இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 15, 2016

புதிய கல்விக்கொள்கைக்கு சிறுபான்மை பள்ளிகள் அதிருப்தி


மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்வி கொள்கையால் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி கழகத்தின் செயலாளர் அருளப்பன், தமிழக ஆயர் பேரவை சட்டப்பிரிவு துணை செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு இந்தியாவில் கல்வி கொள்கையை மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி, வருகிற ஜூலை 31ம் தேதி புதிய கல்வி கொள்கையை வெளியிட இருக்கிறது. மத்திய அரசின் கல்வி கொள்கை நாட்டுக்கு பயன் அளிக்குமா? என்பதே எங்களின் கேள்வி. இந்தியாவின் புதிய கல்வி கொள்கை சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பாதகமாக அமையுமோ என்ற அச்சம் உள்ளது. காரணம், தேசிய கல்வி கொள்கை-2016 வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ சமூகம் முன்னிலையில் உள்ளது. ஆனால், வரைவு அறிக்கையில் கிறிஸ்தவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இது சிறுபான்மை சமூகத்தினரை அன்னியப்படுத்துவது போல் உள்ளது. புதிய கல்வி கொள்கையில் எல்ேலாருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஆனால், யோகா, சமஸ்கிருதம், குலக்கல்வி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிற மாதிரி வரைவு அறிக்கை உள்ளது. இது சிறுபான்மையினருக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை சமூகங்களின் உரிமை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை கீழ் நோக்கி போகக்கூடாது, உயர்ந்த இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். ஏதோ ஒரு சாயம் பூசப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு எங்கள் கருத்துக்களை அனுப்பி உள்ளோம். சர்வதேச அளவில் இந்திய கல்வி கொள்கை சிறப்பாக இருக்க வேண்டும். சிறுபான்மை பள்ளிகளை ஊக்குவித்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. புதிய கல்வி கொள்கை பற்றி இன்று சென்னையில் 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment