இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 17, 2014

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர்.

மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment