இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 28, 2014

FLASH news

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.2014

டிட்டோஜாக் உள்ளிட்ட கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

Wednesday, August 27, 2014

திருப்பூர் வடக்கு வட்டார புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூர் வடக்கு வட்டார புதிய
பொறுப்பாளர்கள்

தலைவர்-பாலசுப்ரமணி
செயலாளர்-பா.ஜெயலட்சுமி
பொருளாளர்-மணிகண்டபிரபு

து.தலைவர்-ஆ தர்மராஜ்,
மெர்சி வித்யா

து.செயலாளர்கள்
டிசோ பிரவின்ராஜ்,
மு.தங்கமணி

மா.பொ.உறுப்பினர்
திருநாவுக்கரசு
செல்வின்

செயற்குழு உறுப்பினர்கள்
1.அசோக்பாண்டி
2.கோ.ராமசாமி
3.ரொசாரியோ அந்தோனி ஜோசப்
4.பாரத்குமார்
5.தா.நந்தகுமார்
6.ப.லதா
7.பொற்கொடி
8.மரியசெல்வராஜ்
9.கார்த்திகேயன்
10.காளிதாஸ்
11.சுப்புலட்சுமி
12.திவ்யா

பொறுப்பாளர்கள் அனைவருக்கும்
வீரஞ் செறிந்த வாழ்த்துக்கள்.!!



புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி தேர்வு வேண்டாம் இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது.


ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய சலுகை அளித்துள்ளது. கட்டுப்பாடு நாடு முழுவதும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முந்தைய மன்மோகன்சிங் அரசு, கடந்த பிப்ரவரி 28-ந் தேதி இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது. அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாட்டால், சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.

புதிய சலுகை இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இனிமேல், ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். பேட்டி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ஆண்டுக்கு 9 சிலிண்டர்களாக இருந்ததை முந்தைய அரசு 12 சிலிண்டர்களாக உயர்த்தியது. இருப்பினும், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே பெற முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. ஒரு சில மாதங்களில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டர் கூட தேவைப்படாது. ஆனால், பண்டிகை காலங்களில் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால், அவர்களால் அதை பெற முடியாத நிலை இருந்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட மாதத்துக்குரிய சிலிண்டரை பெற தவறியவர்கள், அடுத்து வரும் மாதங்களில் அந்த சிலிண்டரை பெற முடியாத நிலை இருந்தது. இஷ்டம் போல.. எனவே, வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாட்டை நீக்குவது என்று மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இனிமேல், அவர்கள் ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள், வழக்கம் போல, அதை சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE

Tuesday, August 26, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பரணி


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

3,000 இடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

பல துறைகளில் காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார். அவர், கூறியதாவது: குரூப் 2: கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, 20 நாட்களில் வெளியிடப்படும்.

கால்நடை பராமரிப்பு துறையில், 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை, நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில், சிறப்பு தேர்வு நடத்தப்படும். மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு, 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில், 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. இன்று முதல், வரும் செப்டம்பர், 21ம் தேதி வரை, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

வரும் அக்டோபர், 18 மற்றும் 19ம் தேதிகளில், ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு, தேர்வு நடக்கும். தலா, 100 மதிப்பெண் வீதம், 400 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். பின், 60 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.பி.எல்., முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம

: ''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சேமநல நிதி சந்தாதாரர்களின் டிபாசிட்களுக்கு, கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த நிதியாண்டும், 8.75 சதவீத வட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சேமநல நிதி அமைப்பின், மத்திய ஆணையர் ஜலான் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''வட்டி வீதம் குறித்த முறையான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம், பின் வெளியிடும்,'' என்றா

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி

இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அஞ்சல் வட்டம்: தமிழ்நாடு

காலியிடங்கள்: 107

பதவி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

பதவி: Postal Assistant/ Sorting Assistant - 49

(i) Kabbadi - 05

(ii) Table Tennis - 05

(iii) Chess - 02

(iv) Badminton - 06

(v) Cricket - 05

(vi) Foot Ball - 04

(vii) Basket Ball - 03

(viii) Athletics - 01

(ix) Hockey - 04

(x) Volley Ball - 04

(xi) Weight lifting - 03

(xii) Body building - 04

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வரையிலாவது உள்ளூர் மொழி அல்லது இந்தி மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Postmen - 24

