இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 17, 2014

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் - 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும

 தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள்
விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு சாதனம் இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.38 லட்சம் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுவார்கள்.

2014-15-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும். இந்தக் கல்வியாண்டில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32 ஆயிரத்து563 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.2014-15-ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

சிறப்பு ஆசிரியர் பணியிடம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில்202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.நடப்புக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரத்து 140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடம்:

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 71 ஆயிரத்து 708 ஆசிரியர் பணியிடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2014-15-ம் கல்வியாண்டில்,3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், (முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18), 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் (உதவியாளர் 152, இளநிலை உதவியாளர் 188) நிரப்பப்படும்.

நடமாடும் நூலகம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு வழங்கப்படும். 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகம் செய்யப்படும். இலவச விளையாட்டு பொருள் தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள்ரூ.6 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.மாநிலத்தில் முதற்கட்டமாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நூல்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். அரிய நூல்கள் பாதுகாப்பு இந்தியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த, விலைமதிப்பற்ற, அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் நூல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ரூ.7.50 லட்சம் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment