இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 17, 2015

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த காலியிடங்களுக்கு, பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 7,500 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை; அதிலும், 6,100 பள்ளிகள், மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தொடக்க பள்ளியாக இருந்து, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டவை.

இந்த பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவியால், 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு, கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு, தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். மீதமுள்ள, 1,400 பள்ளிகள், 25 முதல், 50 ஆண்டுகளுக்கு முன், நேரடியாக நடுநிலைப் பள்ளிகளாகத் துவங்கப்பட்டதால், மத்திய அரசு உதவித் திட்டத்தில் இடம் பெறவில்லை. நடுநிலைப் பள்ளிகளுக்கு, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; வகுப்புக்கு ஒரு ஆசிரியர்; கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியலுக்கு, தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், எஸ்.எஸ்.ஏ., உதவி இல்லாத பள்ளிகளில், இந்த விதிகள்கடைபிடிக்கப்படாமல், ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்த, இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சில பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தாலும், ஒரே பாடத்தை முடித்தவர்களாக உள்ளதால், ஆசிரியர்களை நியமித்தும் பலனில்லை. அதனால், கணிதம் முடித்தவர்கள், தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தையும், அறிவியலையும் கற்றுக் கொடுக்கின்றனர். சில பள்ளிகளில், மூன்றுமே, தமிழ் ஆசிரியர்களாகவும், சில இடங்களில், மூன்று பேருமே வரலாறு ஆசிரியர்களாகவும் உள்ளதால், &'குண்டக்க, மண்டக்க&' என்ற நிலையில், பாடம் எடுக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்கள், 9ம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு மாறும் போது, கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களின் அரிச்சுவடி கூடத் தெரியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, பணி நிரவல் அல்லது கலந்தாய்வு மூலம், தீர்வு காண முயற்சிக்கிறோம் என்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் சிங்காரவேல் கூறும்போது, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் வராத பள்ளிகளிலும், ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்; வகுப்புக்கு தலா ஒரு ஆசிரியர் என, நியமிக்க வேண்டும். அப்போது தான், உபரி ஆசிரியர் பிரச்னை தீருவதோடு, மாணவர்களும் பாதிக்கப்படாத சூழல் ஏற்படும், என்றார்.

No comments:

Post a Comment