இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 30, 2014

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவ

தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும்.  அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்


தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது

. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

. இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5 கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை www.tndte.gov.in இணையதளத்திலிருந்து ஜூன் 20-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15 ஆகும்.

தர வரிசைப் பட்டியல் முறையில் விஏஓ தேர்வு முடிவு: நவநீதகிருஷ்ணன்

் குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்த விஏஓ தேர்வை எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது, குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும். அதாவது, தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்கள் மற்றும் தர வரிசையைத் தெரிந்து கொள்ளும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்பதை அவர்களாகவே தெரிந்து கொள்ள முடியும். கடந்த முறை 5,566 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுத 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது என்றார்.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு

தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிவித்துள்ள, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 125 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத் துறை இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

TNTET: New method TET Weightage mark calculator. -

1.9.2013ன் படி உபரி ஆசிரியர் பட்டியல் கோருதல் சார்பு

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு-நீதிமன்றம் உத்தரவு புதிய வெயிடேஜ் முறை அறிமுகம

Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?

மாதிரி வழிமுறை

12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4. 
இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65 
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36. 

எனவே மொத்தமாக.. 63.75

Paper I க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி ?

மாதிரி வழி முறை

(+2 % mark * 15)/100+(dted % mark *25)/100+(TNTET mark*60)/150= உங்கள் வெயிடேஜ்.

Tuesday, April 29, 2014

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY DDCE MAY 2014 EXAM TIME TABLE

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.

அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 28, 2014

மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு
வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய seniority -ஐ வழங்க வேண்டும்

2)01.01.2012 pannel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு )நிலையிறக்கம் செய்ய வேண்டும்

3)01.01.2013 pannel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை pannel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும் .அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே 01.01.2012 -pannel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம் )நிலை உருவாகி உள்ளது.01.01.2013 pannel மற்றும் 01.01.2014 pannel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.

கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், பள்ளிகளில் 16 ஆயிரத்து 582 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு வேலை என்பதால், பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியமாக இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

வாரத்துக்கு மூன்று நாட்கள், பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதால், தனியார் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரையாண்டு, காலாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தேர்வுகளுக்கு முன்பு கூடுதல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்திக்கொண்டு, முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் மே மாதத்தில், கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சக ஆசிரியர்களை போன்று இவர்களுக்கும், மே மாத ஊதியத்தை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,''பகுதி நேர ஆசிரியர்கள் எந்நேரத்திலும், பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். பகுதி நேரம் என்றாலும், பல இடங்களில் தலைமையாசிரியர்களின் வற்புறுத்தலால் பள்ளிகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மே மாதத்தில், ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால், ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சக ஆசிரியர்களை போன்று, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்தில், ஊதியம் வழங்க வேண்டும்,'' என்றார்.

Saturday, April 26, 2014

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய, கல்வித்துறை புதிய நடவடிக்கை

 
   தேர்வு முடிவிற்குப்பின், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய, மாணவ, மாணவியர், நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம் ஆனாலும், பதிவுமூப்பு தள்ளிப்போகும் நிலையும் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே, "ஆன் - லைன்' மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள, இரு ஆண்டுகளுக்கு முன், திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை, தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும், ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது

. பின், பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமான தகவல்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால், அதிக நேரம் பிடிக்கிறது. இதனால், மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை, இந்த ஆண்டு தீர்க்கும் வகையில், கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் குறித்த முழு விவரங்களும், ஏற்கனவே பெறப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி, சொந்த ஊர் உள்ளிட்ட பல விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பயிற்சி :

தேர்வு முடிவு வந்ததும், அதில், மதிப்பெண் சான்றிதழ் எண்களை மட்டும் பதிவு செய்ய வேண்டியது மட்டும் தான் வேலை. இதனால், உடனுக்குடன், எளிதில், பதிவு செய்ய முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரக அதிகாரிகள், ஏற்கனவே, பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கு, "ஆன் - லைன்' வழியில், பதிவு செய்வது குறித்து, பயிற்சி அளித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும், உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.,) மற்றும் ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும், வேலை வாய்ப்புத்துறை வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி, உடனுக்குடன் வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள, ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?

"தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் (ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை, பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. வழக்கமான பாணியில் தான், தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. "ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரை, எந்தக் காரணம் கொண்டும், தோல்வி அடையச் செய்யக்கூடாது; மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது' என்பது முக்கியமான விதிகள்.

ஆனால், இதை, இரண்டையும், பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. தமிழகத்தில், பல முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதும், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வேறு வகுப்புகளில் சேர்த்தாலும், தேர்வு நடத்தி தான், "சீட்' தருகின்றனர். இதேபோல், படிப்பில், மிகவும் பின் தங்கும் குழந்தைகளை, "பெயில்' செய்கின்றனர். இந்த விவகாரமும், வெளியில் தெரிவது இல்லை. இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், "மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது. வெற்று அறிவிப்புடன் நிற்காமல், அறிவிப்பு, அமல்படுத்தப்படுகிறதா என்பதை, நேரடியாக, களத்திற்கு சென்று ஆய்வு செய்து, விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்

Friday, April 25, 2014

ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன.

இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை

ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2

ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2

ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2

ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2

ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2

ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

 

முதலாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை

ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1

ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1

ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1

ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1

ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1

ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்


    ""பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதோடு கூடவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், மறு மதிப்பீடு அல்லது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் விவரம்: விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் செலுத்த வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும். மறுகூட்டல் எனில், மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தான், விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் முடியும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாள், அதற்கான இணைய தள முகவரி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

Tuesday, April 22, 2014

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வரை பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது 7 ஆயிரம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு அன்று காலை 9, 11 மணி மற்றும் பிற்பகல் 1 மணிக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும். தேர்தல் குறித்த விளம்பரத்தை நாளை மறுநாள் வரை பத்திரிகைகளில் வெளியிடலாம். ஆதார், பாஸ்போர்ட் உள்பட 12 அடையாள அட்டை மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். வன்முறை, பணப்பட்டுவாடாவை  தடுக்க தேர்தலின்போது தடை உத்தரவு அமலில் இருக்கும். பணம் வாங்காமல் மனசாட்சியுடன் வாக்காளர்கள்  தங்களது வாக்கை பதிவு  செய்ய வேண்டும்" என்றார்.