இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 09, 2017

எண்ணிக்கை 24ல் இருந்து 20 ஆக குறைப்பு : பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் காலை 12 விடைத்தாள், மதியம் 12 விடைத்தாள் என நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும். 200 மதிப்பெண்களுக்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதால், குறிப்பிட்ட நேரத்தில் 12 விடைத்தாள்களை சரியாக திருத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறுவதாக கூறப்படுகிறது. அவசர கதியில் திருத்துவதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், உரிய முறையில் விடை மதிப்பீடு செய்ய முடிவதில்லை எனவும் ஆசிரியர்கள் புலம்பிவந்தனர்.

குறிப்பாக மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும்போது, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் தெரிய வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் திருத்தப்படும் 24 விடைத்தாளில் இருந்து, 4 விடைத்தாள் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு மற்றும் கல்வித்துறையிடம் சில வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடப்பாண்டும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, காலை 10 பேப்பர், மதியம் 10 பேப்பர் என நாள்தோறும் 20 விடைத்தாள் திருத்தினால் போதும் எனவும், 4 விடைத்தாள்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். மேலும் முதல் முறையாக கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அதே கல்வி மாவட்டத்தில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றவும் அனுமதி அளித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 விைடத்தாள் திருத்தும் பணியில் நாள்தோறும் 20 விைடத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துகின்றனர். உயிரியல் விடைத்தாள்களை காலையில் 8ம், மாலையில் 8ம் என திருத்துகின்றனர். கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment