இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 31, 2015

ப்ளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களில் மாற்றம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 30 பக்கங்களைக் கொண்ட கோடிட்ட தாளாக இருக்கும். இதில், HSC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

கணக்கியல் தேர்வுக்கு 46 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். இதில் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், 15 முதல் 46 பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். இதில், HSC- ACCOUNTANCY எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணினி அறிவியல் தேர்வுக்கு 32 பக்கங்கள் கொண்ட (30 பக்கங்கள் எழுதும் வகையில்) முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதில் HSC- COMPUTER SCIENCE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உயிரியல் பாடத்தில் உயிர்- தாவரவியல், உயிர்- விலங்கியல் என இரண்டு முதன்மை விடைத்தாள்களுக்கும் இரண்டு டாப் சீட் (Top Sheet) வழங்கப்படும். அவற்றை இரண்டு விடைத்தாள்களிலும் தனித்தனியாக வைத்து தைத்த பின்னர், துளைபோட்டு நூல் கட்டி ஒரே விடைத்தாளாக வழங்கவேண்டும். தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது, அவற்றை உரிய விடைத்தாள் பகுதியுடன் வைத்து 2 விடைத்தாள்களையும் ஒன்றாகச் சேர்த்து நூலினால் கட்டவேண்டும். மற்ற பாடங்களுக்கு 38 பக்கங்கள் எழுதும் வகையில் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த முதன்மை விடைத்தாளில் HSC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வரலாறு பாடத் தேர்வுக்கு ஓர் இந்திய வரைபடமும், புவியியல் தேர்வுக்கு ஓர் உலக வரைபடமும் வழங்கப்பட்டிருக்கும். இவற்றை 36, 37-ஆவது பக்கங்களுக்கு நடுவில் வைத்து தைத்து வழங்கவேண்டும். படத்துடன் கூடிய முகப்புச் சீட்டு உள்ளிட்டவை கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு. தேவராஜன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

10-ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 22 பக்கங்கள் எழுதும் வகையில் கோடிட்ட தாளாக இருக்கும். இதில், SSLC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 22 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாளுடன், 3 படிவங்களும் அச்சிட்டு வழங்கப்படும். இதில், SSLC TAMIL-II எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணிதம், அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 32 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். இதில், SSLC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சமூக அறிவியல் தேர்வுக்கு முதன்மை விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் நான்கு வரைபடங்கள் அச்சிடப்பட்டிருக்கும். மீதமுள்ள 26 பக்கங்களில் எழுதும்படி வழங்கப்படும். இதில், SSLC - Social Science எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

வாசிப்பு திறனை மேம்படுத்த பத்திரிக்கைகள் அவசியம்

அரசு பள்ளிகளில், மாணவர்களின், தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்த, தினமும் பத்திரிகைகள் வாங்க, தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும்' என, கல்வி துறை அதிகாரிகள் கூறினர்.

தலைப்பு செய்திகள்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க, பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், காலையில் அன்றாட தமிழ் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் வாசிப்பு பின்பற்றப்படுகிறது. மேலும், வகுப்பறை நேரம் தவிர்த்து, பிற நேரத்தில், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, நூலகத்தில் தமிழ், ஆங்கில பத்திரிகையை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தரவு உள்ளது. பத்திரிகை வாங்குவதற்கு என, பள்ளி மானிய நிதியில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல பள்ளி களில் பத்திரிகைகள் வாங்கப்பட்டாலும், காலை யில் வகுப்பு துவங்கியதும், செய்தி வாசிப்பது பெரும்பாலான பள்ளி களில் கடைபிடிப்பது இல்லை என்ற தகவல் வெளியாகிஉள்ளது.

கிராமப்புற பள்ளிகளை காரணம் காட்டி, சில தலைமை ஆசிரியர் கள், தங்களது வீடுகளில் காலை பேப்பர்களை வாங்கி விட்டு, அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது போன்ற சில குறைபாட்டால், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளிக்கும் மானிய நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை, பத்திரிகைகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்: தலைமை ஆசிரியர்கள் விரும்பினால், மானிய நிதியில் பிற செலவை குறைத்து, பத்திரிகைகளை வாங்கி, வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம். பத்திரிகைகளை படிக்க படிக்கத்தான், கிராமப்புற மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கும். ஒன்பதாம் வகுப்பு வரை முன்னேறிய சிலருக்கு கூட, வாசிப்பு திறன் குறைபாடு இருப்பதை அறிய முடிகிறது. வாசிப்பு திறனை வளர்க்க, தமிழ், ஆங்கில பத்திரிகை வாங்காத பள்ளிகளில், பத்திரிகைகள் வாங்க வலியுறுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Friday, January 30, 2015

10ஆயிரம் பேர் தேர்வு

10 ஆயிரம் பேர் தேர்வு
2015–ம் ஆண்டு குரூப்–1 அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். 2014–ம் ஆண்டு 15 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

*2015–ம் ஆண்டு பிப்ரவரி 2–வது வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த பணிக்கு 4 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26–ந்தேதி நடைபெறும்.

