இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 31, 2014

திட்ட கமிஷனுக்கு மாற்றாக 'நீதி அயோக்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டக் குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற மூன்று வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, 64 ஆண்டுகால திட்ட கமிஷன் கலைத்துவிட்டு இன்றைய காலத்துக்கு ஏற்ற புதிய நிதி அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன் அடிப்படையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 7-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சில மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த நிபுணர் களைக் கொண்டதாக பிரதமர் தலைமையில் புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டது. மாநில முதல்வர்களை சுழற்சி முறையில் புதிய அமைப்பில் இடம்பெறச் செய்வது குறித்தும், ஒதுக்கும் நிதியை தேவைக்கேற்ப சுதந்திரமாக செலவழிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

பெரும்பாலான முதல்வர்கள் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கு வதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வார காலங்களுக்குப் பின்னர் திட்ட கமிஷன் அமைப்புக்கு மாற்றாக நீதி அயோக் உருவாக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.

குரூப்–2 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–2 (தொகுதி–2–அ) அடங்கியுள்ள 2 ஆயிரத்து 760 காலி பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த 12–ந்தேதி வெளியிடப்பட்டு, கடந்த 29–ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான துறை ஒதுக்கீடு ஆணை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் முதல் 10 இடங்களை பிடித்த ரெங்கநாதன் வெங்கட்ராமன், ஆர்.சிந்தியா, என்.ஆர்.ஜே.தினேஷ்குமார், ஜி.மகேஷ்வரி, ஜே.முகமது மீரா சாகிப், எம்.மைமூன்கனி, எப்.ஜே.அஸ்வினி, எஸ்.ராஜ்குமார், ஏ.சையத் அசார் அரபாத், எஸ்.ரம்யா ஆகியோருக்கு துறை ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். இதில் மகேஸ்வரி பி.எஸ்.சி, பட்டதாரி மற்ற அனைவரும் பொறியியல் பட்டதாரிகளாவார்கள். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:–

தொடர்ந்து 2 ஆயிரத்து 200 விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 200 விண்ணப்பதாரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தினசரி 200 பேர் வீதம் வரும் ஜனவரி 23–ந்தேதி வரை அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்–ஆப் மார்க் முறையில் இல்லாமல் ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

15 நாளில் தேர்வு முடிவுகள்
தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள நேர்முக எழுத்தர் பதவிக்கு 108 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வின் போது தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம், பதிவுத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற 29 துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 760 பணியிடங்களில், 2 ஆயிரத்து 668 உதவியாளர், கணக்காளர், கீழ்நிலை எழுத்தர் பணியிடங்களும், 92 நேர்முக எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப்–1 தேர்வின் ஆரம்பகட்ட தேர்வு முடிவுகள் வரும் 15 நாள்களிலும், குரூப்–4 தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குரூப்–1 மெயின் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2015–ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

3–ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போது விநியோகம்


அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 14 வகையான கல்வி பொருட்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்களை தமிழக அரசு, பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.

மேலும் மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, அதன் காரணமாக காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2–வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3–வது பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவை 1–ம் வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.

நாளை பள்ளிக்கூடம் திறப்பு அதன்படி அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.

திட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2–ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

PG-TRB கலெக்டர் தலைமையில் குழு

: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடுகளை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய நல்லாசிரியர் விருது 2014-தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள்

Tuesday, December 30, 2014

குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.

குருப் 2 ஏ தேர்வில் நேர்காணல் இல்லாத பணியிடங்களுக்கான துறை ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ரேங்க் பட்டியலில் 9 முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. குருப் 2 ஏ தொகுதியில் நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வை எழுதியவர்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 399 பேரின் மதிப்பெண், தகுதிப் பட்டியல் ஆகியவை கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தலைமைச்செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் உள்பட 29 துறைகளில் காலியாக உள்ள உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான 2 ஆயிரத்து 760 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தரவரிசையின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த திங்கள்கிழமை (டிச. 29) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை தினமும் 200 தேர்வர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 2 ஆயிரத்து 200 தேர்வர்களுக்கு தகுதி மதிப்பெண் அடிப்படையில் அழைப்புகள் அனுப்பட்டுள்ளன. இதற்கான தகுதிப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 9 பேர் பொறியியல் பட்டதாரிகள். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் காலியிடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் அழைக்கப்படுவர்.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கலந்தாய்வு ஜனவரி 27 ஆம் தேதி நடைபெறும். குருப் 1 தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாள்களில் வெளியிடப்படும். அதன் பின்னர், முதன்மைத் தேர்வு நடத்தப்படும். வரும் ஆண்டுக்கான ஆண்டு வரைவுத் திட்ட காலண்டர் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

பிப். 22-இல் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமராவதி சைனிக் பள்ளியில் 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, 2015-2016-ஆம் ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களினால், அந்த நுழைவுத் தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடிதம்: அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில் இருந்து, பள்ளிகள் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள், விடுபட்ட பள்ளிகள் விவரங்களை பதிய வேண்டும்.

* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவு செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும். சிறப்பு முகாம்

* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.

* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Monday, December 29, 2014

இன்றைய காலைக்கதிரில்

மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்

'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல் அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 'மத்திய அரசு ஆசிரியர்களை போல் ஊதிய உயர்வு அளித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வரை கூடுதலாக செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனால் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் '1989 ல் இருந்து பெற்றுவந்த ஊதிய உரிமையை மீண்டும் பெற அனைவரும் ஒருங்கிணைந்து போராட தயாராக வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்

'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல் அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 'மத்திய அரசு ஆசிரியர்களை போல் ஊதிய உயர்வு அளித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வரை கூடுதலாக செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனால் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் '1989 ல் இருந்து பெற்றுவந்த ஊதிய உரிமையை மீண்டும் பெற அனைவரும் ஒருங்கிணைந்து போராட தயாராக வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்

'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல் அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 'மத்திய அரசு ஆசிரியர்களை போல் ஊதிய உயர்வு அளித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வரை கூடுதலாக செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனால் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் '1989 ல் இருந்து பெற்றுவந்த ஊதிய உரிமையை மீண்டும் பெற அனைவரும் ஒருங்கிணைந்து போராட தயாராக வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!


தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்க, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இத்தேர்வுகளுக்கு, தேர்வு மையங்கள் பார்வையிடல், முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

கோவை மாவட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7500 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். பார்வையற்றவர்கள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு, பயிற்சி பெற்ற துணை எழுத்தர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.தேர்வு பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்களின் உறவினர்கள் தேர்வு எழுதவுள்ளனரா என்பதை, ஆய்வு செய்து, குறிப்பிட்ட அலுவலர்களுக்கு, தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''ஆசிரியர்கள் தேர்வில் எவ்வகையிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், முனைப்புடன் உள்ளது. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில், அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியது போன்று, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், புகைப்படம், தேர்வர் பெயர் மற்றும் பதிவெண்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.''ஓரிரு நாட்களில், ஓம்.எம்.ஆர்., ஷீட் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளது. ஓம்.எம்.ஆர்., ஷீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது,'' என்றார்.

மொபைல்போன் கொண்டு வர தடை : தேர்வு மையங்களுக்கு, பேஜர், கால்குலேட்டர், தொழில்நுட்பத்துடன் கூடிய கைகடிகாரம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொபைல்போன் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கொண்டுவரும், மதிப்புமிக்க பொருட்களுக்கு தேர்வர்களே முழு பொறுப்பு எனவும், எவ்வகையிலும் தேர்வு அதிகாரிகள், அலுவலர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, December 28, 2014

புதிய சேவை அறிமுகம் பிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்

பிஎப் ஓய்வூதியம் பெற்றுவருபவர்களுக்கு, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்’ என்ற புதிய சேவையை பிஎப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் சோதனை அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இபிஎப்ஓ) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது, ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம், ‘உயிர் சான்று’ கொடுக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மாற்றாக, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிக்கேட்’ என்ற சேவை கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கான பென்ஷன் ஆர்டர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பிஎப் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்படி பதிவு செய்த பிறகு ஓய்வூதியதாரர்கள் தங்களது செல்போன் மூலம் டிஜிட்டல் லைப் சர்பிடிக்கேட்டை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவை சோதனை அடிப்படையில் வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள இரண்டு பிஎப் மண்டல அலுவலகத்திலும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மேற்படி ஆவணங்களை பெற்று பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த சேவையை ஆய்வு செய்த பிறகு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 47 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎப் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்’ என்றார்.