இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 31, 2017

*2017 ஆகஸ்ட்* *FLASH NEWS :* *தொடக்கக்கல்வி மாதம்தோறும் துவக்க/நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்/மாணவர் விவரங்களை [MR] இயக்குனர்* *அலுவலகத்திற்கு அனுப்ப* *உத்தரவு* *தொடக்ககல்வி* *இயக்குனர்.*

இன்றைய தி இந்து (1-7-17) இப்படிக்கு இவர்கள் பகுதியில் என் பதிவு

உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு

ஃபிரிட்ஜ் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை:
உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு!

பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

* வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரைக்கொண்ட குடும்பத்திற்கும், தொழில் வரி செலுத்துபவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் இல்லை. 

* மத்திய, மாநில அரசு ஊழியர்களூக்கும்  ரேஷன் பொருட்கள் இல்லை.

*  குளிர்சாதனப்பெட்டி  வைத்திருக்கும் குடும்பத்தினருக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* 3 அறைகளுக்கு மேல் வீடுகளை வைத்திருப்போருக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

*  நான்கு சக்கர மோட்டார் வாகனம்  வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

*  5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

*  ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை.

*  நகர்புறம் - அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.

*  வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

* விதவை, திருமணம் ஆகாத பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு பொருட்கள் உண்டு.

* நகர்புறம் - வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.

* நகர்புறம் - முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற பயனாளிகளுக்கு பொருட்கள் உண்டு.

வட்டி குறைப்பு

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு – பாரத ஸ்டேட் வங்கி

ரூ. 1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், ரூ.1 கோடிக்கும் அதிகமான சேமிப்புக்கு 4% வட்டி என்பதில் மாற்றமில்லை எனவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போரில் 90 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கும் கீழாகவே சேமிப்பு வைத்துள்ளனர்.பணவீக்க குறைவு மற்றும் அடிப்படை வட்டிவிகித உயர்வு ஆகிய காரணங்களால் இந்த வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த வட்டிவிகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் விலை 3% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 30, 2017

ஜேக்டோ ஜியோ பேரணி

பிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்


தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 450 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் பிளஸ்–1 மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் நாளைக்கு (அதாவது இன்று) வழங்கப்படும். இதற்காக 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம். அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

கனவு ஆசிரியர் பயிற்சி முகாமில் எழுத்தாளுமைகள் திரு ச.தமிழ்ச்செல்வன், திரு முத்துநிலவன் ஆகியோர்களுடன்

Saturday, July 29, 2017

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடுகள் வழங்கப்படும்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற, 54 ஆயிரம் வினா மற்றும் விடைத் தாள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வினாத்தாள் மாதிரி வெளியிடப்படும். மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ள திறமை மாணவர்களுக்கு ஏற்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Friday, July 28, 2017

பாடத்திட்ட மாற்றம்


''பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,'' என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார், மேலும்

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி இருக்குமோ என்ற அச்சம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது. எனவே, மாதிரி வினாத்தாள்கள், திங்கட்கிழமை வெளியிடப்படும். பின், தேர்வை எப்படி எழுதலாம் என்ற வழிமுறை உருவாக்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.

அதை மாற்றியமைக்க, கல்வியாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள், இன்னாள் துணைவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். கல்வியில் முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவதற்கு ஏற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.வரும், 2018- -19ம் கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2019 - -20ம் கல்வியாண்டில், 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 2020 - -21ம் கல்வியாண்டில், 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. இதற்காக, 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தயார் செய்து வருகிறோம்.'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

*DEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களை உட்படுத்துதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு*


கோரி முதல் மோடி வரை

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
👉
1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
  1211  : அல்தமிஷ்
  1236  : ருக்னுத்தீன் ஷா
   1236  : ரஜியா சுல்தானா
    1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
     1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
      1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
      1266  : கியாசுத்தீன் பில்பன்
       1286  : ரங்கிஷ்வர்
        1287  : மஜ்தன்கேகபாத்
         1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்)

கில்ஜி வம்சம்
1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :2 அலாவுதீன் கில்ஜி
  1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா
   1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
    1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்

1320  :கியாசுத்தீன் துக்ளக்(1)
1325  : (2) முஹம்மது பின் துக்ளக்
1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக்
1388  : (4) கியாசுத்தீன் துக்ளக்
1389  : அபுபக்கர் ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா(7)
1394  :(8) நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :1.கஜர்கான்
1421  :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434  : 3.மு3 முஹம்மது ஷா
1445  :4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி

1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
  1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி
1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
  1628  :ஷா ஜஹான் 
   1659 : ஒளரங்கசீப்
   1707 :ஷாஹே ஆலம்
   1712  :பஹாத்தூர் ஷா
    1713 :பஹாரோகஷேர்
    1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
  1754  :ஆலம்கீர்
   1759 :ஷாஹேஆலம்
   1806 :அக்பர் ஷா
    1837 :பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி

1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ; லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட்
1910 :லார்டு சார்லஸ்
  1916 :லார்ட் பிடரிக்
  1921 : லார்ட் ரக்ஸ்
   1926:.லார்ட் எட்வர்ட்
   1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
  1936 :லார்டு ஐ கே
   1943:லார்டு அரக்பேல்
     1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

🇮🇳சுதந்திர இந்தியாவின் ஆட்சி🇮🇳
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
  1966:குல்சாரிலால் நந்தா
   1966: இந்திராகாந்தி
   1977: மொராஜி தேசாய்
    1979: சரண்சிங்
     1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. PN ராவ்
1992:A.B.வாஜ்பாய்
1996:  A.Jகொளடா
1997:L.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

CCE- 1 to 9th Standard Materials

Click below

http://www.trbtnpsc.com/2013/09/9th-standard-materials.html?m=1

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.

அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி


சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும்.

அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும். இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும். இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் மீது 2 மாதங்களில் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி


மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவின் பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசில் பணியாற்றும் 15 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 7 }ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

இடைக்கால நிவாரணத்தைப் பொருத்த அளவில் அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்வர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப் பொருத்தவரை, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையைப் பெற்ற பிறகு, அந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராயும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் 7 }வது ஊதியக் குழு பரிந்துரைகளை ஆராய மாநிலத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அனைத்து வகைப் பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

G.O.No.227, DATED.28.07.2017 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued.

Click below

https://app.box.com/s/bu1vi8merb5a872esotwnnf9mpie6t84

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

Click below

https://www.tnpsconline.com/TNPSCACGRP2ALive/FrmLogin102017.aspx

பணியிட நிரவல் சார்ந்த செயல்முறைகள்


Thursday, July 27, 2017

பூலுவபட்டி ஸ்மார்ட் ஸ்கூல்

10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத வராதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த ஆண்டு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை 6ம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகிறது. தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய இருநாள்களில் நேரில் சென்று உரியக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மொழிப்பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப்பாடத்துக்கு ரூ.205 என மறுகூட்டலுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு தொடர்பான செயல்முறைகள்-25%

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சரவீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, July 26, 2017

இந்த ஆண்டு புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் tirupur dist (Sanctioned post)

Click below

https://app.box.com/s/bu1vi8merb5a872esotwnnf9mpie6t84

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:

அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும் மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.

அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெற வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்

உடற்கல்வி, ஓவியம், தையல், ஆசிரியர்கள் அறிவிப்பு

Click  below

https://app.box.com/s/s0yxkkoby7bwwexocs8cfre8euv24t1f

💥JACTTO -GEO அமைப்பு சங்கங்கள் விவரம்





Tuesday, July 25, 2017

ஊரக திறனாய்வு தேர்வு

ஊரக திறனாய்வு தேர்வு - 2017 க்கான அறிவிக்கை வெளியீடு...

நோக்கம் : அரசு பள்ளி பயிலும் திறன் மிக்க மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் 100 மாணவர்களுக்கு உதவி தொகை

உதவி தொகை : 9 முதல் 12 வரை 1000 ரூபாய் மதாந்திர உதவி தொகை

தகுதி : 9ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும்

வருவாய் : 1 லட்சம் மிகாமல் குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்

பாடப்பகுதி : 9 ம் வகுப்பு வரை MAT + SAT

விண்ணப்ப தேதி : ஜூலை 24 முதல் ஆக 7 வரை

விண்ணபிக்கும் முறை : CEO அலுவலகம் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்

வழி : தலைமை ஆசிரியர் மூலம்

கட்டணம் : 10 ருபாய்

வாழ்த்துகள்