இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 09, 2017

அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வு மாணவர்கள் குழப்பம்


தேசிய திறனாய்வு தேர்வு அரையாண்டு தேர்வு காலத்தில் நடக்க உள்ளதால் 8ம் வகுப்பு மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வு(என்எம்எம்எஸ்), மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 6,995 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 180 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

இட ஒதுக்கீடு அடிப்படையில், கட்-ஆப் மதிப்பெண் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு, மாதம் 500 என்ற கணக்கில் இடைப்பட்ட காலத்தில் 12 ஆயிரம், பிளஸ் 2 முடித்த பின்னர் 12 ஆயிரம் என மொத்தம் 24 ஆயிரம் வழங்கப்படும். இந்த ஆண்டு திறனாய்வு தேர்வு டிச.9ல் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிச.16க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டிச.18 முதல் டிச.22 வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டிச.11ல் தொடங்கி, டிச.22வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.

இதனால் டிச.16ல் நடக்க உள்ள திறனாய்வு தேர்விற்கு படித்து தயாராக முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். எனவே திறனறிதல் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் கூறுகையில், ‘‘அரையாண்டு தேர்வை கருத்தில் கொள்ளாமல் திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளனர். இதனால் திறனாய்வு தேர்விற்கு தயாராவது கடினம். மாணவர்கள் இத்தேர்விற்கு தயாராவதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

அரையாண்டு தேர்விற்கு படித்தால் முக்கியமான திறனாய்வு தேர்வில் அவர்கள் கவனம் செலுத்த முடியாது. திறனாய்வு தேர்வை பிற ஆண்டுகளில் நடந்ததுபோல் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கான தேர்வு பெறும் மாணவர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாக 6,995 பேர் என உள்ளது. இதை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment