இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label Tnptf. Show all posts
Showing posts with label Tnptf. Show all posts

Tuesday, July 26, 2016

TNPTF news

சுற்றறிக்கை
தோழர்களே,
                மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள TR சுப்ரமணியம் குழுவின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடத்திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், மாணவர்அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் வரும் 30/07/2016 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கல்வி நலன் காப்பதில் அதிகமான பங்கு உள்ளதால் நடக்கவிருக்கும் சென்னை கருத்தரங்கத்தில் வட்டாரச்செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்திட வேண்டும். கலந்து கொள்ள வரும் தோழர்கள் சென்னை மாநில அலுவலகத்தில் வருவதை கூடுமானவரை தவிர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செ. பாலசந்தர், பொதுசெயலாளர். TNPTF.

Monday, July 25, 2016

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்: கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு


தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.

சென்னையில் அவர்திங்கள்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- 23 ஆசிரியர், மாணவர்களின் சங்கங்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்துள்ள 200 பக்கப் பரிந்துரைகளில் பல அம்சங்கள் விவாதத்துக்குரியன.

எனவே, கல்வியாளர்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து வரைவு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் கருத்துக் கேட்டறிய 3 மாத கால அவகாசம் வேண்டும். இதற்காக புதிய வரைவு கொள்கை குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால், அதை எதிர்த்து பிரசாரம் செய்வோம்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-இல் திருச்சியில் 3,000 பேரைத் திரட்டி கோரிக்கை மாநாடும், 30-இல் சென்னை லயோலா கல்லூரியில் கருத்தரங்கமும் நடைபெறும் என்றார். பேட்டியின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் மோசஸ் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அளவிலான கருத்தரங்கம்

Tuesday, July 05, 2016

'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்


தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கல்வித் துறையில் ஆசிரியர்கள் நலன் கருதி, 2001 முதல் 'ஒளிவு மறைவற்ற மாறுதல் கலந்தாய்வு' நடத்தப்படுகிறது. துவக்கத்தில் பல குளறுபடிகள், அரசியல் தலையீடு, ஒரே இடத்தில் இருவர் நியமனம், காலியிடங்கள் மறைப்பு, மறைக்கப்பட்ட இடங்களுக்கு 'பேரம்' என கல்வித் துறையில் 'கலகலப்பு' இருந்தாலும், இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு பெரிய அளவிலான புகார்கள் இன்றி கவுன்சிலிங் நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் பொது 'கவுன்சிலிங்' அதைத் தொடர்ந்து பதவி உயர்வு 'கவுன்சிலிங்' முடிந்த பின் தான் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டில் நிம்மதியே இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் 'கவுன்சிலிங்' நடத்தப்படும்.
அப்போது தான் கற்பித்தல் பணியிலும் தொய்வு ஏற்படாது. ஆனால் தற்போது, ஜூலை முதல் வாரம் கடந்தும் இதுவரை 'கவுன்சிலிங்'கிற்கான விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் பெரும் குழப்பத்திலும் உள்ளனர். சொதப்பல்: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவால் 2001ம் ஆண்டில், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறை, தமிழக கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காலதாமத பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கல்வி பாதிக்கிறது. அதிகாரிகள் முன் கூட்டியே திட்டமிட்டு உரிய நேரத்தில் 'கவுன்சிலிங்' நடத்த முன்வர வேண்டும். இந்தாண்டு விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், "கவுன்சிலிங் நடக்காததால், ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் இருந்தும் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை. விரைவில் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்