இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 26, 2014

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29 -ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடன நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தபிறகும் எம்பில்- உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என அரசாணையைத்திருத்தி வெளியிட வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 250 -க்கும்மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 29.10.2014 -ல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு,அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (25.10.2014) சனிக்கிழமை சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது, தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குசிறப்பு கலந்தாய்வு நடத்துவது,காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும்,இதரக்கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்தஉறுதியைத்தொடர்ந்து வரும் 29.10.2014 (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment