இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 04, 2017

41 அறிவிப்புகள் விரைவில் வெளியிடுது கல்வித்துறை


தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, ௪௧ வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.

இதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல் லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்
* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர் களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்
* அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி, 'ஸ்மார்ட் ஆய்வகம்' அமைக்கப்படும்
* அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, ஸ்மார்ட் அட்டைகள்
வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும். கல்வி உதவித் தொகையை, 'ஸ்மார்ட் அட்டை' மூலம், மாணவர் கள் பெறவும் வசதி செய்யப்படும்
* பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர் கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர் கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.
* 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப் படும்.அவற்றை, 'இ - லேர்னிங்' முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* திறந்து வைக்கப்படாத ஆசிரியர் இல்லங்கள் திறக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் ஆசிரி யர்கள் வசதிக்கு, ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்படும்
* ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு,ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக் கப்படுவார். அதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, ஆசிரியர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது
* விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப் படும்
* பள்ளியை துாய்மையாக வைத்திருக்க, வகுப்புக்கு இரண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் நியமிக்கப்படுவர்
* அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, கேரளாவின் ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13 ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர் களாக நியமிக்கப்படுவர்
* அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும். இதற்கு தனியாக இணைப்பு புத்தகம் வழங்க படும்
* பி.எட்., மற்றும் 'டெட்' முடித்து காத்திருப் போரில், 7,500 பேர் அரசு பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இவர்கள் பணியாற்றுவர்
* ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்படுவர்
* அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படும்
* பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்
* மாணவர்களுக்கு இந்த ஆண்டே, மூன்று வண் ணங்களில், கவர்ச்சியான புத்தகப்பை வழங்கப்படும்
இவை உட்பட, 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறின

No comments:

Post a Comment