(i) Kabbadi - 03

(ii) Badminton - 01

(iii) Cricket: 02

(iv) Foot Ball - 04

(v) Basket Ball - 04

(vi) Athletics - 01

(vii) Hockey - 02

(viii) Volley Ball - 02

(ix) Weight lifting - 01

(x) Body building - 01

(xi) Power lifting - 02

கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Multi Tasking staff - 34

(i) Kabbadi - 02

(ii) Table Tennis - 01

(iii) Badminton - 01

(iv) Cricket - 01

(v) Foot Ball - 06

(vi) Basket Ball - 04

(vii) Athletics - 03

(viii) Hockey - 03

(ix) Volley Ball - 06

(x) Weight lifting - 02

(xi) Body building - 03

(xii) Carrom - 02

கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 22.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:

1. Postal Assistant பணிக்கு மாதம் ரூ. 5200 20,200 + தர ஊதியம் ரூ. 2,400

2.Multi Tasking staff பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800 + இதர படிகள்.

3.Postman பணிக்கு மாதம் ரூ.5200. 20,00 + தர ஊதியம் ரூ.2000 + இதர படிகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Monday, August 25, 2014

ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக.27-இல் இடமாறுதல் கலந்தாய்வு


ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் இடமாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-15-ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.  

மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களில் பணியிட மாறுதல் கோரி ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி


அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது. ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது. இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றன

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

Sunday, August 24, 2014

நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய செய்ய, ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.2014--15ல் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், அனைத்து உயர், மேல்நிலை பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியை பெறச்செய்யவேண்டும் என, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்தேர்ச்சியை தொட அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், பொது தேர்வை எவ்வித அச்சம் இன்றி எதிர்கொண்டு, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்பது நோக்கம். இதற்காக, பாட ஆசிரியர்களுக்கு அவர்தம் பாடங்களில் பணியிடை பயிற்சி நடத்தப்பட உள்ளது.

சிறப்பு பயிற்சி: மாநில அளவில் நடக்கும் இப்பயிற்சிக்கு முதன்மை கருத்தாளர்களாக, கல்வி மாவட்டத்திற்கு 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர்; பிளஸ் 2-வில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல், வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த முதுகலை ஆசிரியர்கள் 2 பேர் வீதம், ஆசிரியர்கள் பெயர், மொபைல் எண் விபரங்களை, அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்கள் சேகரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பயிற்சி பெறும் இவர்கள், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

சான்றிதழ் தொலைந்தால் பெறுவது எப்படி?

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

Saturday, August 23, 2014

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4,883 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4,883 மாணவ-மாணவிகளுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது.

பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும். கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கட் ஆப் மார்க் (1200-க்கு) பின்வருமாறு:

கட் ஆப் மார்க்

பொதுப்பிரிவு 1,088 மற்றும் அதற்கு மேல்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி, எம்பிசி) - 968 மற்றும் அதற்கு மேல்

ஆதி திராவிடர் - 847 மற்றும் அதற்கு மேல்

பழங்குடியினர் - 818 மற்றும் அதற்கு மேல்.

மேற்குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

www.tndce.in

www.tndcescholarship.org

விண்ணப்பத்துடன் சான்றொப்பம் பெறப்பட்ட பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தற்போது தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வர்கள் மூலமாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்

தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் பட்டப் படிப்பு படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

பள்ளி இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-மத்திய அரசு

வறுமை காரணமாக ஏதேனும் பணிக்குச் செல்ல நிர்பந்திக் கப்படும் பள்ளி இடை நின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பாக நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியதாவது:

"எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள‌ ஒரு மாணவர் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கப்படலாம். அப்படியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்கள் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் ஒரு மாணவர் முனைவர் பட்டம் வரைக்கும் படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுதொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும், பள்ளி மாணவர் களுக்காக 'இஷான் விகாஸ்' என்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் 9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் பின்னாளில் ஆய்வாளர்களாகவோ, விஞ்ஞானி களாகவோ ஆவதற்கு ஆர்வம் காட்டும் சிலரைத் தேர்வு செய்து அவர்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நாட்டில் உள்ள உயர்ந்த கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் சுமார் 2200 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.

கல்வி என்று வரும்போது பெண்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்டவர்களால் உயர் கல்வியை அடைய முடிவதில்லை. இதற்குப் பொருளாதார வசதியின்மையே காரணம்.

என்னிடம் பணமில்லை என்பதால் தான் நான் என்னுடைய கல்வியை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது".இவ்வாறு அவர் கூறினார்.