இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 16, 2016

உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி ஆக. 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்

சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் ஆணையர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்த தேவையான நிதி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சேலம் மாவட்டத்திற்கு நிதி கோரப்பட்டுள்ளது. சிக்கனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை, கடந்த தேர்தலை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 4,119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. குடிநீர், மின்சாரம் மற்றும் மழைநீர் உள்ளே புகாத வகையில் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தகுந்தவாறு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். பெண்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து மாநில அரசு முடிவுசெய்யும். தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment