இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 07, 2015

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி16ல் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்கியது. தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு விஷயத்தில் தேர்வுத்துறை முன்னேற்பாடுகளை கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. தேர்வு மையத்தில், தேர்வர்களின் விடைத்தாள் கட்டப்பட்டு, தனித்தனி பண்டலாக, விடைத்தாள் கட்டி, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே, விடைத்தாள் கட்டு வைக்கும் வளாகத்தில், முன் அனுமதிபெற்ற நபர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்டனர். இரண்டு கண்காணிப்பு கேமராக்கள், விடைத்தாள் கட்டு காப்பகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக பிரித்து, தரையில் பெயின்ட்டால் கட்டம் கட்டப்பட்ட பகுதியில், தனித்தனி கட்டுகளாக அடுக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, தரைதளத்தின் வரையப்பட்ட கட்டங்களில் வைப்பது போலவே, விடைத்தாள் கட்டுகளும் வைக்கப்பட்டன. அடுத்து வரும் தேர்வின் விடைத்தாளும், இதே முறையில் பின்பற்றப்பட்டு, அடுக்கி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்வு மையத்தின் விடைத்தாள் கட்டுகளும், எவ்வித குழப்பமும் இல்லாமல், பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

கேமரா: தேர்வுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் கட்டு காப்பகத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தேர்தல் கமிஷன் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பது போல, விடைத்தாளையும் பாதுகாத்து வருகிறோம். வரும், 16ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும். கட்டு காப்பகத்தில் இருந்து, பார்சல் வேன் மூலமாக, மாநில தேர்வுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கட்டுகள் மற்ற சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையத்தில், தேர்வு முடிந்த பின், தேர்வரின் விவரம் அடங்கிய, 'டாப்சீட்' 'ஏ' பார்ட்டை கிழித்து, தேர்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு, விடைபகுதி மட்டும் அனுப்படுவதால், எந்த மாணவர் என்ற விவரத்தை அறிய முடியாது.

வரும், 16ம் தேதி முதல், ஏப்ரல், முதல் வாரம் வரை, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment