இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 20, 2016

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்..கல்விக்குழு பரிந்துரை

8ம் வகுப்புக்கு தனித் தேர்வு கட்டாயம்.. ஆல் பாஸ் கூடாது.. கல்விக் குழு பரிந்துரை

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.

இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.
மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment