இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 10, 2018

தென்னக ரயில்வே அறிவிப்பு

இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு

   தவிர்க்க முடியாத காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. 

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதே போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment