இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 30, 2013

TNOU Term End Results.January 2013

ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைப்பு *இன்று முதல் அமல்

ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. காலை, 8:00 மணியிலிருந்து, இந்த மாற்றம், அமலுக்கு வருகிறது. ரயிலில் பயணம் செய்வதற்கு, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. இவ்வசதியில், இடைத்தரகர்கள் மற்றும் டிராவல் ஏஜன்ட்கள் மூலம், முறைகேடு நடப்பதாக, ரயில்வே அமைச்சகத்திற்கு, புகார் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, பயணிகள் வசதி கருதி, ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, இன்று காலை, 8:00 மணியிலிருந்து அமலுக்கு வருகிறது. நேற்று வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களால், 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயணிகளுக்கான, 120 நாட்கள் பயன்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை.

வெளிநாட்டினர், 360 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இவ்வசதியிலும் எந்த மாற்றமும் இல்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அடையாள அட்டை முறை வருமா? ரயில் டிக்கெட் முன்பதிவு மாற்றம் குறித்து, பயணிகள் தரப்பில் கூறுகையில், "ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைக்கப்பட்டதால், இடைத்தரகர்கள், டிராவல் ஏஜன்ட்களின் முறைகேடு குறையும். ரயில்வேயின் முடிவு, வரவேற்கத் தக்கது' என்றனர். மற்றொரு தரப்பினர் கூறியதாவது: முன்பதிவு நாட்களை குறைத்து இருக்க @வண்டாம். 120 நாட்கள் முன்பதிவு அமலிலிருந்த போது, விழா காலங்களில் பயணம் செய்ய, பல நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து, பயணத்தை உறுதி செய்ய முடிந்தது. முன்பதிவில், முறைகேடு நடப்பதை தவிர்க்க, இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

. முறைகேடுகளை தடுக்க, "தத்கால்' டிக்கெட் முன்பதிவிற்கு , அடையாள அட்டை எண் கேட்பது போல, சாதாரண முன்பதிவிற்கும், அடையாள அட்டை எண்ணை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, கட்டுப்பாடு கொண்டு வரலாம். புதிய நடைமுறையை, மூன்று மாதத்துக்கு ஆய்வு செய்து, பிரச்னை தீராவிடில், பழையபடி, 120 நாட்களாக மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக தொழிலாளர் தினம்-

   தொழிலாளர் இல்லையெனில் உலகம் இயங்காது. எத்தனையோ வித தொழிலாளர்கள் உலகளவில் உள்ளனர். அவர்களுக்கு உரிய உரிமைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம். சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இந்தியா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது. எப்படி வந்தது முன்பெல்லாம், தற்போது உள்ள நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்ததில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாயம், வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தகுதியான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் மூலம் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இப்போராட்டங்கள் தான், தொழிலாளர் தினம் உருவாக காரணமாக அமைந்தன.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு

இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவியுயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Share

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர் அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வில் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களோடு, தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தமிழக அரசின் அந்த அரசாணை செல்லாது என்று கூறி, அதனை ரத்து செய்துள்ளார். அரசுக் கல்லூரிகளில் பயிலும் செவிலியர்களுக்காக மக்களின் பணத்தை அரசு பெருமளவு செலவு செய்கிறது. மக்கள் பணத்தில் பயின்று செவிலியர்களாக தகுதி பெற்ற அவர்களின் சேவை மக்களுக்கு திரும்பக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே, அந்த செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட வேண்டும். தங்களின் சொந்த செலவில் தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள், அரசுப் பணத்தில் அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு இணையாக தங்களையும் கருத வேண்டும் என்று கோருவதை ஏற்க இயலாது.

இதே போன்று வேறொரு வழக்கில் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சற்றும் கவனத்தில் கொள்ளாமலேயே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணாக உள்ளதால், அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இதுவரை லிட்டருக்கு ரூ.4.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் திருப்திகரமாக உள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் (உள்ளூர் வரிகள் தவிர) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.3.18 குறைந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல் டெல்லியில் ரூ.63.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.35 ஆகவும், மும்பையில் ரூ.69.73 ஆகவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 15-ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாயும், அதற்கு முன்னர் 85 பைசாவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு. - இடைக்கால தடை இறுதி தீர்பு வரை தொடர்கி

இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை  படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.  அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்ததுது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இடைக்கால தடை  உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர்.

மெலும் இந்த இடைக்கால தடையானது இறுதி தீர்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டைப் பட்டம் முடித்தவர்களையும் பதவியுயர்வு பட்டியலில் வைக்க விரைவில் கல்வித்துறை ஆணையிடும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது.

Monday, April 29, 2013

2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது

  தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை, 25–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் –2, 26–ந்தேதி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)–2,இளஞ்சிறார் கல்வி –2, 27–ந்தேதி ஆங்கிலம் மொழிக்கல்வி –2, 28–ந்தேதி கணிதவியல் கல்வி –2, 29–ந்தேதி அறிவியல் கல்வி –2, ஜூலை 1–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –2, 4–ந்தேதி கற்கும் குழந்தை, 5–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்–1, 6–ந்தேதி மொழிக்கல்வி( தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) –1, இளஞ்சிறார் கல்வி –1 8–ந்தேதி ஆங்கில மொழிக்கல்வி –1, 9–ந்தேதி கணிதவியல் கல்வி –1, 10–ந்தேதி அறிவியல் கல்வி –1, 11–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –1 அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கும். இவ்வாறு தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.  

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.  (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு A

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

Sunday, April 28, 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டுள்ளது. வரிசை எண்.31-வது இடத்தில் உள்ளதால் இவ்வழக்கு இன்று மாலைக்குள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டம் அக்டோபர் 1–ந் தேதி முதல் அமல் -

கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு மானியம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது சென்னையில் ரூ.398க்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு சிலிண்டருக்கு மானியமாக மத்திய அரசு, 490 ரூபாய் 50 காசுகள் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியா முழுவதும் 14 கோடி வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இதற்கான மானிய தொகையை, மத்திய அரசு அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.

நேரடி மானிய உதவி இந்த மானிய தொகையை, இனிமேல் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியா முழுவதும், 20 மாவட்டங்களில் நேரடி மானிய திட்டத்தை அடுத்த மாதம் (மே) 15–ந் தேதிக்குள் பரீட்சார்த்தமாக அமல்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி கியாஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். மானிய தொகையை பொதுமக்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தி விடும். ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் இந்த திட்டத்தின்படி ஒரு நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய திட்டத்தில், ஒரு இணைப்பு வருடத்துக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை சிலிண்டருக்கு மட்டும் மானிய தொகை கிடைக்கும்.

இந்த திட்டம் அமல்படுத்தப்படும்போது, பொதுமக்கள் கியாஸ் சிலிண்டரை முழு விலை கொடுத்து வாங்க வேண்டும். உதாரணமாக டெல்லியில் தற்போது மானியத்துடன் சேர்த்து ஒரு சிலிண்டரின் விலை 901 ரூபாய் 50 காசுகள். இந்த விலைக்கு நுகர்வோர், கியாஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதற்கான மானிய தொகையை பின்னர் மத்திய அரசு, வங்கி கணக்கில் செலுத்தும்.

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

  அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஏழை வீட்டு குழந்தைகள் என்ற காரணத்தினால் அவர்களின் கல்விக்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அரசின் சார்பில் 4 செட் விலையில்லா சீருடை, புத்தகம், வண்ணப் பென்சில்கள், புத்தகப் பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், காலணிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.கோடீஸ்வரன் கையில் இருந்த மடிக்கணினி தற்போது அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனின் கையிலும் தவழுவதற்கு வழிவகை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா.கல்வியில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது. அரசுப்பள்ளிகளில் 21,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.17,000 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையான கட்டடமைப்புகள், தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து நிறைய கனவுகளுடன் இருப்பார்கள். மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Saturday, April 27, 2013

மே 9-ந்தேதி பிளஸ்-2, மே 31-ல் 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு மார்ச் 27-ந்தேதி முடிவடைந்தது.  மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது.   மே 10-ந்தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கியது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 31-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

Friday, April 26, 2013

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.69.81 கோடி ஒதுக்கீடு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

   ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர். அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க வேண்டும். தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை. அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப் பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வை போல இனி ஆண்டுக்கு 2 தடவை ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவ

யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறையின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால். ‘நெட்’ அல்லது ’ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய அளவிலான ‘நெட்’ தகுதித்தேர்வினை யு.ஜி.சி. நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும்.

ஸ்லெட் தேர்வை நடத்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஸ்லெட்–நெட் தேர்ச்சி தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்லெட் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. யு.ஜி.சி.யின் நெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு திட்டமிட்டபடி தேர்வு தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன் வெளியிடப்படும். நெட் தேர்வு ஆண்டுதோறும் கண்டிப்பாக நடத்தப்படுவதால், அதற்கு தயாராவோர் நன்கு திட்டமிட்டு படிக்க முடியும். ஆனால், ஸ்லெட் தேர்வு அப்படி அல்ல. 2 ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, இஷ்டம்போல் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், ஸ்லெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று மாணவ–மாணவிகளால் யூகிக்கக்கூட முடியவில்லை. இனி ஆண்டுக்கு 2 முறை இந்த நிலையில், இப்பிரச்சினை குறித்து, அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், யு.ஜி.சி. நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வையும் இனிமேல் ஆண்டுக்கு 2 தடவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நெட் அல்லது ‘ஸ்லெட்’ தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டம் பெற்றவர்களாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி தேவையில்லை