இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, March 06, 2017

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:

நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது. சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment