இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 04, 2014

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர் எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர் எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

3 கிலோ மீட்டர்:

தமிழக அரசின் பள்ளிக் கல்வி கொள்கைப்படி, 300 பேர் மக்கள்தொகை குடியிருப்பை கொண்ட கிராமத்தின், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு துவக்கப்பள்ளி, 500 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமத்தின், மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு நடுநிலைப்பள்ளி இருக்க வேண்டும். அந்த வகையில், நடுநிலைப் பள்ளியாக உள்ள பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கை, குடியிருப்பு, இடவசதி ஆகியவை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மாணவரின் எண்ணிக்கை மற்றும் வசதியை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும், 100 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், தலா, ஒரு தலைமை ஆசிரியர், எட்டு பட்டதாரி ஆசிரியர் என, 900 பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படும். ஆனால், காலதாமத அறிவிப்பால், ஏற்கனவே 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர், அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பிளஸ் 1 வகுப்பு காலாண்டு தேர்வையும், சம்பந்தப்பட்ட பள்ளியில் முடித்துவிட்டார். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளிலும், நடப்பாண்டுக்கான மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதிருப்தி:

தற்போது, பிளஸ் 1 வகுப்பில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லாததால், அவர்கள் நடப்பாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளியில் இருந்து, டி.சி., (மாற்றுச்சான்று) பெற்றுக் கொண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், மீண்டும் பழைய பள்ளிக்கே, திரும்பி வந்து படிக்க, மாணவர் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அதன்படி, அந்த பள்ளிகளில், 10ம் வகுப்பு படிப்பு முடித்து, தற்போது, பிளஸ் 1 வகுப்பில், அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். பின், அவர்களை அந்த பள்ளி யில் இருந்து விடுவித்து (டி.சி., பெற்றுக் கொண்டு), தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவர். பாடத்திட்டம் ஒரே மாதிரியானது என்பதால், எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டி.சி., வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அறிமுகம்:

மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியி யல், உயிரியல் படிப்பு கொண்ட, ஒரு குரூப்பும், கலைப்படிப்பு சார்ந்த ஒரு குரூப் மட்டுமே, நடப்பாண்டு அறிமுகம் செய்யப்படும். கூடுதல் கட்டடம் மற்றும் ஆய்வகங்கள் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment