இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 05, 2017

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை


பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதிய பிறகு அனைத்து விடைகளையும் அடித்துவிட்டு விடைத்தாள் கொடுக்கும் மாணவ, மாணவியர் அடுத்த 2 தேர்வுகளை எழுத முடியாது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் ெதாடங்க உள்ளது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது.

பொதுத் தேர்வை குளறுபடிகள் இல்லாமல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும், தேர்வு மையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சில தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம் காட்டினால்தான் அடுத்த ஆண்டு அதிக அளவில் அந்த பள்ளியில் சேர வருவார்கள் என்ற வணிக நோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கு உரிய பாடத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். அதனால், மதிப்பெண் குறையும் என்று தெரிந்தால், விடைகளை அடித்துவிட்டு விடைத்தாளை கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம் என்றும் ஆலோசனை கூறி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுதிய பிறகு விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் பேனாவால் அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து விவரங்களை அறைக் கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உடனடியாக தேர்வுத் துறை இயக்குநருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment