இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 09, 2015

B.ed படிப்பு புதிய முறை

பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை படிக்க முடியும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.

ஆசிரியர் கல்விக்கான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்லூரி தலைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சந்தோஷ் பாண்டா பேசியதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு வகுக் கப்பட்ட ஆசிரியர் கல்விக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீதியரசர் வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்படி கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்டன. ஓராண்டு படிப்பாக இருந்த இளங்கலை மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டப் படிப்புகள், 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான திருத்தப் பட்ட கல்வித் திட்டமும், அரசா ணையும் கல்லூரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட கல்வித் திட்ட அடிப்படையில் 2-ம் ஆண்டு பாடங்கள் குறித்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிவு செய்ய வேண்டும்.

இளங்கலை ஆசிரியர் படிப்பை மட்டும் நடத்தும் கல்லூரிகள், படிப் படியாக பன்முகத்தன்மை கொண்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகளாக மாற வேண்டும். இந்தியாவில் உள்ள 17 ஆயிரம் கல்லூரிகளில் இதை அமல்படுத்த வேண்டும் என்பதால், இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கவில்லை.

பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகளுடன் ஆசிரியர் படிப்பையும் ஒருங்கிணைத்த படிப்புகள் 2016-ம் ஆண்டு முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால், இந்திய கல்வியின் எதிர்காலம் ஒருங்கிணைந்த படிப்புகள் தான். பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை கற்க முடியும். யோகா, தகவல் தொழில்நுட்பம், பாலின பாடங்கள் கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் கல்லூரிகளின் தலைவர்கள், ‘கல்லூரிகளை பன்முகத் தன்மையாக மாற்றுவது எளிதல்ல’ என்று தெரி வித்தனர். ஆனால், எக்காரணம் கொண்டும் புதிய விதிமுறைகள் அமலாக்கத்தை தள்ளிப்போட முடியாது என்று சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன், பதிவாளர் எஸ்.கலைச்செல்வன், என்.கே.டி. தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.வசந்தி கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment