இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 18, 2014

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16 Income Slabs Tax Rates-tnkalvi

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Friday, October 17, 2014

10, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வில் பள்ளிவாரியாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் முடிந்த அவ்வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வுகளில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"எந்தெந்த பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதற்கான காரணம் என்ன என கண்டறிந்து, அவர்களை அடுத்துவரும் அரையாண்டுத்தேர்வு, பின்னர் இறுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய வினா விடை அடங்கிய கையேடு தயாரித்து வழங்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுபோல் பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்,”என்றார்.

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' :


    தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது. இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது. இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில்,

'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

Thursday, October 16, 2014

புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு ஜனவரியில் அடையாள அட்டை

வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்போருக்கு, ஜனவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. அடுத்த மாதம், 10ம் தேதி நிறைவு பெற உள்ளது. இந்நாட்களில், அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைவோரும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5ம் தேதி வெளியிடப்படும்.

இப்பட்டியலில் இடம் பெறும் புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான, ஜனவரி, 25ம் தேதி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 15, 2014

இ.சி.எஸ். ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்

Https://docs.google.com/file/d/0ByAIJo2ODgwFLWk4ZmtMMk43S0E/edit

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.

இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்னாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.

2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.

3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும். இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும். Click Here To Track Your Mobile.

அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும் 1. Locate My Mobile - இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம் 2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும். 3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும். 4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம் 5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: புதிதாகப் பெயர் சேர்ப்புக்கு விளக்கம் பெற இலவசத் தொலைபேசி வசதி


      தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்ப்பு உள்பட தேவையான விளக்கங்களைப் பெற இலவசத் தொலைபேசி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். வரும் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். நவம்பர் 10-ஆம் தேதி வரை பெயர்களைச் சேர்க்க விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா, முகவரிகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பன போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இதனிடையே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் போது ஏற்படும் சந்தேகங்கள், போதிய விளக்கங்களைப் பெற தேர்தல் ஆணையத்தின் சார்பில் இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் தனியான தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தத் தொலைபேசி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான தகவல்களைப் பெறலாம்.

தொலைபேசி எண் 1950. எஸ்.எம்.எஸ். வசதி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, எந்த வாக்குச் சாவடியில் பெயர் உள்ளது என்பதை செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் தங்களது செல்போன் மூலம் 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அவர்களது பெயர் எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்பது குறித்த தகவல் அனுப்பப்படும். இந்த வசதி வரும் 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. உதாரணமாக, ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், டி.என்.ஏ.1234567 என்று இருந்தால், அவர் தனது செல்போனில் உடஐஇ பசஅ1234567 என்ற முறையில் டைப் செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும் என பிரவீண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு


   தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், 1.66 லட்சம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அவற்றில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு 45 ஆயிரம் மையங்கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்., மைய பணப் பரிவர்த்தனைகளில், 41 சதவீதம் எஸ்.பி.ஐ., கார்டுதாரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க, ஏ.டி.எம்., பயன்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப்தாவது: எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் மாதத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறையும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து முதல் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, மாதத்திற்கு 9 முறை ஏ.டி.எம்.,களிலும், நான்கு முறை வங்கியிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தால், நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,களில் கட்டணமின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை, நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம்
மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

Tuesday, October 14, 2014

இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் இணையதளம் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னைதலைமைச் செயலகத்தில் பிரவீண்குமார் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தின் இணையதளத்தின் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் . ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனியான எண் வழங்கப்படும். அதன் மூலம், அந்த விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய மாணவ-மாணவிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒவ்வொரு கல்லூரியில் தேர்தல் ஆணையத்தின் தூதராக ஒரு மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 400 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், வாக்காளர் அடையாள அட்டைகள் தவறில்லாமல் அச்சிட வழி ஏற்படும்.

செல்போன் வசதி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை இணையதளம் (ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் அறியலாம். அடையாள அட்டை எண் தெரியாவிட்டால் தந்தை பெயர், வாக்காளர் பெயர் ஆகியவற்றை இணையதளத்தில் அதற்கான பக்கத்தில் தட்டச்சு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், வாக்காளர் அடையாள அட்டையின் எண் தெரிந்தால், அதைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் செல்போன் வசதியை (94441 23456) பயன்படுத்தி பட்டியலில் பெயர் இருக்கிறதா? எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த செல்போன் சேவை புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பை ஊக்குவிக்க மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரணிகள், ஓவியங்கள், மனிதச் சங்கிலிகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் இருந்தன. இப்போது, 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார் பிரவீண்குமார்.

வாக்காளர் பட்டியல் விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., சேவை துவக்கம்


   வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம், வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, வாக்காளர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் சார்பில், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை, இன்று அல்லது நாளை முதல் அமலுக்கு வரும்.

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அறிய விரும்புவோர், EPIC என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, எந்த ஓட்டுச்சாவடி யில் பெயர் உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லாதோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தங்கள் பெயர் மற்றும் தந்தை பெயரை குறிப்பிட்டு, தேடிப் பார்க்கலாம்.

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates for Miniority Subjects DSE / DEE and Other Departments

Http://trb.tn.nic.in/B.T%20Asst%202014/14102014/msg.htm

Direct Recruitment of Computer Instructor - Click here for Notification

Http://trb.tn.nic.in/Comp%20Instructor%202014/13102014/msg.htm

ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி


இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 334 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். இந்நிலையில், இந்தத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதன்படி, முதல்நிலைத் தேர்வில் 16,933 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு நிறைவடைந்து 50 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

R.L list

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

Http://www.tn.gov.in/karuvoolam/cps_new/cps_index.html

SCHOOL details

https://app.box.com/s/w9krz43eyub3to2zcr84

Monday, October 13, 2014

பாரதிதாசன் பல்கலை: 2014-2015-பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

Http://www.bdu.ac.in/admission/cde2014/CDE_BED_2014.PDF

TNPSC GROUP 4 anouncement

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்.

5 ஆயிரம் பணியிடங்கள்

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை  (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். கட்டணம் செலுத்த நவம்பர் 14–ந் தேதி கடைசி நாள். தேர்வு டிசம்பர் 12–ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044–25332855, 044–25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002–ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.