இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 19, 2017

3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை


தமிழகத்தில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினித் திறன்களை அடைவது அவசியம். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் அளிக்கப்படும். இதற்கென அரசுக்கு ரூ.437.78 கோடி செலவு ஏற்படும்.

இயக்ககத்துக்கு புதிய கட்டடம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களைப் பயிற்றுவிக்கும் வகையில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவிடப்படும். பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்தது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் என்ற பெயரில் அழைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.39 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்

No comments:

Post a Comment