இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 24, 2016

கல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎஸ் முறையில் இனி ஸ்காலர்ஷிப்


தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஐடிஐ, நர்சிங் உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர்களுக்கு ரூ.1,250, மாணவிகளுக்கு ரூ.1,750, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு ரூ.1,450, மாணவிகளுக்கு ரூ.1,950, பொறியியல் படிப்பிற்கு ரூ.2,250, மற்றும் ரூ.2,750, விடுதிகளில் தங்கினால் மாணவர்களுக்கு ரூ.4,250, மாணவிகளுக்கு ரூ.4,750 வழங்கப்படுகிறது. இவை தவிர டிகிரி படிப்பவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விஏஓ, ஆர்ஐ, ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாரிடம் கொடுத்தால் நேரடியாக பணம் கொடுக்கப்படும்.

இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப், ஆதார் எண் இணைக்கப்பட்டு, குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலும் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சமுக பாதுகாப்புத் திட்டத்தில் இனிமேல் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம். இதனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்றவைகளை ஒப்படைக்க வேண்டும். இனிமேல் இசிஎஸ் மூலமே ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்’ என்றனர்.

பள்ளிகளை 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு செய்துக் கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலர் வி.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வி துறை இணை இயக்குநர் டி.ராஜேந்திரன் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ்.ஜெயசந்திரன், நவமணி ஆபிரகாம் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "டி.ராஜேந்திரன் ஓய்வுப் பெற்று விட்டார். அதனால் ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து, அனைத்து பள்ளிகளிலும் 2 மாதங்களுக்குள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டனர். இதையடுத்து, வழக்கை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Thursday, June 23, 2016

தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்


தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம், ஜூன் 27ம் தேதி, www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும், அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட மையங்களான, 'டயட்' அலுவலகங்களில் நடக்கும்.

ஆங்கிலம், தெலுங்கு, உருது, சிறப்பு பிரிவினருக்கு, ஜூலை 4; தொழிற்பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும், ஜூலை 5; தொழிற்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 7; கலைப்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 8; அறிவியல் பிரிவு மாணவியருக்கு, ஜூலை 9ம் தேதியில் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும். ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிய முதல் தாளையும், ஆறு முதல் 8 ம் வகுப்புக்கு 2ம் தாளையும் எழுத வேண்டும்.

ஒருவரே இரு தாள்களையும் எழுதலாம். முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.600, இரு தாள்களை எழுத ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி.,- மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.300, இரு தாள்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

செப்., 18 காலை 9:30 முதல் பகல் 12 மணி வரை 2 ம் தாள், பகல் 2 முதல் மாலை 4:30 மணி வரை முதல் தாளுக்கான தேர்வு நடக்கும். தகுதித் தேர்வுக்கு 'ஆன்லை-னில்' நேற்று முன்தினம் (ஜூன் 22) முதல் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஜூலை 19 க்குள் செலுத்த வேண்டும். ஆக., 17ல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம், என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு குட்டு


தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த, இரு ஆண்டுகளில் மட்டும், 1,700 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டப்படி, மாநில அரசின் செயல் பாடுகளை ஆய்வு செய்து, அதன்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்ததால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அவருடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும்
விவரங்களை கடிதமாகவும், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கவலையளிக்கும் கல்வித்தரம்:
* தமிழகத்தில், 10 சதவீத பகுதி களில், மக்கள் குடியிருப்பு பகுதி களில், 5 கி.மீ., சுற்றளவில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்
* 2015ல், கல்வித் துறையில் தேசிய இலக்கு கணக்கெடுப்பின் படி, உயர்நிலை கல்வி தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில் இதுவரை, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்விபாடத் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை. அதற்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்:

* மொத்தம், 1,096 புதிய பள்ளிகளில், வெறும், 200 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டடப் பணிகள் முடிந்துள்ளன. 845 பள்ளிகளுக்கு விரைவில் முடிக்க வேண்டும்
* 2010 - 11ம் ஆண்டில், 878 பள்ளிகள்; 2011 - 12ல், 1,153 பள்ளிகளின் கட்டடங்களை வலுவாக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் கழிப்பறையைத் தவிர மற்ற பணிகளில், ஒரு பள்ளியில் கூட கட்டடப் பணியை, இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் துவங்கவில்லை.
தற்போது, கச்சா பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இனி இந்த பணிகளை துவங்கினால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதியில், பணிகளை முடிக்க முடியாது. அதே நேரம், இந்த திட்டங்களை திரும்ப
ஒப்படைப்பதாக, மத்திய அரசிடம் தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது
* 2010 - 11ம் ஆண்டில், 735 பள்ளிகளில் கணினி அறைகள்; 860 பள்ளிகளில், கைவினை வகுப்பறை கட்டடங்கள்; 837 பள்ளிகளில் நுாலகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல், 2011 - 12ல், 1,795 பள்ளிகளில் கைவினை அறைகள்; 919 பள்ளிகளில்அறிவியல் ஆய்வகங்கள்; 768 பள்ளிகளில், கணினி அறைகள்; 1,036 நுாலக அறைகள்; 170 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றையும் தற்போது திருப்பி அளிப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது
* இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் தமிழக அரசு புதிதாக அனுமதி கேட்கவில்லை; ஒப்புதல் கேட்டால் அளிக்க தயாராக உள்ளோம்
* தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். எனவே, தமிழக பள்ளிகளில் இடைநிலை கல்வியில் அதிக அளவில் இடைநிற்றல் உள்ளது.
இந்த இடைநிற்றலில், கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34 சதவீதம்; காஞ்சிபுரம் - 58.57
சதவீதம் என, முன்னணியில் உள்ளன.
மேலும், பொதுவாக பள்ளிப் படிப்பு இடைநிற்றல் அளவு, 2014 - 15ல் 3.98 சதவீதமாக இருந்து, அடுத்த கல்வி ஆண்டில், 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது
* மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனர். விடுதியில் மாணவர்களின்
எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010, 2011ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் இதுவரை, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்களை துவக்கவே இல்லை. இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் எந்த பயனுமின்றி உள்ளது
* அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை. 'ஆதார்' பதிவிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

PF online statement

Click below

http://www.agae.tn.nic.in/

Wednesday, June 22, 2016

அரசு ஊழியர்களின் பொது சேம நல நிதியின் வருடாந்திர கணக்கை தெரிந்துகொள்ள வசதி: மாநில கணக்காயர் தகவல்


அரசு ஊழியர்களின் பொது ேசம நல நிதியின் வருடாந்திர கணக்கைத் தெரிந்து கொள்வதற்கு வசதியாகமாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சேமநல நிதி வருடாந்திர கணக்கு இருப்பை ஜூன் மாதம் இறுதிக்குள் மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் www.agae.tn.nic.in என்று முகவரியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதாக மாநில கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வலைத்தளத்தின் மூலம் 2015-2016ம் ஆண்டுக்கான கணக்குகளை சந்ததாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு ஊழியர்கள் தங்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவை இருந்தால் அவர்கள் தங்கள் அலுவலகத்தின் மூலம் மாநில கணக்காயர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இது தொடர்பாக 044-24314477, 044-24324509, 044-24324647 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சந்தாதாரர்கள் தங்களின் கைபேசி எண்ணை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மாநில கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விரைவில் கலந்தாய்வு


துரைமுருகன்: பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வருகின்றனர். இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

அமைச்சர் வீரமணி: இப்போதுதான் அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் புதியவர். கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.

'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு


தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நிலையில் பத்தாண்டுகள் பணிபுரிந்தால் 'தேர்வு நிலை'யும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் 'சிறப்பு நிலை' தகுதிகளும் வழங்கப்பட்டது. ஆறு சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு உண்மை தன்மை சான்றிதழ் விபரங்கள் அனுப்பப்பட்டன.

தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த ஆசிரியர்களுக்கு 'உண்மை தன்மை சான்றிதழ்' இல்லாத காரணத்தால் விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பாமல் தலைமை ஆசிரியர்கள் தாமதப்படுத்தினர். இதனால் ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை.

இயக்குனரகம், விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த முகாம்கள் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 900 தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர், என்றார்.

Tuesday, June 21, 2016

ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை


தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து மே 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு செயல்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குழு தலைமை பொறுப்பில் இருந்து சாந்தா ஷீலா நாயர் சமீபத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் தற்போது குழுவில் உறுப்பினர் செயலர் கிருஷ்ணன் மட்டுமே உள்ளார். இதனால் ஜூன் 30க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியுமா?: இதுதொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் அதை முதன் முதலாக செயல்படுத்தியது தமிழக அரசு தான். அதன்படி 2003ம் ஆண்டே தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2004ல் தான் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி பார்த்தால் இத்திட்டத்துக்கும் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தமிழக அரசு நினைத்தால் தன்னிச்சையாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியும்’’ என்றார்.

Monday, June 20, 2016

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு


மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் இது சாத்தியமில்லை. இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அடிப்படையிலும் பின்தங்கி உள்ளன. எனவே, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கடந்த காலங்களில் சிறப்பு வழிகாட்டி கையேடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்பட்டன.

தேர்வுக்கு குறைந்த காலமே இருந்ததால் மாணவ, மாணவியர் இவற்றை முழுமையாக படிக்க முடியவில்லை. இதை தவிர்க்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக கையேடுகளை அச்சிடும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. சிறப்பு வழிகாட்டி கையேட்டை முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், தேர்ச்சி விகிதம் கூட வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இது குறித்த அறிவிப்பு: இத்திட்டம், நேற்று அமலுக்கு வந்துள்ளது. 118 ரூபாயில், 30 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், 1 ஜி.பி., 'டேட்டா கார்டு' வழங்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு பேசிக் கொள்ளலாம். இத்திட்டம், 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது


பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது.

புதிதாக நிரந்தர பதிவு எண் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த எண், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம் பெறும். அதேபோல், சான்றிதழ்களில், இரண்டு வகை பார் கோடுகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, மாற்றுத்திறனாளிகள், சிறப்பு மாணவர்களுக்கு, பொதுப்பிரிவு மாணவர்கள் போல் அல்லாமல், பச்சை நிற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சான்றிதழ்களில், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட சலுகைகளும், அதற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Sunday, June 19, 2016

டியூஷன் எடுத்தால் நல்லாசிரியர் விருது கிடையாது


ஆசிரியர் தினவிழா வரும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 2015 - 16ம் ஆண்டுக்கு மாநில அளவில் ‘நல்லாசிரியர் விருது’ பெற தகுதி வாய்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்ட அளவில் குழு அமைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் விபரங்களை தேர்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர் கையொப்பத்துடன் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பள்ளி கல்வி இணை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நல்லாசிரியர் விருதுக்கான விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டவராக இருத்தல் கூடாது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர், கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படுவர், தனியார் பள்ளியில் நிர்வாகியாக இருப்பவர்கள் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.