இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 08, 2016

பி.இ ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியீடு


பி.இ. படிப்பில் (2016-17) மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-இல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 24-ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை மே 31 வரையில் 2.53 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களில் 1,34,722 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், கலந்தாய்வு தேதிகள் குறித்து பதிவாளர் கணேசன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

ஜூன் 27 முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூன் 20-ஆம் தேதி ரேண்டம் எண்ணும், 22-இல் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படுகின்றன. 24-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அழைப்புக் கடிதம்: கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

பெயர், பிறந்த தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

இரண்டு முறை கட்டணம் செலுத்தியிருந்தால்...: விண்ணப்பதாரர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவ்வாறு கூடுதல் முறை கட்டணம் செலுத்தியவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அவர்கள் செலுத்திய கூடுதல் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்றார்.

வெளியூர் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடு

கலந்தாய்வுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தாய் அல்லது சகோதரிகளுடன் வரும் மாணவிகள் இந்த வசதியைப் பயன்படுத்திகொள்ளலாம். இதற்கான கோரிக்கையை பல்கலைக்கழக வாயில் பாதுகாவலரிடமோ அல்லது கலந்தாய்வு அலுவலகத்திலோ தெரிவிக்கலாம். உடனடியாக மாணவியர் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

No comments:

Post a Comment