இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 03, 2017

வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2018–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக்கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதோடு, இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண்களும், 3 கோடியே 98 ஆயிரத்து 268 பெண்களும், 5 ஆயிரத்து 242 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்கும். மொத்த மக்கள் தொகையில் 75.07 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வருகிற 7 மற்றும் 21–ந்தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வருகிற 8 மற்றும் 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

வருகிற ஜனவரி 1–ந்தேதி 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரைத்தவிர (அதாவது 18–25 வயதில் உள்ள மனுதாரர்கள்), ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும் கூட, தற்போதைய முகவரியில் வசித்துவரும் காலஅளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் அல்லது தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிடவேண்டும். பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர், மண்டல அலுவலகத்தில் படிவம் 1–ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளி நகலையும் சேர்த்து அளிக்க வேண்டும். தபாலில் அனுப்பப்படும்போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment