இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 11, 2016

பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு


அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்குமான பேறுகால விடுப்பை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் மசோதா, அனைத்து கட்சிகளின்ஆதரவுடன், ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, தற்போது, 26 வாரங்கள், முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில், 12 வாரங்கள் மட்டுமே, பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
போதிய அளவில் பேறுகால விடுப்பு வழங்காததால், பிறந்த குழந்தைகள் தாய் பாலின்றி ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளாவது, பெண்கள் பணிக்கு வருவதில் ஏற்படும் சிக்கல் போன்ற பிரச்னைகள் இருந்து வருகின்றன.

மாற்றம் செய்ய...:
இதையடுத்து, 'அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பெண்களின் பேறுகால விடுப்பை, எட்டு மாதங்கள் வரை உயர்த்த வேண்டும்' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு பரிந்துரையும் அனுப்பப்பட்டது.

இதை ஏற்று, பேறுகால விடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்ய, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. அதன்படி, தனியார் உட்பட அனைத்துத் துறைகள், நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, 26 வாரங்கள் பேறுகால விடுப்பு அளிக்க வகை செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மசோ தாவை தாக்கல் செய்து, பேசியதாவது:
அமைப்பு சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும் பணி யாற்றும் பெண்களின், மகப்பேறு விடுமுறையை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்த மசோதா வகை செய்கிறது; அந்த காலத்திற்கு, முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள, 10 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயனடைவர்; பெண்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். பாலுாட்டாத காரணத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.

வேலை வாய்ப்பு:

அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தன. மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சில எம்.பி.,க்கள்., 'தொழில் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பையும், வேலை வாய்ப்பை யும் உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் தேவை' என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அனைத்து கட்சி எம்.பி.,க்களின் ஆதரவுடன், இந்த மசோதா, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

வேதனையான காலம்:

பேறு காலம் என்பது பெண்களுக்கு விடுமுறை காலம் அல்ல; மிகவும் வேதனையான காலம். இதனால் தான், பேறுகால விடுப்பை உயர்த்த வேண்டும் என பெண்கள் கோரி வந்தனர். மசோதா நடைமுறைக்கு வந்தால், பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேனகா, மத்திய அமைச்சர், பா.ஜ.,

விடுப்பு கட்டாயம்:

அரசு துறைகளில் உள்ளது போல், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும், 26 வார மகப்பேறு விடுப்பு என்பது வரவேற்கத் தக்கது. குழந்தைகளுக்கு ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும் என, அறிவுறுத்துகிறோம். விடுப்புகொடுக்காமல், அது சாத்தியமில்லை. இவற்றை, தனியார் நிறுவனங்கள், சரியாக நடைமுறைப் படுத்துகின்றனவா என, அரசு கண்காணிப்பதும் அவசியம்.

டி.ஜோதி மகப்பேறு மருத்துவர், மதுரை

ஓராண்டு வேண்டும்:

தனியார் நிறுவனங்களிலும், பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு அளிப்பது வரவேற்கத் தக்கது. இதனால், குழந்தைகளின் நலனில், பெண்கள் கூடுதல் கவனம் செலுத்தமுடியும். அதே நேரத்தில், அரசு துறைகளில் பெண்களுக்கு வழங்கப்படும், 26 வார மகப்பேறு விடுப்பை, ஓராண்டாக அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

பி.பாலகிருஷ்ணன்

பொதுச்செயலர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

தாய்ப்பால் சேமிப்பு மையம்:

தமிழகத்தில், 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என்ற நடைமுறை, ஏற்கனவே உள்ளது; இதை 39 வாரங்களாக நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்ப்பால் வங்கி திட்டமும் உள்ளது. இதற்கென, தமிழகத்தில் ஏழு அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் சேமிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க., - எம்.பி.,

முக்கிய அம்சங்கள்:

* தனியார் உட்பட அமைப்பு சார்ந்த அனைத்து இடங்களிலும் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, 26 வாரங்கள் பேறு கால விடுமுறை வழங்கப்படும்
* பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்
* பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார

No comments:

Post a Comment