், ஆசிரியர் அல்லாத காலியாக உள்ள இதர 800 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்' என்றும் கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். பணியிடங்கள் நிரப்புவதில் எந்த விதமான குறுக்கீடும் இல்லாமல் நடைபெற்றால் கல்வித் துறை செழிக்கும். செய்வாரா அமைச்சர்?

- ஞா. சக்திவேல் முருகன்

E PAY SLIP

Click below

http://epayroll.tn.gov.in/epayslip

பருவத்தேர்வு விடுமுறைகளை ஈட்டிய விடுப்பின் முன் இணைப்பாக துய்க்கமுடியும்-தொடக்கக்கல்வி அலுவலரின் ஆணை நகல்

Wednesday, January 11, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்


ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்கு முன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். பின், அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில் நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலி இடங்கள் நிரப்பப்படும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்று கூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி


பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது.

அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்பு அடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர்.ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

G.o 6, pongal bonus order

Click below

https://app.box.com/s/cwx0nbxdn7modgzc5avu5wknjpwy8sml

ஜல்லிக்கட்டு அழைப்பிதழ்

Tuesday, January 10, 2017

பொங்கல்போனஸ்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டடுள்ளது.

இதன்படி ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 3000 ரூபாய்  மிகாமல் போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக  325 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு


தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன.

இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், 2015, பிப்ரவரியில் மீண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டுக்குழு உருவானது. 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' எனக்கோரி, 2016ல், மார்ச் வரை, தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.

*மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் பயிற்சி*




தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து பொங்கலுக்கு கட்டாய விடுமுறை

TNGEA புதிய நிர்வாகிகள்


*TNGEA புதிய மாநில நிர்வாகிகள்.                                                                     மாநில தலைவர்.                                                         எம்.சுப்ரமணியன் (ஊரக வளர்ச்சித்துறை)விருதுநகர்                                                                         
மாநிலபொது செயலாளர்.                                                              எம்.அன்பரசு.                             (சமூகநலம்)சென்னை                                                                                               
மாநிலபொருளாளர்                                                           தங்கராஜ்                                                                     (வேளாண்மை.பொ)காஞ்சிபுரம்.                                                                                 மாநில துணைத்                                                               தலைவர்கள்                                                          ஞானத்தம்பி(மெடிக்கல்)மதுரை                                                       பார்த்திபன்.(வருவாய்த்துறை)தி.மலை.                                                                     குமாரவேலு                          (மோ.வா.ப.து)
நெல்லை                                                                                   செல்வம்.(பொ.ப.து)
மதுரை                                                                           சுப்ரமணியன் கருர்                                        தமிழ்ச்செல்வி.(VHN)
தர்மபுரி                                                        மாநிலசெயலாளர்கள். ஆர்.பன்னீர்செல்வம்           (வேளாண்மை)தஞ்சை                                     எம்.சௌந்தர்ராஜன்             (கூட்டுறவு)திருவாரூர்                                                            சி.ஆர்.ராஜ்குமர்.(கல்வி)கன்னியாகுமரி                                          ஜனார்த்தனன்                                              (வணிகவரி) கடலூர்                                                                             கலைச்செல்வி                       (கருவூலம்)சென்னை                                                                         A.பெரியசாமி                             (சத்துணவு)திருச்சி                             தணிக்கையாளர்கள்.                              AT.அன்பழகன்(சுகாதாரம்)நாகை                                                                    நடராஜன் ( பட்டுவளர்ச்சி)கிருஷ்ணகிரி.
💐💐💐💐💐
அனைவருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