இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 11, 2014

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு

  பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இம்முறை தமிழகம் முழுவதும் 570 கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழத்தின் www.annauniv.edu/tnea இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். அதாவது 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வெளி மாநிலத்தில் படித்த தமிழக மாணவர்கள், இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தால், அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்

. இதுபோல் முன்னாள் ராணுவ வீரர் அல்லது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குழந்தைகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளி மாணவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளாமல், கடைசி நேரத்தில் அவற்றை பெற முயற்சிப்பதால் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்படும் இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, உரிய அதிகாரியிடம் சான்றிதழை பெற்று வைத்துக் கொண்டால் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்றார்.

1,200 வாக்காளர்கள் கூடுதல் அலுவலர் நியமனம

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று, ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர், நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர் பணியாற்றவுள்ளனர். ஒரு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200 ஓட்டுகளுக்கு மேல் இருந்தால், அங்கு நிலை அலுவலர் 1 ஏ, 2 பி என இருவர் கூடுதலாக பணியமர்த்தப்படுவர். 10 அல்லது 12 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து, மின்னணு ஓட்டுப்பதிவு பழுதுகளை சரி செய்ய, மண்டல அளவிலான தொழில்நுட்பக் குழு, தயார் நிலையில் இருக்கும்.

  LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

Thursday, April 10, 2014

"பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று துவக்கம்

""வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிந்துள்ளது. "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' : சில தொகுதிகளில் மட்டும், பணி நடந்து வருகிறது. அதேபோல், வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய, "பூத் சிலிப்' அச்சிடப்பட்டுள்ளது. இதை, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இன்று துவக்கி, 19ம் தேதிக்குள் முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது

. "பூத் சிலிப்' வெள்ளை நிற காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் பெயர், முகவரி, பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பின்புறம், "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். "பூத் சிலிப்' கிடைக்கப் பெறாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் அன்று, ஓட்டுச் சாவடியிலும் வழங்கப்படும். ஓட்டுச்சாவடிக்குள் யாரும், மொபைல் போன் எடுத்து செல்லக் கூடாது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து, வேட்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் பாதுகாப்பு கேட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு செய்யப்படும் : ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் சம்பவம் நடந்தால், அந்த ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அத்துடன், ஓட்டுச்சாவடி அலுவலர், "டைரி' மற்றும் அங்கு பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள், மறுநாள் ஆய்வு செய்யப்படும்.

அப்போது, தவறு ஏதும் நடந்திருப்பதாக தெரிய வந்தாலும், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார். 11 ஆவணங்கள் செல்லும் : புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலையங்கள், புகைப்படத்துடன் வழங்கியுள்ள கணக்கு புத்தகம், பான் கார்டு, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, பென்ஷன் ஆவணம், தேர்தல் கமிஷன் வழங்கும், "பூத் சிலிப்' ஆகியவற்றை கொண்டு, ஓட்டு போடலாம். இதில் எதுவும் இல்லையென்றால், ஓட்டு போட முடியாது.

Wednesday, April 09, 2014

இன்று முதல் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு


   பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் புதன்கிழமை (ஏப்ரல் 9) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு வியாழக்கிழமை தொடங்குகிறது. வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. தேர்வு எளிது: சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பாடத்தில் இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் சதமடிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்தத் தேர்வை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பார்கோடு எண், புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் போன்ற மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாத பாட புத்தகங்கள

் பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது. ஒப்புதல் இல்லாத புத்தகங்களை, எந்த பள்ளிகளும் பயன்படுத்தக் கூடாது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், எச்சரித்து உள்ளார். சமீபத்தில், எல்.கே.ஜி., பாட புத்தகத்தில், 'எஸ்' என்ற வார்த்தையை குறிக்க, 'சன்' (சூரியன்) படம் வரையப்பட்டிருப்பது குறித்த விவகாரம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:

பொதுக்கல்வி வாரியத்திடம் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை, சில பள்ளிகள், வகுப்பறையில் பயன்படுத்துவது குறித்து, கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த, 'உட்பெக்கர்' பதிப்பகத்தின், எல்.கே.ஜி., இரண்டாம் பாகம் புத்தகத்தில், ஆட்சேபனைக்குரிய பகுதிகள் இருப்பதாக, புகார் வந்துள்ளது. இந்த புத்தகம், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்கல்வி வாரியத்தின் அனுமதி பெறாதவை. எனவே, தனியார் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாட பகுதிகளை, உடனடியாக புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்களும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'பொதுக்கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

   லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 'வெப் -- கேமரா': தமிழகத்தில், வரும், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை தேர்தல் கமிஷன் கணக்கெடுத்துள்ளது. அங்கு, 'வெப் - -கேமரா' பொருத்தி, ஓட்டுச்சாவடியில் வைக்கப்படும் லேப்--டாப் கம்யூட்டரில் இணைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும், இணையம் வழியாக, சென்னை தேர்தல் கமிஷன் அலுவலக பிரதான சர்வருடன் இணைக்கப்படுகின்றன.

இதனால், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சம்பவங்களை, சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆனால், மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கவில்லை. 'மைக்ரோ அப்சர்வர்': பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளில் வெப்--கேமரா பொருத்தவும், மற்ற இடங்களில், 'மைக்ரோ அப்சர்வர்' நியமிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வெப்--கேமரா பொருத்தப்படும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை, லேப்--டாப்பில் பதிவு செய்யவும், இன்டர்நெட் இணைப்பு மூலம் தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணிக்காக, அந்தந்த பகுதி அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை, தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது.

தேர்தெடுத்த மாணவர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடி கம்யூட்டரில் பணி செய்வர். இந்த பணிக்காக, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

  தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாசை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது.

Tuesday, April 08, 2014

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

'சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதிக்குள் வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும், 28ம் தேதி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, மே 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, 5,300 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்: இன்று மாலை வெளியீடு

தமிழகத்தில், இன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும், 24ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில், மார்ச், 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. கடந்த, 5ம் தேதி நிறைவு பெற்றது. 1,134 ஆண்கள், 121 பெண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 1,256 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள், நேற்றுமுன்தினம் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, 291 ஆண்கள், 57 பெண்கள் என, மொத்தம், 348 மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 908 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆலந்தூர் சட்டசபை தொகுதியில், மூன்று பெண்கள் உட்பட, 19 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில், ஒரு பெண் உட்பட, ஐந்து பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், இன்று மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற வேண்டும். அதன்பின், அங்கீகாரம் இல்லாத, பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கப்படும்.

ஒரே சின்னத்திற்கு, இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால், குலுக்கல் முறையில், சின்னம் ஒதுக்கப்படும். இப்பணி முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அரசு பள்ளி மின் கட்டணம்: இயக்குனரகம் முடிவு

  அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், 23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்கு, தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பிரித்து தரப்படுகிறது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த, சில நாள் கால தாமதம் ஆனாலும், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை, மின்வாரியத்திற்கு, தொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது.

மேலும், மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை, மாவட்ட வாரியாக, தொடக்கக் கல்வித் துறை, இயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும், மின் வாரிய அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இந்த பள்ளிகளிலும், ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கக் கல்வித் துறையை போல், பள்ளிக்கல்வி இயக்குனரகமே, நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால், பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

IGNOU B.ed Genuiness form

Saturday, April 05, 2014

அழியாத மை' பற்றிய அருமையான குறிப்புகள் - dinamalar

தேர்தலில் ஓட்டளித்தற்கான அடையாளமாக, கை விரலில் வைக்கப்படும் அழியாத மை, கர்நாடக மாநிலத்தில் உள்ள, 'மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ்' நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின், 39 மற்றும் புதுச்சேரி தொகுதி உட்பட, நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், இம்மாதம் 7ல் துவங்கி, மே 12ல் நிறைவடைகிறது. ஒருவரே பல முறை ஓட்டுப் போட முயல்வது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, ஓட்டளிக்கும் வாக்காளரின் கைவிரலில், ஓட்டளித்ததற்கான அடையாளமாக அழியாத மை வைக்கப்படுகிறது.

இந்த மை, பல மாதங்களுக்கு அழியாமல் இருக்கும். இந்த மையை, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரிக்கிறது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கும், இந்த நிறுவனம் அழியாத மையை வழங்குகிறது. இந்நிறுவனம், 1937ல், அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த, நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் துவக்கப்பட்டது. கடந்த, 1962ல் இருந்து, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழியாத மை தயாரித்து வழங்கி வருகிறது.

நம் நாட்டில், 2006ல் இருந்து, வாக்காளரின் விரலில், இடது கை ஆட்காட்டி விரல் நகத்தில், ஊதா நிறத்தில் சிறிய கோடாக அழியாத மை வைக்கப்படுகிறது. இந்த மையில், 'சில்வர் நைட்ரேட்' என்ற ரசாயனம் உள்ளது; இதை நீக்குவது எளிதல்ல.

இ.பி.எப்., கணக்கில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுப்பு


ி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.,) சந்தா தொகையில், உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்துடன், சலுகைப் படியை சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், இதர சலுகைப்படிகளையும் சேர்த்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில், வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்தால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதே சமயம், ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில், சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

 
    அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை: நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளி: தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின், அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில், 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். இங்கு, ஆறு முதல், 14 வயது வரையுள்ள, பள்ளி வயது குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், கிராமக்கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பான பயிற்சி வழங்குவது, எஸ்.எஸ்.ஏ.,வின் முக்கிய குறிக்கோள். எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'நம்ம பள்ளி, நம்ம குழந்தை' என்ற தலைப்பில், அழகிய வண்ணப்படங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
கட்டாய கல்வி: கிராமக்கல்வி குழு செயல்பாடுகள், குழந்தைகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், சட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் கூட்டம், மேம்பாட்டு திட்டத்தில் இருக்க வேண்டியவை, பள்ளி கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் உள்ளிட்ட விவரங்கள், இந்த கையேட்டில் அடங்கி உள்ளன. இந்த கையேடு, தமிழகத்தில் உள்ள, இரண்டு லட்சத்து, 65, 284 கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கையேடு வழங்கப்படும். எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு துவக்கப்பள்ளியில், வரும், 2014- - 15ம் கல்வியாண்டில், பள்ளி மேலாண்மை குழு மூலம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

கையேடு: இதற்காக, தொடக்க கல்வி இயக்கம், சென்னை யுனிசெப் மற்றும் மதுரை மனித உரிமை கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கையேட்டை தயாரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.