இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 29, 2015

அடிப்படைகல்வி உரிமை பிரச்ச்சாரம் மீண்டும் துவங்கிட முடிவு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது; சமூகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள், பள்ளி சேர்க்கையின் போது, 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்' ஆகியவை உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை கொண்ட அடிப்படைக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமல்படுத்தப்பட்டது.

இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பிரசாரம் செய்ய, தமிழகம் முழுவதும் கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குழுக்கள் குறித்து ஆய்வறிக்கை அனுப்ப, 32 மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்களால் கண்டறியப்பட்ட, பதிவு பெற்ற கலைக் குழுக்களின் பட்டியல், திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டது.இக்குழுக்களை மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுத்த, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும், 385 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு பெற்ற கலைக்குழுக்களைச் சேர்ந்த, 200 பேர், அடிப்படைக் கல்வி, சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பட்டயத்தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் பெற, 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.அவரது செய்திக் குறிப்பு: இரு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுது பவர்களுக்கு, கடந்த ஆண்டு ஜூன் முதல், விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் பெறப்பட்ட பின், விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, 'www.tndge.in' என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், கட்டணத்தை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்., 2ம் தேதி முதல், 6ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தற்போது விடைத்தாள் நகல் வேண்டுபவர்கள், ஒரு பாடத்திற்கு, 70 ரூபாய் செலுத்த வேண்டும்.

தற்போது, புதியதாக விடைத்தாள் நகல் வேண்டுவோர், ஒருபாடத்திற்கு, 275 ரூபாயும், டிச., 30 முதல், ஜன., 5 வரை, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், ஒரு பாடத்திற்கு, 205 ரூபாய் செலுத்தி, அவர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், ஆன் - லைன் கட்டணம், 50 ரூபாய் கூடுதலாக, செலுத்த வேண்டும். ஜூனில் நடக்கும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும், என அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு தக்கல் திட்டம்

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதி வரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறிய, தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, 'தத்கல்' கீழ், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பிப்., 5 முதல், 7 வரை நேரில் சென்று, ஆன் - லைனில் விண்ணப்பிக் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும், அனைத்து தனித்தேர்வர்களுக்கும், சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

தனியார், 'பிரவுசிங் சென்டர்'களில் விண்ணப்பிக்க முடியாது. அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை, 'www.tndge.in' என்ற இணையதளத்தில் அறியலாம். 'எச்' வகை தனித்தேர்வர்கள், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய் கட்டணம் மற்றும் இதர கட்டணம், 35 ரூபாயும், 'எச்.பி.,' வகை நேரடி தனித்தேர்வர்கள், 150 மற்றும் 37 ரூபாய் என, 187 ரூபாயும் கட்ட வேண்டும். இவற்றுடன் கூடுதலாக, சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாய் மற்றும் ஆன் - லைன் பதிவுக் கட்டணம், 50 ரூபாயை பணமாக மட்டுமே, தேர்வுத் துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.'எச்' வகையினர், இதுவரை எழுதிய பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் நகல், பள்ளி மாணவராக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்கள், தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற தகுதிச் சான்று, செய்முறை அடங்கிய பாடங்களுக்கு எழுதுவோர், மதிப்பெண்ணுக்கான ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

'எச்' வகை நேரடி தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழின் அசல், வெளிமாநில தேர்வர்கள், இடம் பெயர்வு சான்றிதழின் அசலை இணைத்து அளிக்க வேண்டும்.தேர்வுக் கூட, அனுமதி சீட்டுக்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள், பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனித்தேர்வர்களுக்கான ' ஹால் டிக்கெட்' மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், பிப்., 2 முதல், 4ம் தேதி வரை, 'www.tndge.in' என்ற, இணையதளத்தின் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்திற்கு சென்று, 'HIGHER SECONDARY EXAM MARCH 2015- PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT' என்ற வாசகத்தில், 'கிளிக்' செய்து, தோன்றும் பக்கத்தில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை அடங்கிய பாடங்களில், செய்முறை தேர்வில், 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், செய்முறை தேர்வை மீண்டும் செய்வதுடன், எழுத்து தேர்வுக்கும் வர வேண்டும்.முதல் முறையாக, பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள - எச்.பி., வகை தேர்வர்கள், சிறப்பு மொழி எழுதும் தேர்வர்கள் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுகளை, கண்டிப்பாக செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

தீண்டாமை உறுதிமொழி

முன்னுரிமைப் பட்டியல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதில் தாமதம்

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது ’கவுன்சிலிங்’கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும். பட்டியல் ஜன.,யில் வெளியிட்டால் தான் தவறுகள் இருந்தால் அதை சரி செய்து ஏப். அல்லது மே மாதம் நடக்கும் பொது ’கவுன்சிலிங்’கில் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும்.

குறிப்பாக பட்டியல் தயாரிப்பின்போது ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், பணிவரன்முறை செய்யப்பட்ட நாள், உயர்கல்வித் தகுதி உட்பட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் ஜன., முடியும் தருவாயிலும் நேற்றுவரை தொடக்க கல்வித் துறையின் பட்டியல் தயாரிப்பு பணி மந்தமாக உள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜன.1ல் முன்னுரிமை பட்டியல் வெளியிட்டால் தான் அதை சரிபார்த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுமதி பெறுவது முதல் பொது ’கவுன்சிலிங்’கில் பங்கேற்பது வரை பல கட்ட பணிகளை சரியான காலத்திற்குள் முடிக்க முடியும். இல்லையென்றால் ’கவுன்சிலிங்’கின் போது ஏதாவது ஓர் சிக்கல் ஏற்பட்டு பதவி உயர்வு பாதிக்கும். பின் கோர்ட்டில் வழக்குகள் தொடர வேண்டி வரும். எனவே முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதத்தை தவிர்த்து விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

Wednesday, January 28, 2015

முறைகேடுகளை தவிர்க்க தேர்வுதுறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத்தேர்வுத்துறை கடந்த ஆண்டில் முறைகேடுகளை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.நடப்பு கல்வியாண்டிலும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த, இறுதிகட்ட ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு, புத்தகம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஓராண்டு தடையும்; துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல், சக மாணவர்களின் உதவியை நாடுதல் போன்றவற்றுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும் விதிப்பது, அமலில் இருந்து வருகிறது. மேலும், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், தரக்குறைவாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கும், சக மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி எழுதும் மாணவர்களுக்கும் ஆயுள் தடை விதிப்பது மட்டுமின்றி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஓராண்டு, இரண்டு ஆண்டு தடைவிதிப்பது நடைமுறையில் உள்ளது. வாழ்நாள் தடை சார்ந்த தகவல்கள் இதுவரை இல்லை. தற்போது, இதுசார்ந்த சுற்றறிக்கையும் வரவில்லை,'' என்றார். அரசுத்தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, ''தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தகவல்கள் தெரிவிக்கப்படும். தற்போது, இதுசார்ந்த தகவல்கள் தெரிவிக்க இயலாது. தேர்வு சார்ந்த செயல்பாடுகள் நடந்து வருகின்றன,'' என்றார்.

Tuesday, January 27, 2015

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு


பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், 1992-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு, தேவைக்கேற்ப அந்தக் கொள்கை பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை அறிவுசார் வல்லரசாக உருவாக்கவும், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மனிதவள தேவையை நிறைவு செய்யவும், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பள்ளித் தாளாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது.

ஆலோசனைகளை அளிக்க விரும்பும் பொதுமக்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்கள் பங்கேற்கும் விவாதங்களில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் ஆலோசனைகளை

www.mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகள், இந்த ஆண்டு முழுவதும் பெறப்படும்.

பள்ளித் தேர்வு முறையை மறுசீரமைப்பது, கிராமப்புற எழுத்தறிவு விகிதத்தை அதிகப்படுத்துவது, தொழில்கல்வி முறையை நிலைப்படுத்துவது, அறிவியல், கணிதப் பாடங்களை கற்பிப்பதில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவது, மொழிக் கல்வியை மேம்படுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீரமைப்பது, மாநில பல்கலைக்கழகங்களையும், இணையவழி கற்பித்தல் முறையையும் மேம்படுத்துவது, உயர் கல்வியில் தனியாரின் பங்களிப்பு, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவது, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிவது உள்ளிட்ட 33 மையக் கருத்துகளின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கைக்கான பொதுமக்களின் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 வது திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூரில், 12வது புத்தக திருவிழா வரும் 30ல் துவங்கி, பிப்., 8 வரை நடக்கிறது.
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், 12ம் ஆண்டு புத்தக திருவிழா, திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரே உள்ள கே.ஆர்.சி., சிட்டி சென்டர் வளாகத்தில், வரும் 30ல் துவங்குகிறது. பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 105 ஸ்டால் அமைக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறும். தினமும் காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
வரும் 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு, துவக்க விழா நடக்கிறது. 31ல், "தீக்குள் விரலை வைத்தால்...' என்ற தலைப்பில், ஆதவன் தீட்சண்யா; "இசையாலே மனம் வசமாகும்' என்ற தலைப்பில் பாஸ்கர் பேசுகின்றனர். பிப்., 1ல், "சமூக அநீதிகளை எதிர்த்து போராடாத மக்கள் குற்றவாளிகளே' என்ற தலைப்பில், நந்தலாலா நடுவராக இருக்கும் வழக்காடு மன்றம் நடக்கிறது. பிப்., 2ல், "தேசம் போகும் பாதை புதிது, ஆனால்?' என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன்; "பெரிதினும் பெரிது கேள்' என்ற தலைப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி பேசுகின்றனர். வரும் 3ல், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (இடைநிலை கல்வி) கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர், மாணவர்களுக்கு பரிசு வழங்குவர்.
வரும் 4ல், "வேதம் புதுமை செய்' என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்; "நல்லவை நாடி... இனிய சொலின்' என்ற தலைப்பில், போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசுகின்றனர். வரும் 5ல், தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குனர் செல்லப்பனார், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் தேவி சந்திரா ஆகியோரின் சிறப்புரை இடம் பெறுகிறது.வரும் 6ல் "மதம் எனும் பேய் பிடியாதிருக்க...' என்ற தலைப்பில், பீட்டர் அல்போன்ஸ்; "மணியும், பதரும்' என்ற தலைப்பில், முன்னாள் எம்.பி., சுப்பராயன் பேசுகின்றனர். வரும் 7ல், "சரித்திரம் தேர்ச்சி கொள்' என்ற தலைப்பில், பேராசிரியர் அருணன்; "அடைபடும் வாசல்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் பாலமுருகன் பேசுகின்றனர். நிறைவு நாளான பிப்., 8ல், "இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம், கற்பனை வளமே! - கருத்துச்செறிவே!' என்ற தலைப்பில், புலவர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

VAO தேர்வர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15-இல் வெளியானது.

எழுத்துத் தேர்வில் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு முறையிலான பணியிட ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மொத்தமுள்ள 2 ஆயிரத்து 234 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, புதன்கிழமை முதல் மாவட்ட வாரியான கலந்தாய்வுகள் தொடங்குகின்றன.

பிப்ரவரி 12 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் இந்த கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாவட்ட வாரியான பணியிட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை வழங்குகிறார். தேர்வாணைய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கிஸான் விகாஸ் பத்திரம் மக்களிடம் வரவேற்பு

மக்களின் சேமிப்பு பழக்கத்தை உயர்த்தவும் எளிதாக நீண்ட காலத்திற்கு சேமிக்கும் வகையிலும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட தபால் துறையின் 'கிஸான் விகாஸ்' பத்திரத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் 1988ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2011ல் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் இந்திய மக்களின் சேமிப்பு 30 சதவீதமாக குறைந்ததையொட்டி பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு இத்திட்டத்தை கடந்தாண்டு நவ., 17ல் அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்தது. இதில் ரூ.1000, 5000, பத்தாயிரம், ஐம்பதாயிரம் பிரிவுகளில் தொகையை முதலீடு செய்யலாம். தனிநபர் மற்றும் இருவர் கூட்டாக சேர்ந்து எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். முதலீட்டு தொகை 100 மாதங்களில் இரு மடங்காக உயரும். ஒரு தபால் நிலையத்தில் செய்த முதலீட்டை இந்தியாவிலுள்ள எந்த தபால் நிலையத்திற்கும் மாற்றலாம். தேவைப்பட்டால் குறைந்தபட்சம் 30 மாதங்களில் அல்லது அதற்கு பிறகு அபராதத்துடன் பணத்தை எடுத்து கொள்ள முடியும். தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து தரப்பினருக்கும் முதலீடு செய்ய ஏற்ற திட்டம் என்பதால் இந்த பத்திரங்களை ஏராளமானோர் வாங்குகின்றனர் என்றார்.

பை யின் மதிப்பு

“பை”-யின் மதிப்பு

வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் உள்ள மாறாத விகிதம்தான் π எனக் குறிப்பிடுகிறோம். மிகச்சிறிய வட்டத்திலிருந்து எவ்வளவு பெரிய வட்டமாக இருந்தாலும் இந்த விகிதம் மாறுவதில்லை என்பதுதான் இதன் சிறப்பு. இந்த π குறித்தான ஆய்வுகள் இன்றளவிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. π ன் மதிப்பைப் போல அது சார்ந்த ஆய்வுகளும் முடிவில்லாமல் உள்ளன.

π ன் தோராய மதிப்பு 22/7 அல்லது 3.14 எனக் குறிப்பிடுகிறோம். இந்த மதிப்பையே சூத்திரங்களில் நேரிடையாகப் பயன்படுத்தாமல் ஏன் ஒரு கிரேக்க எழுத்தைக் குறியீடாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம் உண்டு.

π ன் மதிப்பானது 3.14159265358979323846………. என முடிவில்லாமலும் சுழல் தன்மையற்றும் செல்கிறது. இதை அப்படியே கணக்கீடுகளில் பயன்படுத்துவது சாத்தியமற்றது. எனவே தான் இதைச் சுருக்கித் தோராயமாக 22/7 அல்லது 3.14 எனத் தேவைக்கு ஏற்பவும் கணக்கீட்டின் துல்லியத் தன்மைக்கு ஏற்பவும் பயன்படுத்தலாம் எனவும், அதனை π என்ற கிரேக்க எழுத்தைக் கொண்டு குறிக்கலாம் என ஆர்க்கிமிடிஸ் என்ற கணித மேதை பரிந்துரைத்தார்.அது இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

π என்பது கணிதத்தில் ஒரு மாறிலியாக (Constant) ஆகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் மதிப்பு முடிவிலியாக உள்ளதாலும், சுழல் தன்மையற்று உள்ளதாலும் இது ஒரு விகிதமுறா (Irrational Number) எண் ஆகும்.

π குறித்துப் பல்வேறு கணித மேதைகளின் கூற்றுகளைப் பார்ப்போம்

‘பை’யின் மதிப்புக்கான ராமானுஜரின் வாய்ப்பாடு

#கி.பி. 475-550 காலகட்டத்தில் இன்றைய பாட்னாவில் இந்திய கணித மேதை ஆரியபட்டர் வாழ்ந்தார். அவர் எழுதிய நூலில் இயற்கணித விதிகள், கோணவிதிகள் என கண்டுபிடிப்புகள் தரப்பட்டிருந்தன. இவரின் கூற்றுப்படி 62832 யை 20 ஆயிரத்தால் வகுக்கக் கிடைப்பதே π. அதாவது 3.1416 என்று கூறினார்.

#ஆர்க்கிமிடிஸ் என்பவர் 3 1/7 க்கும் 3 10/71 க்கும் இடைப்பட்டது தான் π எனக் கூறினார்.

#தமிழகக் கணித மேதை ராமானுஜர் π யின் மதிப்பைக் காணக் கீழ்க்காணும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தினார்.

இந்த வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இன்று கணினி மூலமாக 17 மில்லியன் தசம ஸ்தானங்கள் வரை துல்லியமாக π யின் மதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

காரிநாயனார் என்ற பழந்தமிழ்ப் புலவர் தனது பாடலில் π யின் மதிப்பு பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்.

“வட்டத்தரைக் கொண்டு விட்டத்தரை தாக்கின் சட்டெனத் தோன்றும் குழி”

இப்படிப் பலரால் பலவாறு கண்டறியப்பட்ட இந்த π இன்றும் பல சிக்கலான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது,

S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுநர்,

வேலூர்.