இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 11, 2017

அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு!


7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசின் நிதித்துறை செயலாளரான சண்முகம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தரப்பு அறிக்கையை முதல்வரின் முன்பாக சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரியும் தமிழக அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையில் 20% ஊதிய உயர்வு வழங்கலாம் என்ற பரிந்துரையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், எந்தெந்த படிநிலைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் அதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment