இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 31, 2016

உதவி தொடக்ககல்வி அலுவலர் மாறுதல் தொடர்பான செயல்முறைகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான பதிவுகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களை தொகுத்து வழங்க வேண்டும், ஆதார் பதிவு ெசய்யும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்க கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்


துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப் படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு


பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர்.

அரசு பொது தேர்வுகளில், சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுவதில்லை. மாறாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றனர்.வரும் கல்வியாண்டிலாவது ஒவ்வொரு மாவட்டமும், மாநில அளவில் ரேங்க் எடுக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள் துவங்கும் நேரம், முடியும் நேரத்திற்கு முன், காலை, மாலை, 45 நிமிடங்கள் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வாரம் ஒரு முறை கட்டாய தேர்வு நடத்தவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

புதிய கல்விக்கொள்கை;கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின் நெடும் பயணம் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வேத கல்வியாகத் தொடங்கி, காலம்தோறும் சீர்திருத்தங்கள், பல்வேறு திணிப்புகளைக் கடந்து, காலனியாதிக்கக் காலத்தில்தான், கல்வி என்பது அனைத்து சமூகத்தினருக்குமானது என்ற எண்ணம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியது.

கல்விக்குச் செய்யும் செலவுக்கு அழிவு என்பதே இல்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த சென்னை மாகாண ஆளுநர் தாமஸ் மன்றோவின் காலத்திலும்கூட, சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் இருப்பவருக்கு கல்வியைக் கொடுத்துவிட்டால் அவர்களிடம் இருந்து அது பரவி கீழ்நிலையில் இருப்பவர்களையும் அடைந்துவிடும் என்றே நம்பப்பட்டது.

1835-ல் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்த மெக்காலே பிரபுகூட, நிறத்தாலும், உருவத்தாலும் இந்தியராக இருந்தாலும் குணத்தாலும், அறிவாலும் ஆங்கிலேயராக இருக்கக் கூடிய ஒரு வர்க்கத்தையே உருவாக்கும் எண்ணம் கொண்டவராகவே இருந்தார்.

இவ்வாறு சிலரின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு எடுத்துச் செல்லப்பட்ட கல்வி, சமூகத்தில் வாழும் அடித்தட்டு ஏழை, எளிய, ஒதுக்கப்பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான பார்வை நிலைக்கு மாற மேலும் சில பத்தாண்டுகள் தேவைப்பட்டன.

அனைவருக்குமான கல்விக்கு முக்கியத்துவம் வேண்டும் என்ற கோரிக்கை 1890-களில் மிகுந்த எதிர்ப்புகளுக்கு இடையே ஜோதிராவ் புலே போன்றவர்களிடம் இருந்து எழுந்தது.

அனைவருக்குமான தொடக்கக் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் ஒரே எண்ணம், எல்லோரும் பள்ளியை நோக்கிச் சென்றுவிட்டால், இதர வேலைகளை யார் செய்வது என்பதாகவே இருந்தது. அரசியல் சாசனத்தில்கூட கட்டாயமாக கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற பிரிவில் சேர்க்கப்படாமல், அது வழிகாட்டும் நெறிமுறைகளில் மட்டுமே கடந்த 2009 வரை இருந்து வந்தது.

அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மேலவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மசோதா நிறைவேறிய போது அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே வெறும் 60-க்கும் கீழ்தான் என்று அறிகிற போது, ஆளும் வர்க்கமும், அதன் அங்கத்தினரான அரசியல்வாதிகளும் பொதுக் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிகிறது.

1968-ல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் சம வாய்ப்பைக் கோரியது. இருப்பினும், 1986-இல் உருவாக்கப்பட்ட முதலாவது புதிய கல்விக் கொள்கைதான் இந்தியாவில் கல்விப் புரட்சிக்கு (?) வித்திட்டது. புற்றீசல்போல தோன்றிய தனியார், சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் நவோதயா, கேந்திரிய வித்யாலயங்கள் யாவும் கல்வியை ஓர் அடிப்படை உரிமை என்பதில் இருந்து மெல்ல மாற்றி, வணிகமயமான, ஆடம்பரத்தைப் பறைசாற்றும் பொருளாக மாற்றத் தொடங்கின.

தொடக்கக் கல்வியைக்கூட முழுக்க தாய் மொழியில் பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் இந்திய கல்வி அளித்திராத இந்த நிலையில்தான், இந்தியாவின் புகழ் வாய்ந்த தொன்மையை அறிவது, குடிமைப் பண்பு, சகிப்புத்தன்மை, பன்னாட்டுக் குடிமைப் பண்பு போன்றவற்றை உருவாக்குவது போன்ற கோஷங்களை முன்வைத்து தேசிய கல்விக் கொள்கை- 2016 எழுந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான சில விவாதத் தலைப்புகளை கடந்த 2015 ஜனவரியில் வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்தத் தலைப்புகளில் நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியும், 29 ஆயிரம் பேரிடம் கருத்துகளைப் பெற்றிருப்பதாகவும் பின்னர் கூறியது.

மேலும், இந்தக் கருத்துகளைத் தொகுத்து அறிக்கையாக வழங்க 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டாலும், அதில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், அந்த அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தகவல்களை வெளியிட்டது. இதன் மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ரகசியமாகவே இருப்பதும், அதன் முன்மொழிவுகளில் உள்ள பெரும்பாலான கருத்துகளும் தங்களுக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கடந்த ஆண்டு வெளியான விவாதத் தலைப்புகளிலேயே தற்போதைய கல்வி முறையின் அடிப்படைத் தன்மையையும், நோக்கத்தையும் மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதை ஓரளவு உணர முடிந்தது. ஆனால், மக்களின் கருத்தை அறிந்து கொள்ளாமலேயே அவசர அவசரமாக, ஒரே ஒரு கல்வியாளரை மட்டுமே உள்ளடக்கிய குழு தயாரித்த அறிக்கை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

அந்த அறிக்கையின் ஆபத்துகளைத்தான் நாங்கள் இப்போது மக்களுக்கு விளக்கி வருகிறோம். அந்த அறிக்கையானது பொதுமக்களுக்கான பரிவுடன் உலகப் பார்வையுடன் ஒத்துப்போகும் தீர்வுகளை முன்வைக்காமல், ஒரு நிர்வாகியின் சிந்தனைப் போக்கில் இருந்து கல்வியைப் பார்ப்பதாக உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முன்பருவம் முதல் மேல்நிலைக் கல்வி வரை பெறுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்ய வேண்டும். ஆனால், கல்வி அமைப்பு இப்போது சீர்குலைந்திருப்பதற்கான காரணங்களை அது புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ள பல குறிப்புகள் மிகவும் பொதுவானவையாகவே உள்ளன.

கல்வித் துறையின் முக்கிய சவால்கள் என்ற அத்தியாயத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்பதை முதலில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், ஆசிரியர்கள் தொல்லை தரக் கூடிய ஊழியர்களாகவும், சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.

அதுபோல, கல்வியின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசுகளே காரணம் என்பதாகவும், இந்த பிரச்னைகளை தீர்க்கும் சக்தி மத்திய அரசிடம் மட்டுமே இருப்பதாகவும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்கத் திட்டமிடும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர, வேலைவாய்ப்பு பெறும் தன்மை குறித்து திரும்பத் திரும்ப கூறப்படுவது, மனித வளத்தை வெறும் உற்பத்தி சக்தியாக மட்டும் பார்க்கும் போக்கு, கற்றலின் திறனை வெளிப்படுத்த முடியாத மாணவர்களை தொழில் கல்விக்குத் தள்ளிவிடுவது, மேல்தட்டு வர்க்கத்தினரை இந்திய கல்விச் சந்தையின் அதிகாரிகளாக மாற்றுவது, சம்ஸ்கிருதம், வேதம், புராண மரபுகளைக் கற்பித்து, மக்களின் சிந்தனையை நூறாண்டுகளுக்குப் பின்தள்ளுவது எனப் பல புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும் களமாகவே அது உள்ளது என்கிறார் அவர்.

சந்தேகமின்றி இந்தியாவுக்கு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. ஆனால், அது கல்வித் துறையில் நீண்டகாலமாக உள்ள பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி. "பல துறைகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கல்வியில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி முறை உள்ளிட்டவையே இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதாக புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

அதேபோல, புதிய தலைமுறைக்கான வழிகாட்டல், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டுவதாகவும், நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடிய புதிய பார்வையை அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் அது, சமத்துவ வாய்ப்புகளை அழிப்பதாகவோ, சமூகப் பிளவை உண்டாக்குவதாகவோ, அறிவியல்பூர்வமான, ஜனநாயக நெறிமுறைகள், பொதுக் கல்வி அமைப்பு முறை போன்றவற்றை சிதைப்பதாகவோ, குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதாகவோ, பன்னாட்டு நிறுவனங்களுக்கான கூலிப் பட்டாளங்களை உருவாக்குவதாகவோ இருந்துவிடக் கூடாது' என்றார் அவர்.

Saturday, July 30, 2016

புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகங்கள்

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது. அதன் விபரம்:

* காலிப் பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல் செய்ய வேண்டும். ஒரு ஆசிரியருக்கு மாறுதல் தருவதற்காக, எக்காரணம் கொண்டும், மற்றொரு ஆசிரியரை மாற்றக் கூடாது

* காலியிடங்கள் விபரம், ஆதிதிராவிடர் நல இயக்குனர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத் தகவல் பலகையில், கலந்தாய்வு நடப்பதற்கு, மூன்று நாட்களுக்கு முன் ஒட்ட வேண்டும்

* ஆசிரியர்கள், தங்களுடைய விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள், கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது

* கணவன் அல்லது மனைவி திடீரென விபத்திலோ அல்லது நோய்வாய்பட்டோ இறந்தால், அத்தகைய ஆசிரியர்கள் குறித்த நிகழ்வுகளில், விதிமுறைகளை கடைபிடிக்காமல், மாறுதல் வழங்கலாம்

* மாணவியர் விடுதிக்கு காப்பாளர்களாக, பெண்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும். ஆண்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கக்கூடாது

* கலந்தாய்வு நாளன்றே மாறுதல் உத்தரவு அளிக்கப்பட வேண்டும்

* ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பட்டதாரி ஆசிரியர்கள், விடுதி காப்பாளராக நியமனம் செய்யப்பட கூடாது

* அனைத்து பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை, ஆக., 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு


அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, நாளை முதல், ஆக., 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், சீமாட்டி வெலிங்டன் கல்லுாரியில் கிடைக்குமாறு, தபாலிலோ, நேரிலோ அளிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட, 13 பாடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், 1,200 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அதில், 20 சதவீத இடங்களுக்கு, இந்த ஆண்டு முதல், பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதுகுறித்து, சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி முதல்வரும், பி.எட்., மாணவர் சேர்க்கை செயலருமான பேராசிரியை தில்லைநாயகி கூறியதாவது: சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில், தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதி வெளியிடப்படும். அடுத்த மாதம், மூன்றாம் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இன்ஜினியரிங் பட்டதாாரிகள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடத்தை படித்திருந்தால் மட்டுமே, பி.எட்., படிப்பில் சேர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

எங்கே கிடைக்கும்? : சென்னையில், சீமாட்டி வெலிங்டன், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மற்றும் கோவை, ஒரத்தநாடு, குமாரபாளையம், புதுக்கோட்டை மற்றும் வேலுாரில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் இன பட்டதாரிகள், ஜாதி சான்றிதழ் நகலுடன், 250 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்கள் பெறலாம்.

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை


தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாது விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில் கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங் செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும் ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது

கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் ந்டைபெறுகிறது - இயக்குனர் செயல்முறை

தொடக்கக்கல்வி - 25.09.2016 குள் அனைத்து 5+ மாணவர்களுக்கும் ஆதார் - கண்காணிக்க NODAL OFFICERS நியமித்து இயக்குனர் உத்தரவு -

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அளவிலான சென்னை லயோலா கல்லூரியில் TNPTF பொதுச்செயலாளர் தோழர் செ.பாலச்சந்தர்

Friday, July 29, 2016

41 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்


பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் காலிப் பணியிடங்கள், அதற்கு இணையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களாக 41 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் குறித்த விவரம்

1. என்.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர்,திருவாரூர்

2. மு.மணிமேகலை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்,தஞ்சாவூர்

3. எம்.எஸ்.மல்லிகா, மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்

4. ஆர்.கலைச்செல்வன், மாவட்டக் கல்வி அலுவலர், கோபிசெட்டிப்பாளையம்

5. ஆர்.சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சி

6. பி.வி.சாவித்திரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,திருவாரூர்

7. இ.மொக்கத்துரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தேனி

8. கே.வீரேஸ்வரன்நாயர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நாகர்கோவில்

9. கே.சங்கரநாராயணன், மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்

10. எஸ்.தமிழரசி, மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு

11. ஆர்.சௌந்தரநாயகி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தூத்துக்குடி

12. எஸ்.கற்பகவல்லி, மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்

13. ஏ.கே.கங்காதரரெட்டி, மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி

14. ஆர்.லோகநாதன், மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி

15. கா.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி

16. என்.விசாகமூர்த்தி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், காஞ்சிபுரம்

17. ஜி.லில்லிபுஷ்பராணி, மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்

18. கே.தேன்மொழி, மாவட்டக் கல்வி அலுவலர், கோவை

19. கே.அருளரங்கன், மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்

20. என்.சரஸ்வதி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை

21. சி.செல்வராசு, மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி

22. எம்.பரிமளம், மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை

23. இ.செந்தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை

24. ஆர்.எத்திராஜூலு, மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை வடக்கு

25. அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்

26. ஆர்.எடிசன், மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை கிழக்கு

27. ஐ.முகம்மதுஅயூப், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சி

28. எஸ்.ஆஷா கிறிஸ்டி எமெரால்ட், மாவட்ட தொடக்க கல்விஅலுவலர், நாகப்பட்டினம்

29. ஏ.செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி

30. கே.தங்கவேல், மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்

31. டி.பாலசுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி

32. எஸ்.முருகேசன், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை

33. ஆர்.ஜெயபாண்டி, மாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி

34. எம். செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர்

35. எஸ்.வளர்மதி, மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை

36. ஜி.ஜெயராஜ், மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மகாதேவி

37. எம்.அன்புக்கரசி, ஒருங்கிணைப்பாளர், எஸ்எஸ்ஏ, சென்னை.

38. அ.ராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்

39. எம்.எஸ்.உமா, மாநகராட்சி கல்வி அலுவலர், கோவை

40. மு.வேலம்மாள், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர், விருதுநகர்

41. த.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்