இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 01, 2015

ப்ளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.

* முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.

* அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.

* காலை, 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.

* மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர் அவர்களை காப்பிஅடிக்கவோ, 'பிட்' அடிக்கவோ உதவாத வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் படி,

* இந்த ஆண்டு தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக் கூடாது.

* தேர்வு அறையில், மாணவர்களின், 'பெஞ்சில்' கூட கண்காணிப்பாளர் அமரக் கூடாது.

* தேர்வு துவங்கும், 10:00 மணி முதல் தேர்வு முடியும், 1:15 மணி வரை கண்காணிப் பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக் கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.

* மாணவரிடமோ, அரு கில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.

* மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தை யும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.

* மாணவர்களிடம் தேவை யின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.

* கண்காணிப்பாளராக பணி யாற்றும் ஆசிரியர் தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

* தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளி யில், தேர்வு நாளில் பணியாற்றக் கூடாது. அதிரடி மாற்றம்:இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனரகம் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment