இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 12, 2016

விண்ணப்பித்த 4 நாள்களில் பாஸ்போர்ட்


விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து கூறியதாவது:

விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்சர் (ஐ-அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். தத்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறானது பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக "மொபைல் போலீஸ் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. "மொபைல் போலீஸ் ஆப்' என்ற செயலியின் மூலம் காவல் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல் துறை சான்றொப்பம் வழங்குவார்கள். இந்த புதிய செயலியின் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்தத் திட்டம் ஒருமாத காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுôர் ஆகிய மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவை மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை மண்டல் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து பத்தாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள். புதிய பாஸ்போர்ட் அதிகாரி: தற்போது ஆளுகை மற்றும் பொதுக்கொள்கை மேற்படிப்புக்காக ஓராண்டுக்கு நான் இங்கிலாந்து செல்லவுள்ளேன். இதைத் தொடர்ந்து, பி.அசோக் பாபு சென்னை மண்டலத்தின் புதிய பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்றார் பாலமுருகன்.

No comments:

Post a Comment