இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 18, 2016

தங்கப் பத்திரம் குறித்த தகவல்கள்


தங்கப் பத்திரங்கள் (SOVEREIGN GOLD BONDS) முதலீட்டை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இது வரைக்கும் மூன்று முறை இந்த கோல்டு பாண்டுகள் விற்பனை நடந்திருக்கிறது. நான்காம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, இன்று (2016 ஜூலை 18) தொடங்கி 22 வரை நடைபெறகிறது.

அதன் 10 முக்கிய அம்சங்கள்...

1. தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கான திட்டம் இது. இதில், இதற்கு முன் குறைந்தபட்சம் 5 கிராம்தான் வாங்க முடியும். இப்போது சிறு முதலீட்டாளர்களை கவரும் விதமாக ஒரு கிராம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

2. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 & 100 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்க முடியும். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்கலாம்.

Advertisement

3. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ. 3,119 (ஏறக்குறைய 24 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

4. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். முதலீட்டு நோக்கில் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதார இழப்பு இதில் இல்லை. தங்கத்தின் விலை ஏற்ற லாபத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% லாபம் கிடைக்கும்.

5. இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

6. முதிர்வில் விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரி கிடையாது. இந்தப் பத்திரங்கள் டீமேட் மற்று காகித வடிவில் கிடைக்கும்.

7. இந்தப் பத்திரங்களை கடனுக்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

8. ரூ.20,000 வரையிலான முதலீட்டை ரொக்கப் பணம் மூலமும் மேற்கொள்ளலாம். இதற்கு மேல் என்றால் டிடி, செக், இன்டர்நெட் பரிமாற்றம் தான்.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும்.

10. இந்தத் திட்டத்தில் பாண்ட் முதலீட்டை திரும்ப பெறும் தங்கமாக தரமாட்டார்கள். இது இந்தியாவில் தங்க பயன்பாட்டை குறைக்க வேண்டும், இந்தியாவின் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த நிபந்தனை. தங்க பத்திரங்களை திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாக தருவார்கள்.

- சி.சரவணன்

No comments:

Post a Comment