இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 12, 2014

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை 1/2

emis online website address   :click here www.emis.tnschools.gov.in

1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.

                  






4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.











4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (--------- இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

No comments:

Post a Comment