இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 26, 2014

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு


சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்  பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

 வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண்டில் (2015-16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.

 இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்படவில்லை எனவும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 இந்தச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழைப் படித்து வருவதாகவும், வெறும் 5 ஆயிம் மாணவர்கள் மட்டுமே தமிழைப் படிக்கவில்லை எனவும் சட்டப் பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது.

 இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் கற்றல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துவகை தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் வகையில் தெளிவான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

 அரசாணை விவரம்:

 தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்துவகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

 கல்வியாண்டு    அமல்படுத்த வேண்டிய வகுப்புகள்

 2015-16 ----- 1

 2016-17 ----- 1, 2

 2017-18 ----- 1,2,3

 2018-19 ----- 1,2,3,4

 2019-20------ 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை

 2020-21------ 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை

 2021-22------ 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை

 2022-23------ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை

 2023-24 ----- 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை

 2024-25 ----- 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை

No comments:

Post a Comment