இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 11, 2017

புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம்: மு.ஆனந்தகிருஷ்ணன் தகவல்


புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிய பாடத் திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் கல்வித் துறையில் புதிய பாடத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கருத்தறியும் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த புதிய பாடத் திட்டக் குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான மு.ஆனந்தகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்றைய பள்ளி பாடத் திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத் திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாடத் திட்டம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மேல் படிப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கேள்வி, பதிலை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாமல் போகிறது. இதனால், உயர் கல்விப் பயிலச் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதை மாற்ற முதலில் மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமையை வளர்க்க வேண்டும். எனவே, மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்காலத் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும். மேலும், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டம் அமைக்கப்படும். அதில், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். இதில், பங்கேற்ற கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், புதிய பாடத்தில் என்னென்ன இணைக்க வேண்டும் என பாடத் திட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை, மனப்பாட முறையைப் பின்பற்றக்கூடாது, தொடக்கக் கல்வி முதலே ஆங்கிலத் திறனை அதிகரிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்பத் தேவையான பாடத் திட்டம், அரசியல், அரசு நிர்வாகம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் இணைக்க வேண்டும்.

அதேவேளையில், விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ் கூடுதல் முக்கியத்துவம், புத்தகச் சுமை குறைப்பு, வாழ்க்கைக் கல்வி, தொழிற்கல்விப் பாடங்களை நவீனப்படுத்துவது, தொழில் சார்ந்த தனிப் பயிற்சி, உளவியல் கல்வி போன்றவற்றை புதிய பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்வது குறித்தும் வலியுறுத்தப்பட்டது என்றனர்.

No comments:

Post a Comment