இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 22, 2018

10ம் வகுப்புக்கு இன்று, 'ரிசல்ட்' : வரும், 28ல் தற்காலிக சான்றிதழ்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிந்தது.

இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவு வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும்.

தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் தேவைப்படுவோர், நாளை முதல், 26ம் தேதி, மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான, உடனடி துணை பொதுத்தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து, புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment