இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 30, 2015

அரசு தேர்வித்துறை இயக்குநர் தேவராஜன் ஓய்வு

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார். பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்த பல்வேறு சிக்கலான நடைமுறைகளை அகற்றி, தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார். தேர்வறை முறைகேடுகளைத் தடுக்க விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்களின் விவரங்களை அச்சிட்டு வழங்கியது, விடைத்தாள்களில் டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் முறையை அறிமுகம் செய்தது, விடைத்தாள் நகல்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை இவர் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை பணியாளர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூடுதல் பொறுப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

கட்டாய தலைக்கவசம் அமல்.அணியாவிட்டால் உரிமம் பறிமுதல்

தமிழகத்தில் இரு சக்கர ஓட்டிகள், பின்புறம் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது புதன்கிழமை (ஜூலை 1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலைக்கவசம் அணியாவிட்டால் அசல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், புதன்கிழமை (ஜூலை 1) முதல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக இரு துறைகளும் இணைந்த சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் புதன்கிழமை முதல் இவர்கள் தீவிர சோதனையைக் மேற்கொண்டு, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியது:

நீதிமன்ற உத்தரவு, தமிழக அரசின் ஆணையைத் தொடர்ந்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. துண்டுப் பிரசுரங்கள் மூலமும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளோம். புதன்கிழமை முதல் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, தலைக்கவசம் அணியாமல் வருபவர்களின் வாகனத்தின் அசல் (ஒரிஜினல்) பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

ஒரு முறை நடவடிக்கைக்கு ஆளான இரு சக்கர வாகனம், இரண்டாவது முறையும் சிக்கினால் அந்த வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

G.O 183 CPS rate of interest 8.7%

Click below

https://app.box.com/s/kkqss6sbqshmhwrgx7w73mpvvf692xws

Monday, June 29, 2015

நல்லாசிரியர் விருதுக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு


நல்லாசிரியர் விருதுக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு

அரசின் சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு பட்டியல் அனுப்ப கல்வித்துறை உத்தரவு.

*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

*விண்ணப்பங்களை ஜூலை 5ம் தேதிக்குள் கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என கூற்ப்பட்டுள்ளது

மத்திய அரசுப் பணியில் சேர்வதற்கு மாற்றுத்திறனாளிக்கு பத்தான்டு வயது தளர்வு

மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:

மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும். வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

Sunday, June 28, 2015

நல்லாசிரியர் விருதுக்கான கருத்துரு



2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை
பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ல் போராட்டம்.ஜாக்டோ அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்துஉள்ளன. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது

.இந்நிலையில், ஜாக்டோ உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.ஆலோசனை முடிவில், மீண்டும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும், அரசு அழைத்துப்பேசாவிட்டால், ஆக., 1ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

70இலட்சம் மாணவ மாணவிகளுக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர் விவரங்கள், 'இ.எம்.ஐ.எஸ்.,' என்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன.

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களில், ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. மேலும், 'பள்ளி மாணவ, மாணவியருக்கு, கண்டிப்பாக ஆதார் எண் உருவாக்க வேண்டும்' என்று, பெங்களூருவில் உள்ள, மத்திய திட்டக்குழுவின், தென் மண்டல துணை இயக்குனரகத்தில் இருந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும்உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் உருவாக்க வேண்டியுள்ளது தெரியவந்தது.

அதனால், புதிய கல்வி ஆண்டில், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, ஜூலை முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட உள்ளன. இதற்கான தகவல் தொடர்பு அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Saturday, June 27, 2015

அரசு ஊழியர்களின் ஜி.பி.எப் இனி ஆன் லைனில் மட்டுமே

அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு ஊழியர்களின், 2014 - 15க்கான, ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, தமிழக முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில், ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கணக்கு இருப்பு போன்ற விவரங்களை, சந்தாதாரர்கள் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆண்டு கணக்கு அறிக்கையை, பதிவிறக்கமும் செய்யலாம். அதற்கு, சந்தாதாரர்கள் தங்களின் மொபைல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, இனிமேல் அளிக்கப்படாது. கணக்கில் வித்தியாசம்; சந்தா தொகை விடுபட்டது; கடன்தொகை உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலமே அறிய முடியும். இதற்கு தொடர்பு கொள்ள, 044 - 2431 4477, 2434 2812 என்ற தொலைபேசி எண்கள், www.agae.tn.nic.in என்ற இணையதள முகவரி, aggpt@tn.nic.in என்ற இ - மெயில் முகவரி போன்றவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு துறையின் ஊதியம் வழங்கும் அலுவலர்கள் அனைவரும், அவர்களின் தொலைபேசி, மொபைல் எண், இ - மெயில் முகவரி, அஞ்சல் முகவரி ஆகியவற்றை, 'துணை மாநில கணக்காயர் (நிதி 1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு - பண வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 0018' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த முகவரியில், சந்தாதாரர்களும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

செயல்வழிக் கற்றல் பின்பற்றலை உறுதி செய்ய உத்தரவு

தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில், புதிய வழிமுறைகளை பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.

இதில், பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப, கற்றுக்கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், வகுப்பறையில், புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்தும் முறை தடை செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது.இதில், புதிய பாடப்புத்தகம் வழங்கிய நிலையில், வண்ண அட்டையில் பாடம் நடத்துவது குறித்த, தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவில்லை.

இதனால், பெரும்பாலான பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்த துவங்கினர். இதனால், செயல்வழிக்கற்றல் முறையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், செயல்வழிக்கற்றல் முறையில், பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வி துறையில், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், செயல்வழிக்கற்றலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை போக்க, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகளும், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையை புதிய வழிமுறைகளின்படி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதன்படி நடத்தப்படுகிறதா என்பதை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர், ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, June 26, 2015

பி.எஃப் எண் வைத்திருப்பவர்க்கு ஆதார் எண் கட்டாயம்

பிஎப் கணக்கு எண் வைத்திருப்பவரா? ஆதார் எண் கட்டாயம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் உறுதி ஆவண படிவம் - 11ஐ (புதியது) நிறுவன உரிமையாளர்கள்  கட்டாயமாக பெறவேண்டும். மற்றும் படிவத்திலுள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யுஏஎன்.) இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் நடப்பு உறுப்பினர்களின் பொது கணக்கு எண் (யுஏஎன்) விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவித்து அதற்கான ஒப்புகை பெற்றுக் கொள்ளவேண்டும். உறுப்பினர்களின் கேஒய்சி-ல் அளிக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, பான் எண், ஆதார் எண்ணை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யவேண்டும். ஆதார் எண்  இல்லாத உறுப்பினர்களிடம்  இருந்து ஒரு மாதத்திற்குள் ஆதார் எண் பெறவேண்டும். உறுப்பினரது ஆதார் எண் பெறப்பட்டவுடன் நிரந்தர கணக்கு எண் (யுஏன்) இணையதளத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

உறுப்பினரின் கணக்கு எண் விவரம், இதர உரிய விவரங்களையும் முழுமையாக அளிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் நிறுவன உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்கள் சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகையினை கட்டாயமாக மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்தவேண்டும்.
ஒரு லட்சத்திற்கும் குறைவாக பங்களிப்பு தொகை செலுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து வங்கி காசோலைகளின் மூலமாக தொகையினை செப்டம்பர் 2015 வரை செலுத்தலாம். அதன் பின்னர் மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்த வேண்டும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி. பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பி.எஃப் நிதி பங்குச்சந்தையில் முதலீடு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
        தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது.
        இந்த பண்டுகளில் முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.  வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போது  வருங்கால வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து 5 சதவீத தொகையை நடப்பாண்டில் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார்.  வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்புநிதி நடப்பாண்டில் ஒரு லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இதிலிருந்து ரூ.5000 கோடியை இடிஎப் திட்டங்களில் நடப்பாண்டில் முதலீடு செய்யப்படும் என்றார்.  வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு முன்பு மாநில அரசு மற்றும் மத்திய அரசு பத்திரங்களில் வைப்பு நிதி ஆணையம் முதலீடு களை மேற்கொண்டு வந்தது.  தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய அனுமதியின்படி ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 15 சதவீதம் வரையிலான தொகையை பங்கு மற்றும் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதனடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியின் 5 சதவீதத்தை நடப்பாண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.  மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். முதலீட்டு தேதி நிலவரப்படி ரூ.5,000 கோடிக்கும் குறைவான சந்தை மதிப்பை அந்த நிறுவனம் கொண்டிருக்க கூடாது.  மேலும் செபியின் அனுமதி பெற்ற மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகளில் குறைந்தபட்சம் 65% முதலீடுகளை செய்துள்ள பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

மதிய உணவில் மாணவர்களுக்கு பால் மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
        அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

         தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

        ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

P.F சந்தாதாரர்களுக்கு விரைவில் இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, ஆண்டு கணக்கு அறிக்கை சீட்டு அலுவலகத்திலிருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. சந்தாதாரர்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருப்பின் தங்களது அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட தகவல் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, மாநில கணக்காயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் விவரம்: துணை மாநில கணக்காயர், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு, பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, 600018 என்ற முகவரியிலும், 044-24314477, 24342812 என்ற தொலைபேசி எண்களிலும், www.agae.tn.nic.in என்ற வலைதளத்திலும், aggpf@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இடைநிற்றல் உதவித்தொகைக்கு ஜீரோ பேலன்ஸ்

2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் 10, பிளஸ் 2-வில் பயிலும் மாணவர்கள், “இடை நிற்றலை நீக்கும்” பொருட்டு சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வரை மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண், ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண்களில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது.பிழைகள் மற்றும் கால தாமதத்தை களைய, சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை, dse.ssasoft.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' மூலம், நேரடியாக 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணிகளை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மாணவர்கள் வங்கி கணக்கு ஆரம்பிக்கும்போது, கணக்கு துவங்க சம்பந்தப்பட்ட வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட, குறைந்த பட்ச தொகை கேட்கப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆறு மாதத்துக்கு மேல், எவ்வித பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால், வங்கிகள் அக்கணக்குகளை முடக்கி வைத்தன. இதனால், மாணவர்களுக்கு அனுப்பப்படும் தொகை சென்று சேருவதில் சிக்கல் இருந்தது. இதை களைய, அவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸில்' வங்கி கணக்கு துவக்கி, வங்கிகளால் அக்கணக்குகள் முடக்கப்படாதவாறு, நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது, என்றார்.