*குரூப்–2 நேர்முகத்தேர்வு உள்ள 904 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 3–வது வாரத்தில் வெளியாகும். முதல்நிலை எழுத்துத்தேர்வு மே மாதம் 10–ந் தேதியும், மெயின்தேர்வு செப்டம்பர் 26–ந் தேதியும் நடைபெறும்.

*குரூப் 3 நேர்முகத்தேர்வு கொண்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் 17–ந்தேதி நடத்தப்படும்.

மருத்துவர்கள்
* உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க பிப்ரவரி 2–வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இதற்கான தேர்வு மே மாதம் 31–ந் தேதி நடைபெறுகிறது.

*சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகிறது. தேர்வு ஜூன் மாதம் 14–ந்தேதி நடைபெறுகிறது.

*புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்) காலிப்பணியிடங்கள் 268 உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகும். தேர்வு ஜூன் 20–ந்தேதி நடைபெறும்.

குரூப்–1 தேர்வு
*47 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல் நிலைத்தேர்வு ஜூலை 5–ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5–ந் தேதி முதல் 7–ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

*564 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது) தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 2–வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்டு 16–ந்தேதி நடைபெறும்.

*வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்) காலிப்பணியிடங்கள் 36 உள்ளன. அந்த பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு ஏப்ரல் மாதம் 4–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 12–ந்தேதி நடைபெறும்.

கிராம நிர்வாக அலுவலர்
*கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் வந்து சேரவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதம் 4–ந் தேதி நடைபெறுகிறது.

*வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்) காலிப்பணியிடங்கள் 27 உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 31–ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3–வது வாரத்தில் வெளியாகும்.

* குரூப் –4 காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15–ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

TNPSC - POSTS INCLUDED IN GROUP-I SERVICES (PRELIMINARY EXAMINATIONS) RESULTS

Click below

http://www.tnpsc.gov.in/results/sel_fin_g1p2014_seldoc.pdf

TNPSC - ANNUAL RECRUITMENT PLANNER 2015 - 2016

Click below

http://www.tnpsc.gov.in/docu/Annual%20planner_30_01_2015.pdf

10 ஆயிரம் பணியிடம் அறிவிப்பு

“10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு

தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ளடி என்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத்துறை அதிகாரி, தொழிலாளர் நலத்துறை அதிகாரி, வேளாண் துறை துணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பபடும் என்றும் அவர் தெரிவித்தார். 2014 - 15 ஆம் ஆண்டில் 14ஆயிரத்து 252 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பால சுப்பிரமணியன் கூறினார்.

குரூப் - 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர் கடந்தாண்டு தேர்வு முறையே இந்தாண்டும் பின்பற்றப்படும் என்றார். உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் பின்பற்றப்படுவதாகவும் பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Thursday, January 29, 2015

பள்ளிகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வை தலைமை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும்

பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். அந்த கடிதம் விவரம் வருமாறு:-

பள்ளிகள் சுத்தம்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கியிருக்கும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுற்றப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரால் கள ஆய்வு மேற்கொண்டு பிப்ரவரி 6-ந்தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும்.

தொடர் காய்ச்சல்

மாணவ-மாணவிகள் தொடர்ந்து காய்ச்சலில் இருந்தாலோ அல்லது இது போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுதல் வேண்டும்.

இது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படின் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார ஆய்வு அலுவலருடன் தொடர்பு கொண்டு உடனடி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடல் வேண்டும். இது போன்ற நோய்கிருமிகள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தல் வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள்

தண்ணீர் தேங்குவதாலும் சுகாதாரமற்ற குடிநீரை உபயோகப்படுத்துவதாலும் ஏற்படக்கூடிய டெங்கு பிற வைரஸ் காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நோய்களின் தாக்குதலை தவிர்க்க பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

1. அனைத்து பள்ளி வளாகத்திலும் எந்த இடத்திலும் நீர்தேங்காதவாறும், நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிவு நீர் தொட்டிகள் அனைத்தும் திறந்த நிலையில் இல்லாதவாறு அவற்றை மூடி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கால்வாய்

2. பள்ளி வளாகத்தினுள் உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்து மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படவேண்டும்.

4. குடிநீர் குழாய்களை மாணவர்கள் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படும் உபரி நீர் தேங்காதவாறு கால்வாய்கள் அமைத்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டெங்கு குறித்து விழிப்புணர்வு

5. அவ்வப்போது வகுப்பாசிரியர்கள் மூலம் டெங்கு குறித்தான விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

6. கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது குறித்தும், இவற்றிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை மாணவ - மாணவிகளிடம் ஏற்படுத்தவேண்டும். இறைவணக்கத்தின்போதும், வகுப்புகளிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

7. பள்ளி வளாகங்களில் உள்ளரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

8. பள்ளி வளாகத்திற்கு அருகாமையில் (வெளிப்பகுதியில்) சிறு பள்ளங்கள், பயன்படுத்தப்படாத கிணறுகள் இருப்பின் அவற்றில் நீர் தேங்குவதன் மூலம் அவற்றிலிருந்து நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, அவ்விடங்களை பற்றிய விவரங்கள் அருகாமையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தெரிவித்து அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.

மஞ்சள்காமாலை

9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரினால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும், தொற்றுநோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்துதல் வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கருவூல கணக்குத் துறை இயக்குநர் எஸ்.முனியநாதன் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:

கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கான மாநில கணக்காயரின் ஆய்வறிக்கையில் சில மாவட்ட கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியர்களுக்கு மிகையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட ஓய்வூதியம் மாநில கணக்காயரால் அல்லது துறை ஆய்வு அலுவலரால் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உடனடியாக பிடித்தம் செய்யாமல் நீண்ட காலம் கடந்துள்ளது. இந்தச் செயல்பாடுகள், அரசுக்கு வீணான பண இழப்பினை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், மிகையான ஓய்வூதியம் வழங்கப்பட்ட சம்பவங்களில் அவற்றை பிடித்தம் செய்வதற்கு முன்பாக சில அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய சரியான தொகைக்கு அதிகமாக தொகை வழங்கப்பட்டதாக தெரிய வந்தால், அதனை திருப்பிச் செலுத்துவதாக உறுதிமொழி அளிக்கின்றனர்.

இதற்கான படிவம் 5 ஆகும். அதன் அடிப்படையில், மிகையாக பெறப்பட்ட ஓய்வூதியத் தொகையை ஓய்வூதியதாரர்கள் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள். இதனை தொடர்புடைய ஓய்வூதியதாரர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

மிகையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அது எந்த இடத்தில் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்து, அதனை உடனடியாக பிடித்தம் செய்வது குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஓய்வூதியதாரரிடம் இருந்து பதில் கிடைக்காவிட்டால் பிடித்தம் செய்வதற்குரிய உத்தரவை வெளியிட்டு அதன் நகலை அவருக்கு அனுப்ப வேண்டும்.

மிகை ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரருக்கு பதிவஞ்சலில் அனுப்பிய பிறகே பிடித்தம் செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் ஓய்வூதியதாரர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தால், அந்தத் தடையை விலக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகை ஓய்வூதியம் என அறியப்பட்ட பிறகு, தொகையைப் பிடித்தம் செய்வது தொடர்பான நடவடிக்கை எடுப்பதுடன் சரியான ஓய்வூதியத்தையும் முடிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகும் தொடர்ந்து மிகை ஓய்வூதியத்திலேயே வழங்குவது தவறாகும். எனவே, சரியான ஓய்வூதியம் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை கருவூலத் துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

ஓய்வூதியப் பிரிவில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் கணக்கர்களை, கண்காணிப்பாளர்களை சுழற்சி முறையில் பணிமாறுதல் செய்ய வேண்டும். கருவூல கணக்குத் துறையின் ஆய்வுப் பிரிவு, மண்டல இணை இயக்குநர், கருவூல அலுவலர், கூடுதல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது மிகை ஓய்வூதியம் குறித்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

மிகையாக ஓய்வூதியம் வழங்கி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்குக் காரணமான பணியாளர்கள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தனது சுற்றறிக்கையில் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

பி.எட் எம்.எட் படிப்பு புதிய விதிமுறைகளுக்கு.எதிராக.தாக்கல் செய்த மனுவுக்கு நோட்டீஸ்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் 670 பி.எட்., எம்.எட். படிப்புகளைக் கொண்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கென ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதிகள் தற்போது செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கும், புதிய கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அது தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய விதிமுறைகள் தேசியக் கவுன்சிலின் இணையளத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதாக 21 நாள்களுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய விதிமுறைகள்படி பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கால அளவு ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்பது, புதிய விதிப்படி 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சட்டத்தை பின்பற்றி வருகிறோம்.

புதிய விதிகளை நடைமுறைப்படுத்தினால், தனியார் கல்வி ஒழுங்குமுறைச் சட்டத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இரண்டும் தனித் தனிச் சட்டங்கள். இந்தப் புதிய விதிமுறைகளை பின்பற்றினால் கல்வி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது எங்களை மிரட்டுவது போல் உள்ளது. எனவே, புதிய விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். 21 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கு நிலுவையில் இருப்பதால், 21 நாள்களுக்குள் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்க வலியுறுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, மனுவுக்கு மார்ச் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.