இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 25, 2015

மொழிப்பாடத் தேர்வில் முதல் இரு பக்கங்கள் எழுதப்பட கூடாது

வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது. அதன்படி சமீபத்திய சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகளின்போது, முதல் இரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும், தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வின்போது, 'ரப் வொர்க்' செய்வதற்கு, விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளின் வலது பக்க ஓர பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது ஓரப் பகுதி, மதிப்பெண் குறிப்பிட ஒதுக்கப்பட்டுள்ளது. விடைகளை எழுதி, அவற்றை கோடிட்டு, அடிக்க நேர்ந்தால், 'மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது' என்ற குறிப்புரையை எழுத வேண்டும்.

பயன்படுத்தாத பக்கங்களை கோடிட்டு அடித்து, 'பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கப்பட்டது' என, குறிப்பிட வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பின், மாணவர் கள் உடனடியாக உயர் கல்விக்குச் செல்ல வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாட்டி லேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

ஆலோசனை கூட்டம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடக்க உள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், தேர்வு ஏற்பாடு குறித்து, நேற்று, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் மற்றும் துறை இயக்குனர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். பின், முதன்மை செயலர் சபிதா அளித்த பேட்டி: பொதுத்தேர்வு ஏற்பாடு கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்வு மையம், தேர்வு அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துனர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு முடிவு கள் வெளியானதும், 10 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான ஏற்பாடுகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில், முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். மாணவர்கள், ஆன்-லைனில் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழ் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து, 90 நாட்கள் செல்லத்தக்கது.

தேர்வு முடிவுகள் வெளியான பின், 10 நாட்களில், அசல் சான்றிதழை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். பொதுவாக, பல்கலைக் கழகங்களில் கல்லூரிப் படிப்புகளுக்கு மட்டும், தேர்வு முடிவுகள் வந்ததும், 'புரொபஷனல் சர்ட்டிபிகேட்' என்ற, தற்காலிக சான்றி தழ் வழங்கப்படும். பின், பட்டமளிப்பு விழா நடத்தி, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், முதன்முறையாக தமிழகத்தில் தான் பள்ளிப் படிப்புகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகமாகிறது.

ஒரு மாதத்திற்குள்...: சி.பி.எஸ்.இ., பள்ளி களில், மதிப்பெண் பட்டியல் நகல் மட்டும் உடனே கிடைக்கும். தேர்வு முடிவு வெளியான ஒரு மாதத்துக்குள், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மதிப்பெண் நகலையே உயர் கல்விக்கு முதற்கட்ட சான்றிதழாக எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர்.

மொபைல் எண்ணை மாற்றாமல் தொலை தொடர்பு நிறுவனங்களை மாற்றி கொள்ளும் வசதி நாடு முழுதும் அமல்

மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, மொபைல் போன் எண்களை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது.

ஆனால், அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலை தொடர்பு எல்லை அல்லது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே, இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தற்போது பெற முடிகிறது. இதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முன்வந்துள்ளது. இதன்படி, நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். வரும் மே 3 முதல், நாடு முழுவதும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது; இதற்காக, டிராய் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

PG TRB final list released

Click below

http://www.trb.tn.nic.in/PG2014/25022015/msg2.htm

Tuesday, February 24, 2015

என் ஜினியரிங் தேர்வில் புதிய நடைமுறை

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

539 என்ஜினீயரிங் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழகக கட்டுப்பாட்டில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுமுறையில் சீர்திருத்தம், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சீர்திருத்தம் ஆகியவற்றை கொண்டுவர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை பல்கலைக்கழக அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர்.

அந்த கமிட்டி பரிந்துரைத்த தகவல் வருமாறு:–

தேர்வு முறையில் மாற்றம்
*என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருதல். தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவருதல்.

* விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சீர்திருத்தம் கொண்டுவருதல்.

*விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் முறையில் சீர்திருத்தம்.

*தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டணை வழங்குதல்.

மேற்கண்ட தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

இந்த பொருள்கள் வரக்கூடிய சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜாக்டோவுக்கு பணிந்தது அரசு.இன்று அரசுடன் பேச்சுவார்த்தை

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

கடந்த, 2003ல், மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய ஆசிரியர் சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போராட்ட முடிவுகளுடன், ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன.

இந்த குழு கூட்டம், கடந்த வாரம் சென்னையில் கூடி, தீவிரப் போராட்டம் நடத்த முடிவெடுத்தது. இதை அறிந்த, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவினரை அழைத்துப் பேச்சு நடத்தினர். ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு அரசு செவி சாய்த்து, முதல்வரை, ஜாக்டோ குழு இன்று சந்தித்துப் பேச அனுமதி தரப்பட்டுள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுவில், 22 பேர் உள்ள நிலையில், 15 பேர் மட்டும், இன்று காலை 10:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ப்ரீமியம்

வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், பொதுத்துறை, நான்கு; தனியார் துறை 21, என மொத்தம், 25 பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும்போது, காப்பீட்டு நிறுவனங்களிடம், மூன்றாவது நபர் மற்றும் உரிமையாளர் என, இரண்டு காப்பீடுகள் செய்யப்படுகின்றன.

பணமாக பெறலாம்: விபத்து, தீ, திருடு என, ஏதேனும் ஒரு காரணத்தினால், வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனங்களிடம், இழப்பீட்டை பணமாக பெற்று கொள்ளலாம். இதற்கு ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்தி, காப்பீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆனால் பலர், மறதி காரணமாக, ஆண்டு பிரீமியம் செலுத்த தவறி விடுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும்போது, இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிய வாகனம் வாங்கும்போது, ஆயுட்கால சாலை வரி வசூலிப்பது போல், வாகன ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள், மத்திய அரசிடம், கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மூன்று ஆண்டுக்குமாக சேர்த்து, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதை, விரைவில் செயல்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், வாகன ஓட்டிகள், ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்த சிரமப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து, தென் மண்டல பொது காப்பீட்டு ஊழியர் சங்க பொது செயலர், ஆனந்த் கூறியதாவது:

பொது காப்பீட்டில், கட்டடங்களில், தீ விபத்திற்கு, 10 ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. தற்போது, வாகனத்திற்கு, மூன்று ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை துவக்க, காப்பீடு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. பிரச்னை இல்லை: இதனால், ஆண்டு தோறும், பிரீமியம் செலுத்த மறந்தாலும், பிரச்னை இல்லை. ஆனால், அதற்கு மேல், பிரீமிய காலம் நீட்டிக்கப்பட்டால், வாகன விலையை, பிரீமியமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த நடைமுறை, ஏப்ரல், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் (5.3.2015 தேதிக்குள்) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத் தின் மூலம்பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர்,அழகப்பாபல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை29
------------------------------------------
  ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில்  முன்பணம் வழங்க வேண்டும்???????
அரசாணை நிலை  எண்.687,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.16.7.82ன்படி ஆசிரியர் வருங்கால வைப்புநிதியிலிருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் முன்பணம் வழங்க வேண்டும்.

Monday, February 23, 2015

சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்.அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சர் வேலுமணி கூறியது: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அது போல, சென்னை பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வரும் செய்திகளும் தவறானவை. சென்னைப் பள்ளிகள் ஒரு நாளும் தனியாரிடம் ஒப்படைக்கப் படாது. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஓஎம் ஆர் சீட்

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

விடைத்தாளில் மாற்றம்: கடந்த பொதுத்தேர்வை விட இந்த ஆண்டு தேர்வில், விடைத்தாளில் சில மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. அதன்படி, மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடிட்ட விடைத்தாள்கள், வரைபடம் உள்ளிட்டவற்றை, விடைத்தாளுடன் சேர்த்து தைத்து வழங்குதல் ஆகியவை, புதிதாக அமல்படுத்தப்பட உள்ளன. தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வுக்கு, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன், தேர்வரின் பெயர், பதிவெண், தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

* கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இதில், 75 வினாக்களுக்கு விடையளிக்க, ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கப்படும்.

* அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் அடங்கிய பாக்கெட்டை, அறிவிக்கும் தேதியில், முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

* அதில், அனைத்து மாணவ, மாணவியருக்கான விடைத்தாள்கள் உள்ளனவா என்றும், அதன் விவரம் குறித்தும், எண்ணிக்கை சரியாக உள்ளதா எனவும், சேதமடையாமல் நல்ல நிலையில் உள்ளதா எனவும், சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 'ஷேடு

' * சேதமடைந்திருந்தால், மாற்று விடைத்தாளை பெற்றுக் கொள்ளலாம். அதில் பதில் அளிக்கும் போது, கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா மூலமாக மட்டுமே, 'ஷேடு' செய்ய வேண்டும்.

* முதல், 75 நிமிடங்களில், அதாவது, 11:30 மணிக்குள், 75 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு. இரண்டு மற்றும் நான் காம் சனிக்கிழமை விடுமுறை

:ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

முழுநேரம் இயங்கும்: புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் முதல், தொடர் போராட்டங்களை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் அறிவித்த தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் கூட்டமைப்பு ஒத்தி வைத்தது. அதன்பின், இரு தரப்புக்கும் நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் அறிவித்தனர்.

ஒப்பந்தம்: மும்பையில் நேற்று மீண்டும் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம்ஏற்பட்டுள்ளது. மாதத்தில், முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகள், முழு நேரம் இயங்குவது; இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்படுகிறது:

வங்கி அதிகாரிகள் சங்க துணை பொதுச்செயலர் சீனிவாசன்கூறுகையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன், 11 சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த, வேலை நிறுத்தம் கைவிடப்படுகிறது.என்றார்.

Sunday, February 22, 2015

குடியரசு தலைவர் உரை

பிரணாப் முகர்ஜி உரை

கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஏழைகள் ஒதுக்கப்பட்டோருக்காக பாடுபடுவதே தமது நோக்கம் மேலும் நிதித் தீண்டாமையை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது எனவும் தொவித்துள்ளார். அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற ஜன்தன் திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது.

வளர்ச்சித் திட்டத்தின் பயன்கள் கடைசி பயனாளிக்கும் சென்று சேர அரசு உறுதியளித்துள்ளது. நேரடி மானியப் பணம் பட்டுவாடா திட்டம் 35 இனங்களுக்கு விரிவாக்கம் மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீட்டுவசதியை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது மேலும் வீட்டுவசதித் தறையில் நேரடி அந்நிய முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறு, நடுத்தர விவசாயிகளை இலக்காகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விளைபொருளுக்கு கட்டுப்படியான விலையை அரசு உறுதி செய்யும் எனவும் முகர்ஜி தெரிவித்துள்ளார். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் மேலும் மாணவர்கள் கல்வித்தொகை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நாடோடிகளாக உள்ள பழங்குடி மக்களுக்கு விடுதியில் கட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும் மாளவியா என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் கவுரவத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மேலும் பெண்களுக்கு என மருத்துவ உதவி மற்றும் தங்கும் இட வசதி, சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்புத் திட்டத்தை அரசு அமல்படுத்தப்படுகிறது மேலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொழிற்பழகுநர்களுக்கு மேம்பட்ட பயிற்சி வழங்க அரசு திட்டம் வகுத்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் தொழில்களை பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நீதித்துறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. காலாவதியான தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் 1,741 சட்டங்கள் தேவையற்றவை என கண்டறியப்பட்டு, நீக்க என பிரணாப் உரையில் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. பழைய திட்டக்கமிஷனுக்குப் பதில் நிதி ஆயோக் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுடன் வடிய கூட்டாட்சிக்கு நிதி ஆயோக் வழிவகுக்கும் மேலும் சேவை வரியை அமல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்த சரக்கு மற்றும் சேவை வரி முறை உதவும் என குடியரசுத் தலைவர் உரையில் கூறியுள்ளார். நிதிச் சட்ட சீர்திருத்த கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. சிக்கலின்றி தொ-ழில்களை நடத்த சட்ட விதிகள் எளிமைப்படுத்தப்படும். தொழில்களுக்கான அனுமதி பெற ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்படும்.

Kendriya Vidyalaya Admission Guidelines 2015-2016

Click below

http://sapost.blogspot.in/2015/02/kendriya-vidyalaya-admission-guidelines.html?m=1