இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 25, 2015

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

'
தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அச்சம் '

ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும். 'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை; வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன. விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவ:

நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர்.
அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.-

Constitution day celebration

Click below

https://app.box.com/s/n0aygamt6a5qdyd2c3gybu2qat1kv9k5

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் உறுதிமொழி 26-11-15

Tuesday, November 24, 2015

பிஎப் முதலீட்டில் கிடைத்தது சொற்பம்


தொழிலாளர் வருங் கால வைப்புநிதி ஆணையம், தொழிலாளர்களின் நிதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் முதல் அக்ேடாபர் வரை 2,322.1 கோடியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

ஆகஸ்டில் 335.3 கோடி, செப்டம்பரில் 1,142.5 கோடி, அக்டோபரில் 844.3 கோடியும் முதலீடு செய்துள்ளது. இதற்கு 1.52 சதவீதம் மட்டுமே ரிட்டர்ன் கிடைத்துள்ளது. இது தொழிலாளர் யூனியன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். இது நீண்ட கால முதலீடு என்பதால் மாதந்தோறும் இதை அளவிடுவதில்லை என்று பிஎப் ஆணையர் ஜலான் கூறினார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்: பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்


வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெற்றது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பெயர் சேர்ப்பு, விவரங்கள் திருத்தத்துக்காகப் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி-மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீதுள்ள விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு, விண்ணப்பதாரர்களின் இருப்பிட விவரங்களை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் ஒரு இடத்தில் பெயர் நீக்கத்துக்கான துண்டறிக்கையை வழங்குகின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடவடிக்கையை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

நோய் தடுப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு


பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்

பள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும்

கொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும்

நீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்

நோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி - போராடியும் பலனில்லை.

இன்றைய தீக்கதிரில் 24-11-15 வெளிவந்துள்ள எனது குறுங் கட்டுரை

Seventh (7th) Pay Commission 2016 Salary (Pay Scale) Calculation

Click below

https://www.easycalculation.com/finance/7th-pay-commission-calculator.php

Monday, November 23, 2015

தொடக்கக் கல்வி - கடந்த ஒரு வார காலமாக பெய்யும் கனமழை காரணமாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து இயக்குனர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21RUFyQkVSV1ZSaUk/view?usp=sharing

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு


பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் பணிகளை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம், 'பம்ப்செட்' மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வெள்ளப் பெருக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளின் நிலவரம் குறித்து, தினமும் மாலை 5:00 மணிக்கு, அறிக்கை தர, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி இருக்கும் இடம்; மாணவ, மாணவியர் எங்கிருந்து வருகின்றனர்; பள்ளி பகுதியிலும், மாணவர் வரும் வழியிலும் மழை நிலவரம், வெள்ள நிலைமை குறித்த தகவல்களை, அறிக்கையில் இடம் பெறச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுத்தம் செய்யப்பட்ட பள்ளி வளாகங்களில், சுகாதாரத் துறை மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாற்று கட்டடங்களில் பள்ளிகள் அபாயகர பள்ளி கட்டடங்கள், பாதுகாப்பில்லாத வகுப்பறை கட்டடங்களுக்கு பதில், அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் சமூகநல கூடங்களில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம் 2016ல் அமலாகிறது


'தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உள்ளன,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

அமல்படுத்தப்படவில்லை நாட்டின் மக்கள் தொகையில், ஏழைகள் என கண்டறியப்பட்டுள்ள, மூன்றில் ஒரு பங்கினருக்கு, மாதம்,5 கிலோ அரிசி, ஒன்று முதல், மூன்றுரூபாய் விலையில் வழங்கப்படவேண்டும் என்பது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம். வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த திட்டம் கருதப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம், முந்தைய காங்., அரசால், பார்லிமென்டில், 2013ல் நிறைவேற்றப்பட்டது. ஓராண்டிற்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இச்சட்டத்தை பின்பற்ற வலியுறுத்தப்பட்டன. எனினும், மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னும், நாடு முழுதும், இன்னமும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், டில்லி யில் நேற்று, அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மாநாட்டை கூட்டி, உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சர் பஸ்வான் விவாதித்தார். இதன்பின், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

உணவு பாதுகாப்பு சட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த, தமிழகம் தவிர்த்து, அனைத்து மாநிலங்களும் உறுதியளித்து உள்ளன. மொத்தமுள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், இந்த சட்டத்தை இதுவரை அமல்படுத்தாத, 14 மாநிலங்களில், ஆந்திராவும், சிக்கிமும், இந்த ஆண்டிற்குள் அமல்படுத்த உறுதியளித்து உள்ளன. மார்ச் மாதத்திற்குள்...உத்தர பிரதேசம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களும், அந்தமான், நிகோபார் யூனியன் பிரதேசமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த உள்ளன. குஜராத், கேரளா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள், மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதமிழக அதிகாரிகள், 'தமிழகத்தில், அனைவருக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டம், சிறப்பாகசெயல்படுத்தப்படுவதால், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வில்லை; அடுத்த ஆண்டு ஜூலைக்குள் அமல்படுத்த உள்ளோம்' என்றனர். ரூ.4,000 கோடி மிச்சம்போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதால், இரு ஆண்டுகளில், 4,000கோடி ரூபாய் மத்திய அரசுக்கு மிச்சமாகி உள்ளது. உணவு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து, மாநில அரசுகளை, நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; அது, அவர்களின் விருப்பத்தை பொருத்தது. விருந்தா ஸ்வரூப்மத்திய உணவுத் துறை செயலர் Advertisement

Sunday, November 22, 2015

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய தரவரிசைப் பட்டியல்: அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது


பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளுக்கு வெளியிடப்பட உள்ளதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் (ரேங்க்) 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட உள்ளது.

மத்திய அரசு அமைக்க உள்ள தனி வாரியம் இந்தத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்தது. இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது கலை, அறிவியல் கல்லூரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலும் தனித் தனியாக வெளியிடப்பட உள்ளது. இதற்கான தர அளவீடுகளை யுஜிசி வகுத்து, தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இந்த அளவீடுகள் தரவரிசைத் திட்டத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ண்ழ்ச்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அடுத்த வாரம் வெளியிடப்பட்டுவிடும். இதற்காக நாடு முழுவதும் உள்ள கலை - அறிவியல் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள கல்லூரிகளை தரவரிசைக்கான விவரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தரவரிசை வருகிற 2016-17ஆம் கல்வியாண்டு முதல் வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். தரவரிசைப்படுத்துவது எப்படி?: ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி, வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன. தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் "ஏ' பிரிவின் கீழ் வரிசைப் படுத்தப்படும். பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் -பி- பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குத் தடை: வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்தக் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.

இந்தத் தகவல்கள் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி


மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இதுபோன்ற பேரிடர் காலங்களில், மாணவர்களையும், தங்களையும் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, சென்னையில், லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், இன்று பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி துவங்குகிறது;28 வரை நடக்கிறது

'மார்க்கர்' பேனா பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டம்


தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, ஆட்காட்டி விரலில், பிரஷால் அழியாத மை வைப்பதற்கு பதில், 'மார்க்கர்' பேனாவை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, பாட்டிலில் நிரப்பப்பட்ட அழியாத மையை, பிரஷில் எடுத்து, ஓட்டு போட்ட நபரின் ஆட்காட்டி விரலில் அடையாளம் பதிப்பது, 1962 முதல், நடைமுறையில் உள்ளது. ஆனால், 'பிரஷ் மூலம், கைவிரலில் மை வைப்பது, நேர்த்தியாக இல்லை' என, இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், தேர்தல் சமயங்களில், இங்க் பாட்டில் மற்றும் பிரஷ்களை எடுத்து செல்வதை காட்டிலும், மார்க்கர் பேனாக்களை எடுத்துச் செல்வது எளிதென, தேர்தல் கமிஷன் கருதியது. இதையடுத்து, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 'மைசூர் பெயின்ட்ஸ்' நிறுவனம் சப்ளை செய்த, மார்க்கர் பேனாவை பயன்படுத்தி, அதன் அழியாத தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.

'மார்க்கர் பேனா மீதான சோதனை அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை மார்க்கர் பேனாக்கள், ஆப்கானிஸ் தான் நாட்டில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் தயாரிக்கும் அழியாத இங்க், வேறு சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Saturday, November 21, 2015

7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி


ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு, ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஊதியக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும். பரிந்துரை: அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், 2014ல், ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீதம்; ஓய்வூதியர்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு வழங்க, பரிந்துரை செய்துள்ளது. குழு அறிக்கை, மத்திய அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்றுக் கொள்கிறதா அல்லது மறுஆய்வு செய்ய குழு அமைக்குமா என்பது, இனிமேல் தான் தெரியும். மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அதை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய, மாநில அரசுகள் தனி குழு அமைக்கும்.

அந்தக்குழு பரிந்துரை செய்யும், ஊதிய உயர்வை, மாநில அரசுகள் அமல்படுத்தும். பொதுவாக, மத்திய அரசு குழு அறிக்கையை தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் வழக்கம். எனவே, தமிழக அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது. போதாது: இதுகுறித்து, தமிழக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை செய்த ஊதிய உயர்வையே, தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை.ஆறாவது ஊதியக்குழு, அலுவலக உதவி யாளர்களுக்கு, அடிப்படை சம்பளமாக, 5,500 ரூபாய் நிர்ணயம் செய்தது. ஆனால், தமிழக அரசு, 4,800 ரூபாய் வழங்குகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளபடி, அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தால், அரசுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும். அரசு ஊழியர் சம்பள உயர்வு மூலம், 965 கோடி ரூபாய்; ஓய்வூதியர்களுக்கான ஊதிய உயர்வு மூலம், 450 கோடி ரூபாய் செலவாகும். மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.அதன் பிறகே மாநில அரசு, ஊதிய உயர்வு குறித்து ஆலோசிக்கும். ஆனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளதால், புதிதாக வரும் அரசே, ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்கும். நம்பிக்கை: ஏனெனில், நடப்பாண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு வழங்க, கூடுதல் நிதி தேவைப்படுவதால், அதற்கேற்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, புதிதாக ஆட்சிக்கு வரும் அந்த கட்சி, எவ்வளவு ஊதிய உயர்வுக்கு சம்மதிக்கும் என்பதை பொறுத்தே, ஊழியர்களின் ஊதிய உயர்வு அமையும். எனினும், சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை, ஊதியக்குழு பரிந்துரை ஏற்படுத்தி உள்ளது. எப்படிஇருப்பினும், வரும் ஜனவரி முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு கடைசியில் அரசு முடிவு எடுத்தாலும், அரசு ஊழியர்களுக்கு, முன் தேதியிட்டு ஊதிய உயர்வும், நிலுவை தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.