இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label tnptfmani. Show all posts
Showing posts with label tnptfmani. Show all posts

Sunday, August 19, 2012

தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள

தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள் 618ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள்: தமிழக அஞ்சல் துறையில் போஸ்டல் அஸிஸ்டெண்ட், சார்டிங் அஸிஸ்டெண்ட், போஸ்டல் அஸிஸ்டெண்ட் - பாரின் போஸ்ட், மெயில் மோட்டார் சர்வீஸ், ரிடர்ண்டு லெட்டர் ஆபிஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் மேற்கண்ட காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் தமிழத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள காலி இடங்களாகும். தேவைகள்: தமிழ் நாடு போஸ்டல் சர்வீசின் போஸ்டல் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். மெட்ரிக் அளவிலான படிப்பில் இந்தியைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழியை நன்றாகப் பேசும், எழுதும் மற்றும் வாசிக்கும் திறமையும் தேவைப்படும். விபரங்கள்: தமிழக அஞ்சல் துறையின் அஞ்சலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். முதலில் ரூ.50/- கொடுத்து விண்ணப்பங்களை தலைமைத் தபால் நிலையங்கள் மற்றும் தெரிவு செய்த சில தபால் நிலையங்களிலிருந்து பெற வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 'இந்தியா போஸ்ட்' வாயிலாக பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். முகவரி: Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110 001. விண்ணப்பம் வாங்க இறுதி நாள் : 25.09.2012 விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.10.2012 இணையதள முகவரி: http://tamilnadupost.nic.in/rec/DoP_TN_DR2012.jpg

Friday, August 17, 2012

உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ SMS வரவில்லையா?

உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ SMS வரவில்லையா? கிழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து ON tnptfmani
SMS களை தொடர்ந்து பெற்றிடுங்கள்!...    நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே ACTV என்று type செய்து  என்ற 98 70 80 70 70  எண்ணிற்கு SMS செய்யுங்கள்.         இந்த SMS ஐ அனுப்பிய உடன் தங்களுக்கு "Your Account is Successfully Activated" என்று Reply SMS உங்கள் Mobile-க்கு வரும்,  தாமதமின்றி மீண்டும்   தாங்கள் செய்ய வேண்டியது: ON tnptfmani என்று type செய்து 98 70 80 70 70 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள். பிறகு, வழக்கம் போல் தங்களுக்கு நம் SMS வரத்தொடங்கும்.  அப்படியும் ஒருவேளை தங்களுக்கு SMS Reply வரவில்லை எனில் தங்களுடைய மாற்று புதிய எண்ணில் ( Alternate Number) நம் SMS format ஐ அந்த புதிய எண்ணில் Activate செய்துக்கொள்ளுங்கள். மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒரு Alternate SMS சேவையை  Activate செய்யுங்கள
Thank you்

Thursday, August 16, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு எப்போது?

தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகுதித்தேர்வும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளை ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், அனைவரும் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.   இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது, 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.   பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார்.   தகுதித்தேர்வு மிகவும் கடினமான இருந்ததாகவும் விடை அளிக்க நேரம் போதாது என்றும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுமே புகார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில், தகுதித்தேர்வில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   ஏறத்தாழ 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தகுதித்தேர்வில் தேவையான அளவுக்கு தேர்ச்சி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள தகுதித்தேர்வு மூலம் எஞ்சிய காலி இடங்கள் நிரப்பப்படுமா? என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) உத்தரவின்படி, தகுதித்தேர்வில், எஸ்.சி., எஸ்.டி. பி.சி., எம்.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கலாம்.   எனவே, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். அதற்கு மேல் குறைத்தால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது.   

Wednesday, August 15, 2012

Dept Exam result

சம்பளம் வழங்க அலைக்கழிப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் புகார்


தேனி மாவட்டத்தில் பொருளாதார, சமூக மற்றும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட கணினி டேட்டா எண்டரி ஆபரேட்டர்கள் சம்பளம் வழங்காம் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து புதன்கிழமை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டனர். மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொருளாதார, சமூக மற்றும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு திருச்சியில் உள்ள வைசா டெக்னாலஜி நிறுவனம் மூலம் கணினி டேட்டா எண்டரி ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.7,000, இதர செலவுகளுக்கு ரூ.1,500 வழங்குவதாக ஒப்பந்தம் செய்து பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, * தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த பி.டபிள்யு.சி.டேவிதார், உயர் கல்வித் துறை சிறப்புச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * சென்னை பணிகள் பிரிவு இணை ஆணையராகப் பதவி வகித்த ஆர்.ஆனந்தகுமார், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * பொதுத்துறை துணைச் செயலராக இருந்த டி.பி.ராஜேஷ், பேரூராட்சிகள் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * சர்க்கரைப் பிரிவில் கூடுதல் இயக்குநராக இருந்த பி.செந்தில்குமார் பொதுத்துறை துணைச் செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு கல்வி மசோதா: யு.ஜி.சி., அதிரடி!


வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவில், உலகின் சிறந்த 500 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உயர் கல்வியை வழங்க முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அதிரடியாக விதிமுறை வகுத்துள்ளது. இதன்மூலம், தரமற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதை தடுக்க முடியும். வெளிநாட்டு  கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்வி அளிக்க வகை செய்யும் மசோதா 2010ம் ஆண்டு மே மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தங்களது படிப்புகளை வழங்க அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், மசோதா நிறைவேற்றப்படவில்லை. இம்மசோதாவில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை, தரமில்லாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் புகுந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன, போன்ற குற்றச்சாட்டுகள்  எழுந்தன. இந்நிலையில், உரிய விதிமுறைகளை வகுக்கும் பணியை யு.ஜி.சி., தற்போது நிறைவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின் படி, இந்திய கல்வி அமைப்புகளின் அனுமதியுடன், உரிய தரத்தில், உலகின் சிறந்த 500 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் தங்களது படிப்புகளை வழங்க முடியும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘நாக்’ எனப்படும் தேசிய தர நிர்ணயக் குழுவின் ’ஏ’ அல்லது அதற்கு இணையான தர அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். முதுநிலை பாடப்பிரிவுகளை வழங்குவதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவமிக்க கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விதிமுறைகளில் இருந்தும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசு கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்படும் இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள, பல்கலையின் அனுமதி பெற வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி.,யின் அனுமதியை பெறவேண்டும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் அதற்குமேல் தொடரவும், அனுமதி மறுக்கவும் அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் யு.ஜி.சி.,க்கு அதிகாரம் உண்டு. மேலும், விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மத்திய அரசுக்கு யு.ஜி.சி., பரிந்துரைக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை குறித்து பொதுமக்கள் அறியும் வகையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன இணையதளத்தில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த இரு தரப்பினருக்கான ஒப்பந்தம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டு பரிமாற்றங்களில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுதல் அவசியம். இவ்வாறு சில முக்கிய கட்டுப்பாடுகளை யு.ஜி.சி., அதிரடியாக வகுத்துள்ளது.

Tuesday, August 14, 2012

விஏஒ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாளாகவும், வங்கி அல்லது அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்வணையம் அறிவித்துள்ளது.

Independence Day

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அந்தந்த மாநில தலைநகரங்களில் முதல்வர்களும் நாளை தேசிய கொடியேற்றுகின்றனர். சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா நாளை காலை தேசிய கொடியேற்றுகிறார். விழாவுக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை, போர் நினைவு சின்னம் அருகில் இருந்து போலீசார் அணிவகுத்து அழைத்து செல்கின்றனர். அதன்பின் உள்துறை செயலர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் ஆகியோரை தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி அறிமுகம் செய்து வைப்பார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, கோட்டை கொத்தளத்துக்கு சென்று தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார். அதன்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். நாடு முழுவதும் போலீஸ் உஷார்: சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளை மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ், விமான நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள், ரயில்வே பாலங்கள், ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

Independence Day

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அந்தந்த மாநில தலைநகரங்களில் முதல்வர்களும் நாளை தேசிய கொடியேற்றுகின்றனர். சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா நாளை காலை தேசிய கொடியேற்றுகிறார். விழாவுக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை, போர் நினைவு சின்னம் அருகில் இருந்து போலீசார் அணிவகுத்து அழைத்து செல்கின்றனர். அதன்பின் உள்துறை செயலர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் ஆகியோரை தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி அறிமுகம் செய்து வைப்பார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, கோட்டை கொத்தளத்துக்கு சென்று தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார். அதன்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். நாடு முழுவதும் போலீஸ் உஷார்: சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளை மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ், விமான நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள், ரயில்வே பாலங்கள், ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

இரட்டை பட்டம் செல்லாது - உயர் நீதி மன்றம்    

இரட்டை பட்டம் செல்லாது என்று . உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை  சார்ந்த ஆசிரியர்கள்  குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.       வழக்கு விசாரனை முடிந்த நிலையில் நீதியரசர் மதிப்புமிகு இராமசுப்பிரமணியன் இன்று தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக ஒருங்கிணைப்பு குழுவைச்சார்ந்த திரு.ஆரோக்கியராஜ்  கூறினார். 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக தையல் இயந்திரங்கள்: அரசு உத்தரவு


பெரம்பலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக 1,600 விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்க இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விலையில்லா தையல் இயந்திரங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த உதவும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதலாக 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக டி.ஐ.ஜி.களுக்கு குடியரசுத் தலைவர் விருது


காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஐஜிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை சிபிசிஐடி டிஐஜி ஸ்ரீதர், மதுரை டிஐஜி பாலநாகதேவி, நெல்லை டிஐஜி வரதராஜூ, திருச்சி டிஐஜி அமல்ராஜ், விழுப்புரம் டிஐஜி சண்முகவேல், சென்னை இணை ஆணையர் சங்கர் உள்ளிட்ட 21 பேர் குடியரசுத் தலைவர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு நாளை விருதுகள் வழங்கப்பட உள்ளது.  

பி.எப்.க்கான ஓய்வூதியத்தை ரூ.1000ஆக உயர்த்த பரிந்துரை

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பிடிக்கப்படும் பி.எப். தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்துக்காக எடுத்து வைக்கப்பட்டு அவர்கள் பணி ஓய்வு பெற்றதும் மாதாந்திர ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்தபட்சம் ரூ.5ல் இருந்து 500 ரூபாய் வரை உள்ளது. இதனை ரூ.1000 ஆக உயர்த்த மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.