இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 04, 2014

கற்பித்தல் என்பது பணியல்ல; தர்மம்!


  ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மோடி பேசியதாவது : மாறி வரும் சூழ்நிலையில், மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்பித்தல் வெறும் கடமை ஆகாது.

அது ஒரு பணியல்ல; வாழும் முறை. கற்பித்தல், வாழ்வின் தர்மம். ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின், ஒரு ஆசிரியர் இருக்கிறார். நான் குஜராத் முதல்வரானதும், என் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தேன். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு மாணவனும், தன் ஆசிரியரை மதிக்க வேண்டும். ஆசிரியருக்கு ஓய்வு என்பதே கிடையாது. மற்ற எந்தப் பணியை செய்யும் நபரும், குறிப்பிட்ட வயதில், பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், ஒரு ஆசிரியர், எத்தனை வயதானாலும் தன் அறிவாற்றலையும், தன் அனுபவத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் மத்தியில் மோடி இன்று உரை : இன்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை, நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தனியார் பள்ளிகளும் மோடி உரையை மாணவர்களுக்கு காட்ட ஆர்வமாக உள்ளன. எனினும், மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில், இதற்கான முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment