இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 31, 2015

ப்ளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களில் மாற்றம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 30 பக்கங்களைக் கொண்ட கோடிட்ட தாளாக இருக்கும். இதில், HSC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

கணக்கியல் தேர்வுக்கு 46 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். இதில் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், 15 முதல் 46 பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். இதில், HSC- ACCOUNTANCY எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணினி அறிவியல் தேர்வுக்கு 32 பக்கங்கள் கொண்ட (30 பக்கங்கள் எழுதும் வகையில்) முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதில் HSC- COMPUTER SCIENCE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உயிரியல் பாடத்தில் உயிர்- தாவரவியல், உயிர்- விலங்கியல் என இரண்டு முதன்மை விடைத்தாள்களுக்கும் இரண்டு டாப் சீட் (Top Sheet) வழங்கப்படும். அவற்றை இரண்டு விடைத்தாள்களிலும் தனித்தனியாக வைத்து தைத்த பின்னர், துளைபோட்டு நூல் கட்டி ஒரே விடைத்தாளாக வழங்கவேண்டும். தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது, அவற்றை உரிய விடைத்தாள் பகுதியுடன் வைத்து 2 விடைத்தாள்களையும் ஒன்றாகச் சேர்த்து நூலினால் கட்டவேண்டும். மற்ற பாடங்களுக்கு 38 பக்கங்கள் எழுதும் வகையில் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த முதன்மை விடைத்தாளில் HSC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வரலாறு பாடத் தேர்வுக்கு ஓர் இந்திய வரைபடமும், புவியியல் தேர்வுக்கு ஓர் உலக வரைபடமும் வழங்கப்பட்டிருக்கும். இவற்றை 36, 37-ஆவது பக்கங்களுக்கு நடுவில் வைத்து தைத்து வழங்கவேண்டும். படத்துடன் கூடிய முகப்புச் சீட்டு உள்ளிட்டவை கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு. தேவராஜன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

10-ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 22 பக்கங்கள் எழுதும் வகையில் கோடிட்ட தாளாக இருக்கும். இதில், SSLC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 22 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாளுடன், 3 படிவங்களும் அச்சிட்டு வழங்கப்படும். இதில், SSLC TAMIL-II எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணிதம், அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 32 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். இதில், SSLC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சமூக அறிவியல் தேர்வுக்கு முதன்மை விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் நான்கு வரைபடங்கள் அச்சிடப்பட்டிருக்கும். மீதமுள்ள 26 பக்கங்களில் எழுதும்படி வழங்கப்படும். இதில், SSLC - Social Science எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment