இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 02, 2016

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தக்கல் முறையில் விண்ணப்பம் வரவேற்பு



எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2017-ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட உள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.
கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, தத்கல் முறையில் விண்ணப்பிக்க இப்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 5,6,7ஆகிய தேதிகளில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்-லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

posted from Bloggeroid

Minority scholarship detail



posted from Bloggeroid

HRA slab


posted from Bloggeroid

SSA மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக SLAS தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவித்துள்ளார். அதற்காரபூர்வ ஆணை


posted from Bloggeroid

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு


posted from Bloggeroid

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற எண்ணிக்கை விபரத்தை பதிவு செய்தல் சார்பு


posted from Bloggeroid

Thursday, December 01, 2016

NMMS exam application and notification

Click below

https://app.box.com/s/0ym57g418lpgkw3d0uo1ahwuvqs7wmat

ஆதார் எண் பதிவு டிச., 20 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை. எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை. இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.

போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'


மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்


''ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

Social science worksheet fourth week

Click below

https://app.box.com/s/33stj4yuvuqoeqfnzgveyhxjd7vkm8kc

Science worksheet fourth week

Click below

https://app.box.com/s/h31y2j6p0h6sw8bdkbvetuytjs4jdoei

Maths worksheet fourth week

Click below

https://app.box.com/s/werovv4c5eo04a5p6fflw8imbrkzd923

English fourth week worksheet

Click below

https://app.box.com/s/g6n2rrq25mletzivnpfllgptu22ij2vg

Tamil forth week worksheet

Click below

https://www.mediafire.com/download/888qi2rdvru0az9

Wednesday, November 30, 2016

பெட்ரோல் பங்க்கில் பழைய 500 ரூபாய் நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும் : மத்திய அரசு அறிவிப்பு


பெட்ரோல் பங்க்கில் பழைய 500 ரூபாய் நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்க்கில் பழைய ரூ.500 செல்லும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பில் மாற்றம் செய்து நாளை (டிசம்பர் 2) மட்டுமே மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை விமான நிலையங்களிலும் நாளை வரை மட்டுமே மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும் பெட்ரோல் பங்குகளிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்காத பெட்ரோல் 'பங்க்' மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இன்று புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புயலுக்கு பெயர் சூட்டுவது எப்போது தொடங்கியது?


புயலுக்கு அது மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரத்தைக் கொண்டே பெயரிடப்பட்டு வந்தது. அல்லது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அது எந்தமாதிரியான புயல் என குறிப்பிடப்பட்டு வந்தது. இதைக் குறிப்பிடுவதற்கும், செய்தியாக மாற்றுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் மிகவும் கடினமாக இருந்ததால் பின்னர், புயல் தோன்றும் காலத்தை ஒட்டி, நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் பெயர்களில் புயல்கள் அழைக்கப்பட்டன.

1900-க்குப் பின்னர்தான், புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உலக அளவில் தோன்றியது. ஆரம்பத்தில், பெண்களின் பெயர் தான் புயலுக்கு வைக்கப்பட்டு வந்தது.

1979-க்குப் பின்னர் தான், ஆண்கள் பெயரிலும் பெயர் வைக்கப்பட்டது. இதன் பின்னர், ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதி, வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி என வெவ்வெறு கடல் பகுதிக்கு தனித்தனியே பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

2021-ம் ஆண்டு வரைக்குமான பட்டியலை இப்போதே தயார் செய்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் புயல் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கிறது. வடஇந்திய கடற்பகுதியில் உள்ள நாடுகள் புயல்களின் பெயர்களைத் தீர்மானிப்பார்கள்.

அதன்படி தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓமன் நாட்டு வானிலை இலாகா அதிகாரிகள் பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தீனைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வார்த்தைக்கு, ஒன்றுமில்லை (nothing) என்று பொருளாகும்.

பொறுப்பாசிரியர் வங்கி கணக்கில் தேசிய பசுமைப்படை திட்ட நிதி

பொறுப்பாசிரியர் வங்கி கணக்கில் தேசிய பசுமைப்படை திட்ட நிதி

தலைமையாசிரியர் மேற்பார்வையில் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் திட்ட பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.

இதற்கு ஆண்டுக்கு 2500 முதல் 5000 வரை நிதி வழங்கி வருகின்றன.இந்த நிதி தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.பெரும்பாலான பள்ளிகளில் தலைமையாசிரியருக்கும் பொறுப்பாசிரியருக்கும் சுமூக உறவு இல்லை.வெளிப்படை தன்மை இல்லை.எனவே இந்தாண்டு பொறுப்பாசிரியரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

Social science English medium worksheet 3

https://www.mediafire.com/download/h95hqle1wq2j0p7

science english medium worksheet 3

https://www.mediafire.com/download/7rs18a8dyj9bjyg

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடம் 12 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் நவம்பர் 29அன்று அளித்து கோரிக்கைகளை வலியுறுத்திய சந்திப்பு.



posted from Bloggeroid

SPD order to conduct competition on 8-12-16



posted from Bloggeroid

பணத்தட்டுப்பாடு

🌷TNPTF MANI🌷

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை

அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பின் தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன் இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து…

ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கர்நாடக
மாநிலத்தில் மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும் தற்போது நடைமுறையில் உள்ளது போல ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில் வருடத்திற்கு ரூபாய்த் தாள்களாக எண்ணிக்கையில் 1600 கோடி அளவிற்கு அச்சடிக்கும் திறமை வாய்ந்தவை. இவையல்லாமல் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இரண்டு அச்சகங்கள் நாசிக் (மகாராஷ்டிரா) மற்றும் தேவாஸ் (மத்தியபிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
இவை இரண்டும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மூலமாக முழுமையாக மத்திய
அரசாங்கத்திற்கு சொந்தமானவை. நிதியமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி இந்த இரண்டு அச்சகங்களும் மொத்த ரூபாய்த்தாள் தேவையில் 40 சதவீதம்வரை அச்சடிக்கத் தகுதி வாய்ந்தவை. மைசூரிலும், சல்மோனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள் 60 சதவீதம்வரை அச்சடிக்கும் திறன் படைத்தவை.

ஆக நான்கு அச்சகங்களும் இணைந்து மொத்தமாக தற்போதுள்ள நடைமுறைப்படி இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்தால் ரூபாய்த்தாள்களாக எண்ணிக்கையில் வருடத்திற்கு 2,666 கோடி அளவிற்கு அச்சடிக்கும் திறன் படைத்தவை.

புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்கள்
மத்திய அரசாங்கம் வழங்கும் புள்ளி விவரப்படி 2016 நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில் 45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள். இதன் மதிப்பு ரூ. 7,89,000 கோடி. இது எண்ணிக்கையில் 1,578 கோடி தாள்கள். மேலும், 39 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுக்கள். இதன் மதிப்பு ரூ. 6,84,000 கோடி. இது எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 342 கோடி தாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசாங்கம் புதிய 2000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணியை செப்டம்பர் மாதமே துவங்கிவிட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில் அப்பணி நிறைவடைந்திருக்கும்.

எவ்வளவு காலமாகும்?

500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க எவ்வளவு காலமாகும்? நான்கு அச்சகங்களின் திறன் வருடத்திற்கு 2666 கோடி தாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால் இதன் திறன் 4000 கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் நோட்டுக்கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்காக பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், இதனை அச்சடிப்பதற்கான திறன் வருடத்திற்கு 3200 கோடி தாள்களாகும்.

புழக்கத்திலிருந்து செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 1,578 கோடி தாள்கள். சுமார் 20 சதவீதம் வரை கருப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது என்றும் கூறப்படுகிறது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த அளவிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை குறைத்துக் கொள்ளலாம். இதன்படி செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய்த் தாள்களான 1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தை கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதமாவது புதிய 500 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும் ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில் செல்லாததாக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய்த் தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையாக 1,262 கோடி + 342 கோடி = 1,604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

50 நாட்களில் தட்டுப்பாடு தீராது

3,200 கோடி தாள்கள் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஒரு வருட காலமாகும். அப்படியானால் தற்போதைய தேவையான 1,604 கோடி தாள்களை அச்சடிக்க 6 மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே இப்பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும்.

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சொல்வதுபோல 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கான வாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசு முதலில் மக்களுக்கு உண்மையைச்
  சொல்ல வேண்டும். மேலும் ரூபாய்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 29, 2016

புதிய கல்விக்கொள்கையில் பள்ளி கல்வி

1.எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.

2.இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3.அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும்.

4.பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.

5.பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத் தெளிவு மற்றும் உயர்வகை சிக்கல்களுக்கு விடைதேடும் திறன் போன்றவற்றை கணிப்பிடும் வகையில் தேர்வுமுறைகள் மாற்றப்படும்.

6.அனைத்து விதமான பள்ளிகளிலும், குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வசதிகளும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றறி அளவுகளும் உறுதி செய்யப்படும்.

7.போதிய மாணவர்களும், உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'தொகுப்பு பள்ளிகளாக' மாற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

8. பள்ளிகளின் தரம், தலைமை, நிர்வாகம், ஆசிரியர்- திறன், தன்மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில், நாடு தழுவிய தரவரிசை தயாரிக்கப்படும்.

9.ஆங்காங்கு இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளுக்கு ஏற்ப, இப்போதைய கல்வி உரிமைச் சட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தேவையெனில், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கென, 'மாற்றுப் பள்ளிகளை' உருவாக்க பரிந்துரைக்கப்படும்.

மேற்குறித்த கல்வி முறை மாற்றங்களை, 'தகுதி, சமவாய்ப்பு' என்ற அறிவுப் பார்வையில் ஏலாதவை என, ஒதுக்கிவிட முடியாது.

ஒவ்வொரு வகுப்பிலும், புரிதலில் உயர், சராசரி, கீழ் என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பது தெரிந்த உண்மை. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வு பெற வேண்டும் என்பதும், உயர் மதிப்பெண்களுடன் பலர், தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என்பதும் இயல்பான எதிர்பார்ப்புகளே.

பின்தங்கிய மாணவர்களை, தேர்வில் வெற்றி நிலைக்குக் கொண்டு வர, ஆசிரியர்கள் கடினமாக செயல்பட வேண்டும். அதேபோல, உயர்நிலை மாணவர்களின் திறமையை மிளிரச் செய்து, அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.

இந்த இரு முயற்சிகளிலும், ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஈடுபடும் போது, பல நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க, இதுவரை நாம் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை.

மாணவர்களின் கற்றறி நிலைக்கு கணிப்பீடு இல்லையெனில், பல தீமைகள் விளையும். ஆனால், கற்றறி தகுதியில், பல காரணங்களால் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை கணிப்பீடு என்ற பார்வையில், 10ம் வகுப்பை முடிப்பதற்குள், இரண்டு மூன்று ஆண்டு காலத்தை, பயனறச் செய்யும் செயல் எப்படி ஏற்புடைத்ததாகும்?

பெற்றோரிடம் உதவி பெற முடியாத, பெரும்பாலான இத்தகைய குழந்தைகளின் நிலை கருதி, எட்டா-ம் வகுப்பு வரை, 'வகுப்பு நிறுத்தம் இல்லை' என்ற கொள்கை, சில ஆண்டுகளாக செயலில் இருப்பதன் பயனாக, எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் அவர்கள் பெற்றுவிடவில்லை.

ஒவ்வொரு ஆண்டிறுதி தேர்விலும், தோல்வி பெற்றவர்களுக்கு என, எடுக்க வேண்டிய தனி முயற்சிகள் சடங்காகி, அவர்களை தேர்வுக் கோட்டுக்கு ஒவ்வொரு முறையும் துாக்கி விட்டு விடும், உண்மைக்கு சான்றுகள் தேவையில்லை.

இப்போது, கல்வியறிவு இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தைகளைப் பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தனிப்பயிற்சிக்கு அனுப்புவதே சிறந்த வழி என, பெற்றோர் நம்பத் தொடங்கி விட்டனர்.

பள்ளியில் ஒருவகை பயிற்சி, வீட்டுவேலை, தேர்வுகள், தனிப்பயிற்சியில் வேறொருவகை பயிற்சி, வீட்டுப்பாடம், தொடர் தேர்வுகள் - என, குழந்தைகள் தவிக்கின்றனர்.

வகுப்பு நிறுத்தம் எந்த வகுப்பில் இருந்தாலும் முடிவு ஒன்றே. இளமையில், இரண்டு மூன்று ஆண்டுகளை விரக்தியில் வீணடிப்பர். 10ம் வகுப்புத் தேர்வை எழுதப்போகும் எந்த மாணவனும், தன் படிப்பு காலத்தில் இந்த இழப்பைச் சந்திக்கக் கூடாது. இந்த நோக்கில், வகுப்பு நிறுத்தம் இல்லாமல் கற்பிக்கும் முறையை, நாம் செம்மைப்படுத்தியாக வேண்டும்.

தேர்வு மதிப்பீட்டின் நோக்கமும், தொடர்ந்து பின்தங்கும் மாணவர்களுக்கான
சிறப்புப் பயிற்சிகளை, எப்படிக் கொடுப்பது என்பதை நோக்கியே இருக்க வேண்டும்.

'கல்வி விருப் பத் தேர்வுகள்' இளம் வயதில், தீமையையே விளைவிக்கும். மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் விருப்பமில்லாமல் போவதற்கு, அதுவரை அந்தப் பாடத்தைக் கற்பித்த ஆசிரியரே பெரும் காரணம்; அடுத்து வரும் வகுப்புகளில் அவர்கள் விருப்பம் மாறும்.

மேலும், இளம்வயதில் மாணவர்கள் ஒரே பாடத்தில் சிறந்து விளங்குவதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களின் அறிவை, -குறிப்பிட்ட அளவுக்கு பெற்றிருப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும்.

பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, இரண்டு தகுதிநிலைத் தேர்வுகள் வைக்கும் முறை தோல்வியையே காணும். தொழிற்கல்விக்கு என, மாணவர்களை நாம் துரத்தக் கூடாது.

இந்த முயற்சியில் நாம் முன்னமே தோற்றுள்ளோம். எம்.பில்., வகுப்பில் இப்படித் தான், 'முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே, பிஎச்.டி., ஆய்வில் சேரலாம்' என்ற முறை தோல்வியைச் தழுவியிருக்கிறது.

அறிவியல், கணிதம், ஆங்கிலம் மூன்றுக்கும், நாடு தழுவிய பாடத்திட்டம் என்ற கொள்கையும், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும் கொள்கையும் நன்மை தரும்.

நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் தரவரிசை காண்பதும், ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களின் கற்றறி நிலைகளை ஒப்பீட்டில் அறிவதும் வரவேற்கத்தக்க முயற்சிகளே.

'எழுபது, 80 சதவீத பள்ளிகள் தரம் தாழ்ந்தவை' என, முத்திரை குத்திவிட்டால் மட்டும் போதாது. அவற்றை உயர்த்துவதற்கு என்ன உதவியைச் செய்யப் போகிறோம்? அப்படி ஏதாவது செய்திருந்தால், 80 ஆயிரத்துக்கும் மேலான அரசு பள்ளிகளை, சமீப நாட்களில் மூடும் நிலை வந்திருக்காது.

ஐந்து ஆண்டுகளை (2010 - -15) கடந்திருக்கும், கல்வி உரிமைச் சட்டம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

நாட்டில், 8.3 சதவீத பள்ளிகள் மட்டுமே இச்சட்டம் முன்வைத்த, 10 எதிர்பார்ப்புகளுக்குள் இருப்பதும், 80 ஆயிரத்து, 647 மத்திய, -மாநில அரசு பள்ளிகள் மூடப்பட்டதும், 21 ஆயிரத்து, 351 தனியார் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது.

உண்மையில், கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியை மூடி மறைக்கும் முயற்சியையும், அதன் மீது அக்கறை கொள்ளாத போக்கையுமே புதிய கல்விக்கொள்கை வடிவம் நமக்குக் காட்டுகிறது. கருத்துக்கேட்கும் நிலையிலேயே எதிர்ப்புகளாலும், இப்போது எல்லா நிலைகளிலும் புதிய கொள்கை நீர்த்துக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து, பிளஸ் 1, பிளஸ் 2க்குப் புதிய பாடத்திட்டம் தாயார் நிலையில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது; 'மாற்றங்கள் இருக்கும், ஆனால் பெரிய அளவில் இருக்காது' என்ற செய்தியும் வருகிறது. அது உண்மையானால், நம் மாணவர்கள், தேசிய அளவில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

அதைத் தவிர்க்க, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்கள் தயாரிக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கும் மேலான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

திடீரென அதைச் செய்ய முடியாதெனில், எப்போதைக்கு தயாராகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பின்னுக்கு ஓடுபவர்களாக, நம் குழந்தைகள் இருப்பதை தவிக்க முடியும்.